வைகாசி விசாகம் சிறப்புக்கள் பற்றி தெரியுமா ?

Murugan god
- Advertisement -

வைகாசி மாதமென்பது சூரியனின் கதிர்கள் இப்பூமியை சுட்டெரிக்கும் ஒரு காலமாகும். அதே நேரத்தில் பல ஆலயங்களில் தெய்வீக விழாக்களுக்கு மிக உகந்த மாதம் ஆகும். அதிலும் குறிப்பாக முருகப்பெருமானை வழிபடுவதற்கு ஏற்ற மாதமாகும்.

Lord Murugan Vel

இம்மாதத்தில் வரும் விசாக நட்சத்திர தினம் “வைகாசி விசாகம்” என்ற சிறப்புடன் அழைக்கப்படுகிறது. “விசாகன்” என்ற அரக்கனை இம்மாதத்தில் முருகப்பெருமான் வதம் புரிந்த காரணத்தால் இது முதலில் “விசாக” மாதமென்றும் பிறகு காலப்போக்கில் “வைகாசி” மாதமென மருவியதாக கூறப்படுகிறது.

- Advertisement -

நவகிரகங்களில் குரு பகவானின் அருளும்,சிவனுக்கு மந்திர உபதேசம் செய்து “சிவகுருநாதன்” என்று பெயர்பெற்ற முருகப்பெருமானின் அருளும் நிறைந்த தினம் “வைகாசி விசாகம்”. இத்தகைய சிறப்பான தினத்தில் விரதம் இருந்து, முருகப் பெருமானின் ஆலயங்களுக்குச் சென்று அவருக்கு தேன், இளநீர் போன்றவற்றால் அபிஷேகங்கள் செய்து, அக்கோவிலில் சித்திரா அன்னம், தயிர் அன்னம் போன்றவற்றை தானம் அளித்து, முருக மூல மந்திரங்கள், சண்முகக் கவசம் ஆகியவற்றைப் படித்து முருகனை வணங்க வேண்டும்.

இப்படிச் செய்வதால் நமது மனதிற்குள்ளிருக்கும் தீய எண்ணங்கள் என்ற அரக்கனையும், வெளியில் நமக்கு கேடு நினைப்பவர்களின் பகையையும் அம்முருகப்பெருமான் அழித்து, நமக்கு நல்ல செல்வ வளத்தையும் நற்சந்ததிகளையும் நீண்ட ஆயுளையும் அருள்வார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
கந்த சஷ்டி கவசம்

English Overview:
Here we explained about Vaikasi visakam benefits in Tamil. Vaikasi is a Tamil month and Visagam is a star.If one worship Lord Muruga on Vaikasi visakam day he will all needs.

- Advertisement -