- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவளர்ச்சி தரும் முருக மந்திரம்

வளர்ச்சி தரும் முருக மந்திரம்

- Advertisement -

மனிதர்களுடைய வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகள் தீருவதற்கு, எதை தின்றால் பித்தம் தெளியும் என்று ஏதேதோ பரிகாரங்களை தேடி ஓடுகின்றோம். தேவையே இல்லாமல் பணத்தை செலவழிக்கின்றோம். யார் என்ன சொன்னாலும் அதைக் கேட்டுக் கொண்டு, அதன் படி நடக்கின்றோம். ஆனால் இறைவழிபாட்டிற்கு உண்டான முக்கியத்துவத்தை மறந்து விடுகின்றோம்.

வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பிரச்சனைகள் வந்தாலும் சரி, முதலில் நிதானத்தோடு இருக்க வேண்டும். நிதானம் தவறும் போது தான் பிரச்சனைகள் பெருசாகிறது. எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி அதற்கு தீர்வு தரக்கூடியது இறைவழிபாடு ஒன்று மட்டுமே. இதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அசுர வேகத்தில் முன்னேற முருகர் மந்திரம்

வாழ்க்கையில் உங்களுக்கு தீராத பிரச்சனைகள் இருக்கிறது, எதைத் தொட்டாலும் அதில் தோல்வி, முன்னேற்றத்திற்கான வழியே இல்லை என்பவர்கள் செய்ய வேண்டிய வழிபாடு முருகன் வழிபாடு. வெற்றி கடவுள் இந்த முருகப்பெருமான்தான். முருகப்பெருமானை மனமுருகி, அவன் நாமத்தை வாய்விட்டு சொல்லி வழிபாடு செய்தாலே போதும். உங்களுடைய கஷ்டங்கள் தீர்ந்துவிடும்.

இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை. முருகருக்கு உண்டான கிழமை. இன்று இரவு 8 மணியில் இருந்து 9 மணி வரை செவ்வாய் ஹோரை இருக்கிறது. வேலையை முடித்துவிட்டு, வீட்டிற்கு வந்து முகம் கை கால்களை கழுவி விட்டு அல்லது குளித்துவிட்டு பூஜையறையில் ஒரு விளக்கு மட்டும் ஏற்றி வைத்து விடுங்கள்.

- Advertisement -

பூஜையறையில் அமர்ந்து கொள்ளுங்கள் உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் துன்பங்கள் எல்லாம் காணாமல் போக வேண்டும் சீக்கிரம் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற பிரார்த்தனையை முருக பெருமானிடம் வைக்க வேண்டும். முடிந்தால் செவ்வரளி பூக்களை வாங்கி வந்து பூஜையறையில் இருக்கும் முருகப்பெருமானின் திருவுருவப்படத்திற்கு போட்டு விடுங்கள்.

ஒரே ஒரு டம்ளர் தீர்த்தத்தை மட்டும் உங்களுடைய கையில் வைத்துக் கொள்ளுங்கள். 1 டம்ளர் சுத்தமான தண்ணீர் அவ்வளவுதான். நீங்கள் சமையலறையில் புழங்கும் பாத்திரத்தையே நன்றாக கழுவி விட்டு அதில் தண்ணீர் ஊற்றி முடிந்தால் அதில் இரண்டு துளசி இலைகளை போடலாம். இல்லையென்றால் அதுவும் தேவையில்லை. இந்த டம்ளர் தண்ணீரை கையில் வைத்துக் கொண்டு ‘ஓம் வேலாயுதாய நமஹ!’ என்ற இந்த ஒரு வரி மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள்.

- Advertisement -

வேலாயுதம் உங்களுக்கு சக்தியை கொண்டு வந்து கொடுக்கும். எதிலும் துணிந்து போராடி வெற்றி அடைய வேண்டும் எண்ணத்தையும் கொண்டு வந்து உங்களிடத்தில் கொடுக்கும். கையில் இருக்கும் தண்ணீருக்கு அதிகப்படியான சக்தி இருக்கிறது. பஞ்சபூதங்களில் ஒன்றான இந்த தண்ணீருக்கு எதையும் சீக்கிரம் கிரகித்துக் கொள்ளும் தன்மையும் இருக்கிறது. நீங்கள் மனதில் என்ன நினைத்து வேண்டுதல் வைக்கிறீர்களோ அதை எல்லாம் அந்த தண்ணீர் உள்வாங்கிக் கொள்ளும்.

இதையும் படிக்கலாமே: இதுவரை கேள்விப்படாத வித்தியாசமான ரெசிபி முட்டைகோஸ் கோதுமை சப்பாத்தி. இந்த சப்பாத்திக்கு பக்க சைட் டிஷ் தேங்காய் சட்னி ரெண்டையும் சேர்த்து எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

மந்திரத்தை சொல்லிவிட்டு வேண்டுதலை முருகனிடம் சொல்லிவிட்டு அந்த தண்ணீரை குடித்து விடுங்கள். அவ்வளவுதான் வேறு எதுவுமே தேவை கிடையாது. உங்களுடைய வாழ்க்கையை நீங்களே போராடி வாழ்வதற்கு உண்டான தன்னம்பிக்கையும் தைரியமும் பிறக்கும். வாழ்க்கையில் சீக்கிரம் முன்னேறுவதற்கு உண்டான வழியையும் அந்த வேலவன் உங்களுக்கு காட்டிக் கொடுப்பான். நம்பிக்கை உள்ளவர்கள் இன்று மாலை இந்த எளிமையான பரிகாரத்தை செய்து பாருங்கள் நிச்சயம் நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்