- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவைகாசி அமாவாசை வழிபாடு

வைகாசி அமாவாசை வழிபாடு

- Advertisement -

ஒவ்வொரு மாதத்திலும் அமாவாசை என்பது வரும் இந்த அமாவாசை தினத்தில் முன்னோர்களை வழிபாடு செய்வதன் மூலம் முன்னோர்களின் அருளை நம்மால் பெற முடியும் என்று நம் அனைவருக்குமே தெரியும். இந்த அமாவாசைகளிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த அமாவாசையாக திகழ்வது ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசை. இந்த மூன்று அமாவாசைகளை தவிர்த்து அதற்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த அமாவாசையாக இருப்பது வைகாசி அமாவாசை. அதிலும் இந்த வைகாசி அமாவாசை திங்கட்கிழமையோடு சேர்ந்து வருகிறது என்பது கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறது. இந்த நாளில் நம்முடைய வாழ்க்கை சிறப்பாக அமைவதற்கும் முன்னோர்களின் கோபம் மற்றும் சாபம் நீங்குவதற்கும் செய்ய வேண்டிய வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வைகாசி அமாவாசை வழிபாடு

நம்முடைய முன்னோர்களை நினைத்து அவர்களுக்காக விரதம் இருந்து அவர்களை வழிபாடு செய்வதற்காக தான் அமாவாசை தினம் என்பது இருக்கிறது. அப்படிப்பட்ட தினத்தில் நம்மால் இயன்ற முறையில் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்வதோடு பிறருக்கு தானமும் தருவதன் மூலம் முன்னோர்களின் அருளை பெற முடியும். ஒருவருக்கு முன்னோர்களின் அருள் இருந்தால்தான் அவர்களுக்கு அனைத்து விதமான சுப காரியங்களும் நடைபெறும் என்றும் குலதெய்வத்தின் அருள் கிடைப்பதற்கும் முன்னோர்களின் அருள் என்பது கண்டிப்பாக வேண்டும் என்றும் கூறப்படுகிறது. அதனால் தான் பலரும் அமாவாசை தினத்தில் முன்னோர்களை வழிபாடு செய்வதை போலவே குலதெய்வத்தையும் வழிபாடு செய்வார்கள்.

- Advertisement -

அந்த வகையில் வைகாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை என்பது மே மாதம் 26 ஆம் தேதி பகல் 11:31 மணிக்கு ஆரம்பித்து 27ஆம் தேதி காலை 9:09 மணி வரை இருக்கிறது. அதனால் முன்னோர்களுக்கு திதி கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மே மாதம் 26 ஆம் தேதி 11:31 மணியிலிருந்து 1:30 மணிக்குள்ளும் அல்லது மாலை 3 மணியில் இருந்து 5:30 மணிக்குள்ளும் கொடுக்கலாம். படையிட்டு முன்னோர்களை வழிபாடு செய்வதற்கும் இந்த நேரம் உகந்த நேரமாகவே கருதப்படுகிறது.

அவ்வாறு படையல் இடும்பொழுது கண்டிப்பான முறையில் பூசணிக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் முன்னோர்களின் கோபத்திலிருந்து நம்மால் விடுபட முடியும். அதேபோல் அமாவாசை தினத்தன்று காக்கைக்கு சாதம் வைக்கும் பொழுது எள் மற்றும் நல்லெண்ணெய் கலந்து வைத்தோம் என்றால் முன்னோர்களால் ஏற்பட்ட தோஷம் முற்றிலும் விலகும் என்று கூறப்படுகிறது. மேலும் மாலை நேரத்தில் குலதெய்வ ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வது நல்ல பலனைத் தரும். அருகில் குலதெய்வ ஆலயம் இல்லை என்பவர்கள் வீட்டிலேயே குலதெய்வத்தை நினைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்ய குலதெய்வத்தின் அருளையும் பெற முடியும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:பணம் சேர மைத்ரேய முகூர்த்த பரிகாரம்

மிகவும் எளிமையான இந்த வழிப்பாட்டு முறையை வைகாசி அமாவாசை தினத்தன்று செய்பவர்களுக்கு குலதெய்வத்தின் அருளும் முன்னோர்களின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்