செல்வம் பெருக வளர்பிறை சதுர்த்தி வழிபாடு

chathurthi poojai
- Advertisement -

தெய்வ வழிபாடுகளில் ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒவ்வொரு நாள் திதி போன்றவை விசேஷமானதாக உள்ளது. அந்த வகையில் விநாயகர் என்றாலே சதுர்த்தி தான் விஷேசம் என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும். அதிலும் மாதந்தோறும் வரும் சங்கடஹ சதுர்த்தி வழிபாடு மிக மிக விசேஷமானது. இந்த சதுர்த்தியானது ஒரு மாதத்தில் இரண்டு முறை வரும். ஒன்று தேய்பிறை சதுர்த்தி மற்றொன்று வளர்பிறை சதுர்த்தி.

பெரும்பாலும் அனைவரும் தேய்பிறை சதுர்த்தியை தான் விசேஷமாக வழிபட்டு வருகிறார்கள். ஆனால் நம்முடைய செல்வ வளம், பெயர், புகழ், அந்தஸ்து அனைத்தும் பெருக வளர்பிறை சதுர்த்தி வழிபாடு மிகவும் பலன் தருவதாக அமையும். அந்த வழிபாட்டை எப்படி செய்வது என்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

செல்வம் பெருக வளர்பிறை சதுர்த்தி வழிபாடு

சதுர்த்தி வழிபாடு என்றாலே மாலை நேரத்தில் செய்வது தான் சிறந்தது. அது எந்த நாளில் வந்தாலும் சரி. இந்த சதுர்த்தி வழிப்பாடும் மாலை 5 மணிக்கு மேல் வீட்டிலே செய்யலாம். அதே போல் இந்த சதுர்த்தி வழிபாட்டை விரதம் இருந்து செய்வது நல்ல பலனை தரும். விரதம் இருந்து வழிப்பட முடியாதவர்கள் எளிமையான உணவை எடுத்துக் கொள்ளலாம். இதற்கு ஒரு கைப்பிடி கொண்டைக்கடலையை முதல் நாளே ஊற வைத்து அல்லது காலையில் ஊற வைத்து விடுங்கள்.

சதுர்த்தி அன்று மாலை வழிபாட்டிற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக அதை சுண்டலாக வேக வைத்து தனியாக எடுத்து வைத்து விடுங்கள். இப்பொழுது பூஜை அறையில் ஒரு கிண்ணத்தில் மஞ்சள் சேர்த்து பன்னீர் ஊற்றி குழைத்து அதில் விநாயகரை பிடித்து வையுங்கள். வீட்டில் எத்தனை விநாயகர் படங்கள் இருந்தாலும் விக்கிரகங்கள் இருந்தாலும் மஞ்சளில் பிடிக்கும் இந்த விநாயகருக்கு மிகவும் சக்தி அதிகம்.

- Advertisement -

மஞ்சளால் பிடித்து வைத்த இந்த பிள்ளையாருக்கு குங்கும பொட்டு வைத்து அருகம்புல் வைத்து மலர் சூட்டி வைத்து விடுங்கள். இப்போது வேக வைத்த சுண்டலை விநாயகருக்கு நெய்வேத்தியமாக வைத்து விடுங்கள். வெற்றிலை பாக்கு தேங்காய் பழம் வைப்பதாக இருந்தாலும் வைக்கலாம் தவறில்லை.

அடுத்து விநாயகருக்கு ஊதுபத்தி ஏற்றி காட்டி விட்டு பிறகு ஓம் கம் கணபதியே நமஹ என்ற இந்த நாமத்தை 108 முறை சொல்ல வேண்டும். இப்படி சொல்லும் வேளையில் உங்களுடைய செல்வ வளம், பெயர், புகழ், வேலை என நீங்கள் வாழ்க்கையில் முன்னேற என்ன தேவையோ அதை விநாயகரிடம் மனதார கேளுங்கள் நிச்சயமாக அதை அருள்வார்.

- Advertisement -

இந்த வேண்டுதலை செய்த பிறகு கற்பூர தீபாராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு நெய்வேத்தியமாக வைத்த கொண்டைக்கடலையை நீங்களும் வீட்டில் உள்ளவர்களும் உண்ணலாம்.

இதையும் படிக்கலாமே: செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வரும் மாசி முதல்நாள் முருகர் வழிபாடு

இந்த முறையில் விநாயகரை வளர்பிறை சதுர்த்தியில் வணங்கி வரும் போது நம்முடைய வாழ்க்கை வளம் பெறும் என்று சொல்லப்படுகிறது. இந்த வழிபாட்டு முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -