வைகாசி விசாகம் அன்று சொல்ல வேண்டிய முருகர் மந்திரம்

murugan manthiram
- Advertisement -

முருகப்பெருமானுக்குரிய சிறப்பு மிகுந்த தினங்களில் ஒன்றுதான் வைகாசி விசாகம். இந்த வைகாசி விசாகமானது நாளை 22.5.2024 புதன்கிழமை அன்று வருகிறது. இன்றைய தினத்தில் பலரும் முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். இன்னும் சிலரோ காவடி எடுப்பது, பால்குடம் எடுப்பது என்று நேர்த்திக்கடன் செய்வார்கள். அனைத்து விதமான முருகன் கோவில்களிலும் இந்த வைகாசி விசாகமானது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. அப்படிப்பட்ட வைகாசி விசாகத்தன்று நாம் கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் பார்க்க போகிறோம்.

ஆலயத்திற்கு சென்று தான் முருகப்பெருமானை வழிபட வேண்டும் என்ற எந்த ஒரு நிர்ப்பந்தமும் இல்லை. இயன்றவர்கள் ஆலய வழிபாட்டை செய்யலாம். இயலாதவர்கள் வீட்டில் இருக்கக்கூடிய முருகப்பெருமானுக்கு மனதார வழிபாடு செய்தாலே அவரின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும். அனைத்து முருகன் விரதத்திற்கும் எந்த முறையில் நாம் விரதம் இருப்போமோ அதேபோல் காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் இருக்கும் முருகப்பெருமானின் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்து அவருக்கு மலர்களால் அலங்காரம் செய்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து விரதத்தை தொடங்க வேண்டும். நாள் முழுதும் உபவாசம் இருக்க முடியும் என்பவர்கள் இருக்கலாம். இயலாதவர்கள் எளிமையான உணவுகளை உண்டு அல்லது ஒரு வேளை மட்டும் விரதம் இருந்தோ இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். மாலை நேரத்தில் வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய முருகனின் விக்ரகத்திற்கோ அல்லது வேலிற்கோ தங்களால் முடிந்த அபிஷேகப் பொருட்களை வைத்து அபிஷேகம் செய்து கொள்ள வேண்டும்.

பிறகு முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்தமான கந்தர்ப்பத்தை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். கந்தர்ப்பத்தை நெய்வேத்தியமாக வைக்க இயலாதவர்கள் சர்க்கரைப் பொங்கல் அல்லது பாசிப்பயிறு பாயாசம் இவற்றை வைக்கலாம். இதுவும் செய்ய முடியாது என்று நினைப்பவர்கள் பாலில் ஏலக்காய் நாட்டுச்சர்க்கரை கலந்தும் முருகப்பெருமானுக்கு நெய்வேத்தியம் வைக்கலாம்.

- Advertisement -

பிறகு முருகப்பெருமானுக்கு 6 நெய் தீபங்களை ஏற்றி வைத்து முருகப்பெருமானுக்குரிய பாடல்களான கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், கந்தர் அனுபூதி, வேல்மாறல், முருகனின் 108 போற்றிகள் என்று கூறவேண்டும். இவ்வாறு கூறி முடித்த பிறகு வைகாசி விசாகத்தன்று கூற வேண்டிய மந்திரமாக சொல்லக்கூடிய இந்த மந்திரத்தை 18 முறை மனதார கூற வேண்டும். இப்படி கூறிவிட்டு நாம் என்ன வேண்டுதல் வைக்கிறோமோ அந்த வேண்டுதலை கண்டிப்பாக முறையில் முருகப்பெருமான் நிறைவேற்றுவார்.

மந்திரம்

- Advertisement -

விஸாகம் ஸர்வ பூதாநாம் ஸ்வாமிநம் க்ருத்திகா ஸுதம்!
ஸதா பாலம் ஜடாதாரம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்.

பொருள்:
விசாக நட்சத்திரத்தில் அவதரித்தவரும், உலகில் உள்ள அனைவருக்கும் தெய்வமாக திகழ்பவரும், கிருத்திகா தேவிகளால் வளர்க்கப்பட்டவரும், எப்பொழுதும் குழந்தை வடிவமானவரும், ஜடை தரித்தவரும், பரமேஸ்வரரின் குமாரருமான ஸ்ரீ கந்தனை வணங்குகிறேன்.

இப்படி வழிபாட்டை செய்து விட்டு நெய்வேத்தியமாக வைத்த பிரசாதத்தை உண்டு தங்களுடைய விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: சொந்த வீடு கட்ட சொல்ல வேண்டிய மந்திரம்

இந்த வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு அவர்களுடைய வேண்டுதல் நிறைவேறுவதோடு, தொட்ட காரியம் அனைத்திலும் வெற்றி கிடைத்து மேன்மையான வாழ்க்கையை முருகப்பெருமான் அருள்வார்.

- Advertisement -