கோயிலில் எப்படி வணங்கினால் முழு அருளை பெறலாம்

temple

இறைநம்பிக்கை என்பது ஒரு மனிதனின் உடல் மற்றும் மனதில் நேர்மறையான அதிர்வுகளை ஏற்படுத்துகிறது என நவீன விஞ்ஞானிகள் தங்களின் ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர். ஆனால் இந்த எளிய உண்மையை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அறிந்த நமது முன்னோர்கள் மக்கள் அனைவரும் இதை நம்பிக்கையுடன் வழிபட்டு, பிரபஞ்ச சக்தியின் ஆற்றலை பெற்று நல்வாழ்வு வாழ்வதற்காகவே கோயில்கள் மற்றும் வழிபாட்டு முறைகளை ஏற்படுத்தினர். அனைத்திற்குமே ஒரு விதியமைப்பு இருப்பது போல் கோயில்களில் தெய்வங்களை நாம் வணங்குவதற்கும் வருவதற்கு சில முறைகள் இருக்கின்றன. அவை என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

marundeeswarar-sivan-temple

நமது முன்னோர்கள் கண்டு கடைபிடித்த பழைய நடைமுறைகள் மற்றும் அறிவியல் உண்மைகளை நமக்கு விளக்கமாக கூறுவதற்கு எவரும் இல்லாததால், கோயில்களில் சரியான முறையில் வழிபாடு செய்ய தெரியாமல் அதன் காரணமாக இறைவனின் முழுமையான அருள் நமக்கு கிடைக்காமல் அவதியுறுகிறோம்.

தற்காலத்தில் கோயில்களுக்கு செல்லும் பக்தர்கள் பலரும் கோயிலுக்குள் தாங்கள் விரும்பிய இடத்திலெல்லாம் தங்களுக்கு விருப்பமான முறையில் தெய்வங்களை வழிபாடு செய்கின்றனர். இப்படி தெய்வங்களை வழிபடுபவர்களுக்கு எந்த ஒரு நற்பலனும் ஏற்படுவதில்லை.

praying

கோயில்களுக்குள்ளே நாம் நுழையும் போது நமக்கு முதலில் தென்படும் கோயிலின் கொடிமரம் கோயில் தெய்வ வழிபாட்டில் முக்கியமானது. ஒருவர் எக்காலத்திலும் கோயில் கர்ப்பகிரகத்திற்கும், கோயிலின் கொடி மரத்திற்கும் இடையேயான இடங்களில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து வணங்கக் கூடாது என சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதே நேரம் கொடிமரத்திற்கு அப்பால் இருக்கின்ற இடங்களில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து வணங்குவதில் எந்த ஒரு தவறும் இல்லை.

- Advertisement -

இந்தப் பிரபஞ்சம் அனைத்துமே சிவன் என்கின்ற ஆண் சக்தியும், சக்தி என்கின்ற பெண் ஆற்றலும் இணைந்து செயல்படுவதை அறிந்த நம் முன்னோர்கள் யோக கலை தத்துவத்தின் அடிப்படையிலான விதியை கோயிலில் வணங்கும் போது ஆண்களும், பெண்களும் பின்பற்ற அறிவுறுத்தினர்.

namaskaram

அதாவது ஆண்கள் கோயிலில் கொடிமரத்திற்கு முன்பாக வணங்கும் போது உடலின் எட்டு அங்கங்கள் தரையில் படும் படியான அஷ்டாங்க நமஸ்கார வணக்கமும், பெண்கள் தங்கள் உடலின் ஐந்து பாகங்கள் தரையைத் தொட்டு வணங்கும் முறையான பஞ்சாங்க நமஸ்காரம் வணக்கம் செய்து வழிபட வேண்டும் என கூறுகின்றனர். இந்த முறையில் வணங்குவதால் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மருத்துவ ரீதியிலான பல நன்மைகள் ஏற்படுகின்றன. மேலும் கோயிலுக்கு தம்பதிகளாக செல்லும் போது கணவன் அஷ்டாங்க முறையிலும், மனைவி பஞ்சாங்க முறையிலும் ஒரே நேரத்தில் கொடி மர வழிபாடு செய்து வணங்க வேண்டும் என கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:
சித்தர்களை நேரில் காண இம்மந்திரத்தை கூறினால் போதும்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Temple praying procedure in Tamil. It is also called as Valipadu muraigal in Tamil or Kovil valipadu murai in Tamil or Namaskara muraigal in Tamil or Kovil valipaatu muraigal in Tamil.