சங்கை புதைத்து வைத்து இப்படி வழிபாடு செய்தால் போதும் நாம் கேட்கும் அனைத்தும் இரட்டிப்பாக கிடைக்கும். எதிலும் வெற்றி என்பது நிச்சயிக்கப்பட்ட ஒன்றாக மாறும்.

valampuri sangu valipadu
- Advertisement -

வாழ்வில் வல்லமை தரக்கூடிய அற்புதமான சக்தி நிறைந்தது தான் வலம்புரி சங்கு. வலம்புரி சங்கு ஒரு உயிருள்ள பொருளாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட வலம்புரி சங்கை நாம் பூஜை அறையில் வைப்பதற்கு பதிலாக வேறொரு இடத்தில் வைக்கும்போது அதன் சக்தியை நாம் மடங்கு பெருக்கி அதன் முழு பலனையும் நம்மால் பெற முடியும். வாருங்கள் எப்படி முறையாக இதை செய்வது என்று பார்ப்போம்.

பொதுவாக வலம்புரி சங்கு பூஜை அறையில் வைத்து வழிபடும் முறை அனைவரும் அறிந்த முறையே. அதைவிட மிகவும் சிறப்பாக கருதப்படும் முறையை தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம். அதற்கு நமக்கு முதலில் தேவைப்படுவது கர்ப்பப்பேழை. கர்ப்பப்பேழை என்பது நண்டு வலையின் மண், யானை பாதத்தின் அடியில் இருந்து எடுக்கப்படும் மண் மற்றும் குதிரையின் பாதத்தின் கீழ் இருந்து எடுக்கப்படும் மண். இந்த மூன்று மண்ணும் சேர்ந்தது தான் கர்ப்பப்பேழை.

- Advertisement -

இந்த மூன்று மண்ணையும் சேகரித்து அதில் தண்ணீர் அல்லது பன்னீரை சேர்த்து பிணைந்து வைத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது நாம் வலம்புரி சங்கை எடுத்து அந்த சங்கிற்குள் வெள்ளி அல்லது தங்க நாணயத்தை போட வேண்டும். பிறகு அதில் அதர்வண தெய்வத்தின் குங்குமத்தை போட வேண்டும். அதர்வண தெய்வம் என்பது வராஹி அம்மன், காளியம்மன், பிரித்தியங்கிரா தேவி போன்ற உக்ர தெய்வங்களை குறிக்கக் கூடியது.

பிறகு நாம் அந்த சங்கை மூடும் அளவிற்கு, அந்த மண்ணால் பூச வேண்டும். அடுத்ததாக வீட்டிற்கு வெளியில் (காம்பௌண்டிற்குள்) வடகிழக்கு மூலையில் இரண்டு அடி அகலமும், இரண்டு அடி ஆழத்திலும் ஒரு குழியை தோண்டி அதில் நாம் மூடி வைத்திருக்கும் சங்கை வைக்க வேண்டும். குழி தோண்ட முடியாதவர்கள் , அப்பார்ட்மெண்டில் இருப்பவர்கள் செப்பு பாக்ஸ் அல்லது மண்பானை இவற்றில் ஏதாவது ஒன்றை வாங்கி, அதற்குள் இந்த சங்கை வைத்து மூடி வீட்டிற்குள் வடகிழக்கு மூலையில் வைக்கலாம்.

- Advertisement -

பிறகு ஹோம திரவிய செட் என்று நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அந்த திரவிய செட்டை வாங்கி வந்து அந்த சங்கின் மேல் போட வேண்டும். பிறகு வில்வம் மற்றும் துளசியை போட்டு மண்ணை மூடி விட வேண்டும். இவ்வாறு செய்த பிறகு நாம் தினமும் அந்த இடத்தில் ஒரு விளக்கை ஏற்ற வேண்டும் அல்லது அந்த இடத்தில் நாம் துளசி மாடத்தை பிரதிஷ்டை செய்யலாம். துளசி பூஜையை தினமும் மேற்கொள்ளலாம். அந்த இடம் எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் தினந்தோறும் காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றுபவர்களாக நீங்கள்? அப்படியானால் இதை நீங்கள் நிச்சயம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

மேலும் தினமும் தூபம் காட்ட வேண்டும். கோவில்களில் இருந்து எடுத்து வரப்படும் அபிஷேக தீர்த்தத்தை அந்த இடத்தில் முடிந்த அளவு அவ்வப்பொழுது தெளிக்க வேண்டும். மிகவும் முக்கியமான குறிப்பு பெண்கள் சுத்தம் இல்லாத நேரங்களில் அதன் அருகில் செல்லவே கூடாது. இவ்வாறு நாம் தொடர்ந்து செய்து வர, நம் வீட்டில் செல்வம் மேலோங்கும், நிம்மதி கிடைக்கும், பில்லி சூனியம் ஏவல் போன்ற எதிர்மறை சக்திகள் எதுவும் அணுகாது, நாம் செய்யும் தர்மங்களுக்குரிய பலன்கள் பல மடங்காக பெருகும். நம் வாழ்வில் வெற்றி மேல் வெற்றி அடைவோம். மிகவும் சக்தி வாய்ந்த இந்த வலம்புரி சங்கை நம் வீட்டில் பிரதிஷ்டை செய்து வாழ்வில் எண்ணிலடங்கா நற்பலன்களை பெற்று முன்னேறுவோம் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

- Advertisement -