நாளை வைகாசி பௌர்ணமி – மறக்காமல் இதை எல்லாம் செய்து பலன்களை பெறுங்கள்

vaikasi-pournami
- Advertisement -

தமிழ் மாதங்களில் இரண்டாவதாக வரும் மாதமாக வைகாசி மாதம் இருக்கிறது. சூரியன் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயரும் மாதமே வைகாசி மாதம் எனப்படுகிறது. வைகாசி மாதத்தில் வளர்பிறை காலத்தில் தொடர்ந்தாற் பல சிறப்பான தினங்கள் வருகின்றன. அதில் ஒன்று தான் வைகாசி பௌர்ணமி தினம். இந்த வைகாசி பவுர்ணமி தினத்தன்று நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

இந்த வைகாசி மாத வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று திருமாலின் நான்காவது அவதாரமான ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி தினம் வருகிறது. வைகாசி மாதத்தில் வரக்கூடிய விசாக நட்சத்திரம் மற்றும் பௌர்ணமி தினம் முருகப்பெருமானுக்குரிய ஒரு சிறப்பு வாய்ந்த தினமாக முருக பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. வைகாசி பௌர்ணமி தினம் வருடம் முழுவதும் வரும் மற்ற பௌர்ணமி தினங்களை காட்டிலும் முக்கியத்துவம் வாய்ந்த தினமாக இருக்கிறது.

- Advertisement -

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த வைகாசி பௌர்ணமி தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருந்து, உங்களின் விருப்பத்திற்குரிய தெய்வங்களை வழிபடுவதால் அந்த தெய்வத்தின் பரிபூரண ஆசிகள் உங்களுக்கு கிடைக்கும். மாலை வேளையில் வேனில் தோன்றும் சந்திர பகவானை தரிசித்து வழிபடுவது மிகவும் சிறந்தது. இந்த வைகாசி பௌர்ணமி தினத்தில் திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம், சோளிங்கர், பழனி போன்ற மலை சார்ந்த கோயில்களில் இருக்கும் இறைவனை வழிபட்டு கிரிவலம் மேற்கொள்ளலாம்.

sivapuri-sivan-temple

மற்ற எல்லா தானங்களிலும் விட சிறந்த தானம் அன்னதானம் என்பது நமது நமது முன்னோர்களின் கருத்தாக உள்ளது. எனவே புண்ணியம் மிகுந்த இந்த வைகாசி பவுர்ணமி தினத்தன்று தயிர்சாதம், எலுமிச்சை சாதம், தண்ணீர், பழச்சாறு போன்றவற்றை பக்தர்களுக்கு தானமாக வழங்குவது உங்களின் பாவ வினைகளை போக்கி புண்ணியத்தை உண்டாக்கும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உடல் மற்றும் மனம் சார்ந்த நோய்கள், குறைபாடுகள் நீங்கும். பொருளாதார கஷ்ட நிலைகள் நீங்கி செல்வ சேர்க்கை உண்டாகும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
கோயிலில் எப்படி வணங்கினால் இறைவனின் முழுமையான அருளை பெறலாம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Vaikasi pournami in Tamil. It is also called as Pournami viratham palangal in Tamil or Vaikasi pournami valipadu in Tamil or Pournami valipadu in Tamil or Pournami poojai in Tamil.

- Advertisement -