- Advertisement -

கனவில் வரக்கூடாதவை

- Advertisement -

கனவு என்பது சில சமயங்களில் சரியான தூக்கம் இன்மையால் ஏற்படக்கூடிய அறிவியல் ரீதியான அசௌகரியம் எனலாம். ஆனால் சில கனவுகள் அப்படி அல்ல! ஒவ்வொரு கனவுகளுக்கும், ஒவ்வொரு விதமான பலன்கள் இருக்கும். அது கனவில் வரக்கூடிய சிலவற்றின் அடிப்படையில் சொல்லப்படக் கூடியது. துரதிஷ்டத்தை தரக்கூடிய, கனவில் வரவே கூடாத சில விஷயங்கள் பற்றிய தொகுப்பினை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

முதலாவதாக கனவில் வரவே கூடாத ஒரு விஷயம் என்றால் அது, மாடு நம்மை துரத்துவது போல கனவுகள் வரக்கூடாது. பசு கனவில் வந்து நம்மை துரத்திக் கொண்டிருந்தால், தீராத வியாதிகள் வரக்கூடும். கோமாதா எனப்படும் இந்த பசு அனைத்து தெய்வங்களின் அம்சம், ஒருசேர பொருந்தியது ஆகும். இது நம்மை விரட்டினால், துரதிர்ஷ்டம் வரும். நன்றாக இருக்கும் நம் உடல் நிலையில் மாற்றம் உண்டாகி சீர்கெடும். கனவில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் மாடுகள் துரத்துவது நல்லதல்ல!

- Advertisement -

பசுமாடு துரத்துவது கண்டங்களை குறிக்கும். அது உங்களை முட்டாமல் இருந்தால், தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்றுவிட்டது என்று எடுத்துக் கொள்ளலாம். பசு மட்டுமல்ல, காளைகள் துரத்துவதும் தோஷங்களை குறிக்கும். காளை நம்மை துரத்தினால், எம வாகனம் நம் கண் முன்னே வந்து சென்றதற்கு சமமாகும். காளைகள் துரத்துவது நம் ஆயுளுக்கு பிரச்சினை வரக்கூடியதாக சொல்லப்பட்டுள்ளது.

ஒருமுறை காளைகளிடமிருந்து தப்பித்து விட்டாலும், மீண்டும் அதே போல அவை செய்வது மரணத்தை சம்பவிக்கும் அறிகுறியாகும். பறவைகள் இறப்பது போல கனவில் கண்டால், வீட்டில் கெட்ட நிகழ்வுகள் நடப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. காகம் இறந்தால் பித்ரு தோஷங்களை குறிக்கும். கனவில் காகம் இறந்து விட்டால், நீங்கள் சரியாக பித்ரு கர்மங்களை செய்யவில்லை என்று அர்த்தம். உங்கள் முன்னோர்களின் ஆன்மா அல்லது சமீபத்தில் உங்கள் வீட்டில் இறந்தவர்களின் ஆன்மா, திருப்தி அடையவில்லை, கர்ம காரியங்களை சரியாக செய்யுங்கள், பிரச்சனை தீரும்.

- Advertisement -

கனவில் புறாக்கள் இறப்பது போல வந்தால், மன அமைதி சீர்கெட்டு விடும். எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வாகனம் ஓட்டும் பொழுது திடீரென புறாக்கள் அல்லது பறவைகள் வந்து மோதுவது போன்றவை உங்களுக்கு அடிக்கடி நடந்தால், துர் சக்திகள் உங்களை துரத்துகிறது என்று அர்த்தம். கழுகு இறந்து போவது போல கனவில் வந்தால், கெட்டதே நடக்கும்.

பூனை கனவில் இறந்தால் சொந்தக்காரர்களுடன் பகை உண்டாக வாய்ப்பு உண்டு. சொந்தக்காரர்களால் துரோகம் செய்யப்படுவீர்கள். உங்கள் முதுகில் குத்துவதற்கு அவர்கள் தயாராக இருப்பார்கள் என்று அர்த்தம். உறவுகளோடு உள்ள பிணைப்புகளை பகையாக மாற்றக் கூடியது, இத்தகைய கனவு என்று சொல்லப்படுகிறது. பல பூனைகள் கனவில் இறப்பது போல வந்தால், மிகவும் மோசமான ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.

இதையும் படிக்கலாமே:
மந்த புத்தி விலக பிள்ளையார் வழிபாடு

பாம்புகள் கனவில் வருவதும் தோஷங்களை குறிக்கிறது. சர்ப்ப தோஷம் இருப்பவர்களுக்கு பாம்பு கனவில் இறப்பது போன்ற நிகழ்வுகள் நடக்கும் வாய்ப்பு உண்டு. பாம்புகள் கனவில் இறந்தால், அதற்கு பரிகாரமாக புற்று கோவில்களில், செவ்வாய்க்கிழமைகளில் பால் ஊற்றி வாருங்கள். இத்தகைய அபசகுணமான கனவுகள் துரதிர்ஷ்டங்களை கொடுத்தாலும், அதிலிருந்து நிவாரணம் பெற, கனவுகள் வந்தவுடன் அருகில் இருக்கும் கோவிலில் நல்லெண்ணெய் தானம் செய்யுங்கள். சனிபகவானுக்கு உரிய நல்லெண்ணையை தானம் செய்வதன் மூலம், துரதிர்ஷ்டம் தரக்கூடிய கனவுகளால் வரக்கூடிய பிரச்சினைகள் நீங்கும் என்பது ஐதீகம்.

சற்று முன்