நாளை வைகாசி தேய்பிறை ஏகாதசி தினம் இவற்றை செய்து மிகுதியான பலன் பெறுங்கள்

perumal

கடும் கோடை வெப்பம் நிலவும் ஒரு மாதமாக வைகாசி மாதம் இருக்கிறது. இந்த வைகாசி மாதத்தில் முருகப் பெருமான் மற்றும் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள், உற்சவங்கள் நடைபெறும். மற்ற எல்லா மாதங்களில் வரும் ஏகாதேசி தினங்களைப் போலவே, வைகாசி மாதத்தில் வருகின்ற ஏகாதசி தினங்களும் பல சிறப்புகளைக் கொண்டதாக இருக்கின்றன. அப்படி இந்த வைகாசி மாதத்தில் வருகின்ற வைகாசி தேய்பிறை ஏகாதசி தினத்தின் மகிமையை குறித்தும், அந்த தினத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ranganathar perumal

வருடம் முழுவதும் வரும் ஏகாதசிகளில் மார்கழி மாதத்தில் வருகின்ற வைகுண்ட ஏகாதசி பிரதானமான ஏகாதசி திதி என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த வைகுண்ட ஏகாதசிக்கு நிகரான ஒரு ஏகாதசி தினமாக இந்த வருதினி ஏகாதசி தினம் இருக்கிறது. மற்ற எந்த ஏகாதசிகளில் விரதம் இருக்க முடியவில்லை என்றாலும் இந்த வருதினி ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து வழிபடுவது மிகவும் சிறப்பானது என வைணவ பிரிவு பெரியோர்கள் கூறுகின்றனர். முற்காலத்தில் மந்தத்தன் என்கிற அரசன் இந்த வருதினி ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்து மிகச் சிறப்பான பலன்களை தன் வாழ்வில் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.

இந்த வருதினி ஏகாதசி தினத்தில் அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு வீட்டின் பூஜை அறையில் இருக்கும் பெருமாள் மற்றும் லட்சுமி படத்திற்கு மஞ்சள் மற்றும் குங்குமம் பொட்டிட்டு, தாமரை பூ சமர்ப்பித்து, கிருஷ்ண துளசி இலைகள் மற்றும் பசும் தயிர் நைவேத்தியம் வைத்து, தூபங்கள் கொளுத்தி, தீபமேற்றி பெருமாள் லட்சுமி ஸ்தோத்திரங்கள், மந்திரங்களை துதித்து வழிபட வேண்டும்.

Perumal

பொதுவாக எந்த ஒரு ஏகாதசி விரத தினத்தன்றும் காலை முதல் இரவு வரை உணவு ஏதும் உண்ணாமல் இருப்பது மிகுந்த பலன்களை தரும். எனினும் தற்காலத்தில் பலருக்கும் வேலை நிமித்தம் மற்றும் உடல்நிலை காரணமாக உணவு ஏதும் உண்ணாமல் இருப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. எனவே அப்படிப்பட்டவர்கள் உப்பு சேர்க்காத எளிமையான உணவுகள் மற்றும் பால், பழங்கள் போன்றவற்றை சாப்பிட்டு இது ஏகாதசி விரதம் மேற்கொள்ளலாம். ஏகாதசி விரத தினத்தன்று நீங்கள் மற்றும் உங்கள் வீட்டிலிருப்பவர்கள் போதை பொருட்கள் உபயோகித்தல், புலால் உணவுகள் சாப்பிடுதல் போன்றவற்றை தவிர்ப்பது மிகவும் சிறப்பான பலன்களை தரும்.

- Advertisement -

Perumal

மாலையில் அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி, தீபமேற்றி வழிபட வேண்டும். பின்பு வீட்டுக்கு திரும்பியதும் பூஜையறையில் பெருமாளுக்கு நைவேத்தியம் வைக்கப்பட்ட துளசி இலைகள் மற்றும் தயிரை குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் சிறிதளவு பிரசாதமாக தந்து, விரதம் மேற்கொண்டவர்களும் அப்பிரசாதத்தை சிறிது சாப்பிட்டு, பெருமாளுக்கான ஏகாதசி விரதத்தை முடிக்க வேண்டும்.

Perumal

வைகாசி மாத தேய்பிறை ஏகாதசி விரதம் அல்லது வருதினி ஏகாதசி விரதம் மேற்கொள்பவர்களுக்கு உடல் மற்றும் மன நலம் சிறக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சியை நிலை எப்போதும் இருக்கும் தம்பதிகளிடையே அன்பு ஒற்றுமை மேலோங்கும் எதிர்பாராத விபத்துக்கள் ஆபத்துக்கள் ஏற்படாமல் காக்கும் தொழில் வியாபாரங்களில் நஷ்டமடைந்தவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால் மீண்டும் லாபங்களை பெறலாம் மகாவிஷ்ணுவின் அருளால் நினைத்த காரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நடைபெறத் தொடங்கும்

இதையும் படிக்கலாமே:
தங்கு தடையின்றி பணவரவு உண்டாக இதை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Vaikasi theipirai ekadasi in Tamil. It is also called as Varuthini ekadasi in Tamil or Vaikasi matham in Tamil or Ekadasi vratham palan in Tamil.