காதல் வலை வீசிய கள்ளி – காதல் கவிதை

Love kavithai

என் இதய கள்ளியே..
உன்னை சிறைபிடிக்க எண்ணிய என்னை
உன் கண்களை கொண்டு
காதல் வலை வீசி
காலம் முழுக்க சிறையிட்டாயே..

Kadhal kavithai Image
Kadhal kavithai

இதையும் படிக்கலாமே:
உன்னால் ஒரு மயக்கம் – காதல் கவிதை

காதல் ஒரு மாயமான் அது எப்போது யார் கண்ணில் பட்டு எந்த வேடனை காதல் வலையில் வீழ்த்தும் என்று யாருக்கும் தெரியாது. அப்படி பட்ட காதல் ஒருவருக்கு வருகையில், தான் காதலிப்பவர்க்கும் தன் மீது காதல் உள்ளதா இல்லையா என்ற சந்தேகம் எழும். அதோடு தான் காதலிப்பவர் தன்னை எப்படியாவது காதலிக்க செய்ய வேண்டும் என்பதற்காக எத்தனையோ மெனக்கெடல்கள் இருக்கும்.

சில நேரங்களில் இவர்கள் செய்யும் அனைத்தையும் பார்த்து ரசிக்கும் அவர்களுக்கும் சட்டெனெ காதல் வர துவங்கும். அந்த கணம் முதல் கண்கள் பேச துவங்கும். காதல் வாடை பூக்களில் வீசும். கைகள் நான்கும் உரசிட எங்கும். இரு மனமும் ஒரு மனமாய் மாறி இந்த உலகில் புது காதல் ஜோடி உருவாகும்.

Love Kavithai Image
Love kavithai

அன்னை பற்றிய கவிதைகள், அண்ணன் தம்பி கவிதை, காதல் கவிதைகள் என பல அழகிய தமிழ் கவிதைகளை நீங்கள் இங்கு படிக்கலாம்.