வலம்புரி சங்கு உங்கள் வீட்டில் இப்படி இருந்தால், கட்டாயம் கடன் தான் ஏற்படும்!

sangu
- Advertisement -

பொதுவாகவே சங்கு என்பது மகாலட்சுமியின் அம்சமாக சொல்லப்படும் ஒரு பொருள். அதிலும் குறிப்பாக சில பேர் வலம்புரி சங்கை வீட்டில் வைத்திருப்பார்கள்! வலம்புரி சங்கு கிடைப்பது கொஞ்சம் அரிதான விஷயம்தான். இருப்பினும், இந்த அரிதான பொருளை பல பேர் தங்களுடைய நன்மைக்காக வீட்டில் வாங்கி வைத்தும், மகாலட்சுமியின் அருள் கிடைக்காமல், தொடர்ந்து கஷ்டப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். இதற்கு என்ன காரணம்? வலம்புரி சங்கை எப்படி பயன்படுத்த வேண்டும்? எப்படி பயன்படுத்தக் கூடாது! என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

sangu

மகாலட்சுமி நம் வீட்டில் நிரந்தரமாக தங்க வேண்டும் என்பதற்காக, செய்யப்படும் ஒரு வழிபாட்டுமுறை தான் ‘வலம்புரி சங்கு வழிபாடு’. அதை முறையாக செய்ய முடியும் என்றால் மட்டும், சங்கை நம் வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். முடியாதவர்கள் அதை உரிய இடத்தில் ஒப்படைத்து விடுவது மிகவும் நல்லது. சரி, முதலில் என்ன செய்யக் கூடாது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாமா?

- Advertisement -

வலம்புரிச் சங்கானது எப்போதுமே காலியாக இருக்கவே கூடாது. வலம்புரி சங்கை எக்காரணத்தைக் கொண்டும், மறந்தும் தரையில் வைத்து விடக்கூடாது. தினம்தோறும் வலம்புரி சங்கை முறையாக பராமரிக்க வேண்டும். அதற்கு வெறும் தண்ணீரை கொண்டாவது அபிஷேகம் செய்யவேண்டும். தூசு படிந்தவாறு இருக்கவே கூடாது.

சங்கு

சங்கு என்பது கடலுக்கு அடியில் இருந்து எடுக்கப்படும் பொருள் என்பதால், அதை சரியாக பராமரிக்காமல் விட்டீர்கள் என்றால், அதிலிருந்து கெட்ட வாடை வீச ஆரம்பிக்கும். அந்த வாடை வராத அளவிற்கு பக்குவமாக பராமரிக்க வேண்டியது நம் கையில் உள்ளது. மஞ்சள், குங்குமம் இடாமல் இருக்கக்கூடிய, வலம்புரி சங்கு மிகவும் ஆபத்தானது. கட்டாயம் உங்கள் வீட்டில் கடன் சுமையை அதிகரித்துவிடும்.

- Advertisement -

வலம்புரிச் சங்கின் உள்ளே வாசனை நிறைந்த பன்னீர் கலந்த தண்ணீரை நிரப்பி, அதில் வெற்றிலை, துளசி, பச்சை கற்பூரம், ஏலக்காய், லவங்கம் போன்ற வாசனை மிகுந்த, மகாலட்சுமிக்கு பிடித்தமான பொருட்களை போட்டு வைப்பது வீட்டிற்கு அதிகப்படியான நன்மையை தேடித்தரும்.

vetrilai-pakku-pazham

எப்போதுமே ஒரு தாம்பாளத் தட்டில் மேல், பச்சரிசியில், மஞ்சள் கலந்த அட்சதையை வைத்து, அதன் மேலே, தான் வலம்புரி சங்கை வைக்க வேண்டும். இதுதான் சரியான முறையும் கூட.

- Advertisement -

ஜவ்வாது, கோரோசனை போன்ற வாசனை மிகுந்த பொருட்கள் எல்லாம் இப்போது கடைகளில் கிடைக்கின்றது. அந்த பொருட்களை வாங்கி சங்கின் மேல் தடவி, சுத்தம் செய்வது மிகவும் நல்லது. எப்போதும் அந்த சங்கானது வாசனை நிறைந்ததாக இருக்கும் பட்சத்தில், நம் வீட்டிற்கு மிகவும் நல்லது.

pournami

பௌவுர்ணமி தினத்தன்று, சங்கிற்கு விசேஷ பூஜைகள் செய்தால், நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் பன்மடங்கு பெருகும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. மகாலட்சுமியின் அருள் மட்டுமல்ல, சந்திர பகவானின் அருளையும் பெற்றுத்தர கூடிய சக்தி இந்த வலம்புரிச் சங்கிற்கு உண்டு. சந்திரனுக்ஙகு மகாலட்சுமி தேவி சகோதரி அல்லவா! பவுர்ணமி தினத்தன்று உங்கள் வீட்டில் வலம்புரி சங்கு இருந்தால், அதற்கு பாலபிஷேகம் செய்து, தயிர் சாதத்தை நைவேத்யமாக படைப்பது அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
பிரம்மஹத்தி தோஷத்தை போக்க, இதைவிட சுலபமான பரிகாரம் வேறு இருக்கவே முடியாது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -