வைகுண்ட ஏகாதேசி அன்று தப்பி தவறியும் கூட இந்த 1 பொருளை சாப்பிடவே கூடாது. நம் குடும்பத்திற்கு மகா பாவம் வந்து சேர்ந்துவிடும்.

aani-ekadasi
- Advertisement -

புது வருடம் பிறந்த உடனேயே பெருமாளுக்கு உரிய விரதமான இந்த வைகுண்ட ஏகாதேசி திருநாள் வரவிருக்கின்றது. இந்த வருடம் வைகுண்ட ஏகாதேசி விரதத்தை எப்படி கடைப்பிடிக்க வேண்டும். விரோதத்தை எப்போது தொடங்கி, எப்போது முடிக்க வேண்டும். வைகுண்ட ஏகாதேசி அன்று சாப்பிடக்கூடாத அந்த ஒரு பொருள் என்ன, விரதம் முடிந்ததும் நாம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய பொருள் என்ன, என்பதைப் பற்றிய விரிவான ஆன்மிகம் சார்ந்த குறிப்புகளை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

வைகுண்ட ஏகாதேசி விரதம் கடைபிடிக்கும் முறை:
இந்த வருடம் வைகுண்ட ஏகாதேசியானது 02.01.2023 ஆம் தேதி வரவிருக்கின்றது. ஆக வைகுண்ட ஏகாதேசி விரதம் கடைபிடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் 01.01.2023 ஆம் தேதி மதியம் சாப்பாட்டை நிறைவாக சாப்பிட்டு விட வேண்டும். 1 ஆம் தேதி இரவு சீக்கிரம் செரிமானம் ஆகக்கூடிய உணவை அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும். 2 ஆம் தேதி அதிகாலை வீட்டின் அருகில் இருக்கக்கூடிய பெருமாள் கோவிலுக்கு சென்று, சொர்க்கவாசல் திறக்க கூடிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம். முடியாதவர்கள் வீட்டிலேயே அதிகாலை வேலை 4.00 மணி அளவில் குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் பெருமாள் படத்திற்கு துளசி மாலை போட்டு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு விரதத்தை தொடங்க வேண்டும்.

- Advertisement -

விரதம் இருப்பவர்கள் 2ஆம் தேதி காலையிலிருந்து வெறும் தண்ணீரை மட்டும் குடித்துவிட்டு விரதம் இருக்கலாம். மனதிற்குள் ‘ஓம் நமோ நாராயணா’ என்ற மந்திரத்தை சொல்லிக்கொண்டே அந்த நாளை நகர்த்த வேண்டும். 2ஆம் தேதி முழுவதும் உபவாசம்.

2 ஆம் தேதி இரவு முழுவதும் கண் விழிக்க வேண்டும். பெருமாளின் புராணக் கதைகள், ராமாயணம், மகாபாரதம், போன்ற கதைகளைப் படித்தோ கேட்டோ அல்லது புராணங்களை திரைப்படமாக போட்டு நேரத்தை கழிக்கலாம். எக்காரணத்தைக் கொண்டும் பொழுதுபோக்கு கேளிக்கை சினிமா பார்த்து வைகுண்ட ஏகாதேசி அன்று இரவு கண் விழிக்க கூடாது. அது நமக்கு புண்ணியத்தை கொடுக்காது.

- Advertisement -

3ஆம் தேதி அதிகாலை வேலை 4:00 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு, பூஜை அறைக்கு வந்து மீண்டும் பெருமாளின் முன்பு நின்று, இந்த விரதத்தை நல்லபடியாக நிறைவு செய்ததற்கு நன்றியை தெரிவித்து விட்டு, வீட்டில் இருக்கும் பெண்கள் சமையல் அறைக்கு சென்று சமைக்கலாம். இப்படி மூன்றாம் தேதி காலை சமைக்கும்போது நெல்லிக்காய், அகத்தி கீரை, சுண்டைக்காய், இந்த மூன்று பொருட்களை சமையலில் சேர்த்துக் கொள்வது சிறப்பு.

இந்த வைகுண்ட ஏகாதேசி நாளில் மட்டும் வாழை மரத்தை சார்ந்த உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு இப்படிப்பட்ட உணவை சமைக்காதீங்க. வாழை இலையில் போட்டு சாப்பிடாதீங்க. மூன்றாம் தேதி காலை சமைத்து முடித்து, இறைவனுக்கு நிவேதனம் வைத்துவிட்டு, நீங்களும் உணவு சாப்பிட்டு உங்களுடைய விரதத்தை முடித்துக் கொள்ளலாம். ஆனால் மூன்றாம் தேதி காலை சாப்பிட்டு விட்டு தூங்க கூடாது. மூன்றாம் தேதி இரவு தான் விரதம் இருப்பவர்கள் தூங்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -

வைகுண்ட ஏகாதேசி அன்று எந்த 1 பொருளை சாப்பிடக்கூடாது?
வைகுண்ட ஏகாதேசி என்றாலே விரதம் இருப்பதுதான் சிறப்பு. முழுசாக இருக்கக்கூடிய அரிசியை வைகுண்ட ஏகாதேசி அன்று சமைத்து சாப்பிட்டால் அது நம்முடைய தலைமுறைக்கு மகா பாவத்தை சேர்த்து விடுமாம். அதாவது பிரம்மஹத்தி தோஷத்திற்கு இணையான பாவத்தை உண்டாக்கி விடும் என்று சொல்கிறது சாஸ்திரம். உங்களால் உணவு எதுவுமே சாப்பிடாமல் விரதம் இருப்பது முடியாத காரியம் என்றால், அவல், ரவை உப்புமா, சப்பாத்தி, பூரி, போன்ற பொருட்களை சாப்பிடலாம்.

ஏகாதசி முழுசாக இருக்கக்கூடிய அரிசியை கட்டாயம் சமைத்து சாப்பிடக்கூடாது. பொதுவாகவே ஒருவர் சாப்பிடுவதை தவிர்த்தால் அது நமக்கு மகா பாவம் என்று சொல்லுவார்கள். ஆனால் இந்த வைகுண்ட ஏகாதேசி அன்று நீங்கள் ஒருவரிடம் போய் இன்று, இந்த அரிசியை, இந்த சாதத்தை சாப்பிடாதீங்க என்று நாம் சொன்னால், அது நமக்கு புண்ணியத்தை கொண்டு வந்து சேர்க்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: Happy new year 2023 wishes in Tamil | புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023

மருந்து மாத்திரை சாப்பிடுபவர்கள் உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது. நீங்கள் எப்போதும் போல உங்களுடைய உணவு பழக்க வழக்கங்களை மேற்கொள்ளலாம். சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். ஆகவே ஆரோக்கியத்திற்கு பிறகு தான் மற்றதெல்லாம். ஆரோக்கிய குறைபாடு உள்ளவர்களுக்கு மட்டும் இது விதிவிலக்கு. இந்த வைகுண்ட ஏகாதேசி அன்று பெருமாளின் அருளை முழுமையாக பெற பிரார்த்தனை செய்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளவும்.

- Advertisement -