- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவளர்பிறை ஏகாதசி பரிகாரம்

வளர்பிறை ஏகாதசி பரிகாரம்

- Advertisement -

புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசை திதி முடிந்த பிறகு வந்திருக்கக்கூடிய இந்த ஏகாதசி திதியில் பெருமாள் வழிபாடு செய்வது நம்முடைய குடும்பத்திற்கு பல கோடி புண்ணியத்தை சேர்க்கும். செய்த பாவங்களுக்கு பெருமாளிடம் மன்னிப்பு கேட்டு வருந்தினாலே, கஷ்டங்களில் பாதி தீரும். அதிலும் குறிப்பாக பத்மநாப சுவாமிகள் அவர்களை நினைத்து, பத்மநாபசுவாமிகள் நாமத்தை மந்திரமாக ஜெபித்தால் கோடான கோடி புண்ணியம் உங்கள் குடும்பத்தை வந்து சேரும்.

புரட்டாசி வளர்பிறை ஏகாதசி வழிபாடு

இன்று மதிய நேரத்திலோ அல்லது மாலை நேரத்திலோ உங்களுடைய கையால் ஒரு உயிரினத்திற்காவது அன்னதானம் செய்ய வேண்டும்.  முடிந்தால் ஏழைகளுக்கு இரண்டு பேருக்கு வயிறார சாப்பாடு வாங்கி கொடுங்கள். அதுவும் முடியாது என்பவர்கள் இன்று பறவைகளுக்கு காகத்திற்கு உங்கள் கையால் ஒரு கை பிடி உலர் திராட்சையை வாங்கி தானமாக போட்டால் 10 தலைமுறை முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

இன்று மாலை பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, பெருமாளுக்கு உங்களால் முடிந்த நெய்வேத்தியம் அல்லது இரண்டு வாழைப்பழங்கள் வைத்துவிட்டு, உங்களுடைய வேண்டுதலை பெருமாளின் பாதத்தில் இறக்கி வையுங்கள். பத்மநாப சுவாமிகள் மனதார நினைத்துக் கொள்ளுங்கள். ‘ஓம் பத்மனாபாயநம’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள்.

பெருமாளுக்கு துளசி இலைகளால் அர்ச்சனை செய்யுங்கள். பிறகு தீப தூவ ஆராதனை காண்பித்து உங்களுடைய வழிபாட்டை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். அவ்வளவுதான். இந்த எளிமையான முறையில் இன்றைய தினம் பெருமாளை வழிபாடு செய்பவர்களுக்கு அந்த எம்பெருமானின் ஆசி முழுமையாக கிடைக்கும். இந்த பிரபஞ்சம் உங்களை வாழ்த்தும். முன்னோர்களின் ஆசிர்வாதமும் கிடைக்கும். குடும்பத்தில் இருக்கும் சுபகாரிய தடைகள் விலகும்.

- Advertisement -

உங்களால் முடிந்தால் இன்று மாலை உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று இரண்டு விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வையுங்கள். அந்த பெருமாள் கோவிலில் இருக்கும் கருடாழ்வாருக்கு விளக்கு போடுங்கள். உங்களுடைய குடும்பத்திற்கு காவலாக கருடாழ்வார் இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனை செய்து கொண்டால்.

இதையும் படிக்கலாமே: புரட்டாசி வளர்பிறை ஏகாதசி பரிகாரம்

கருடாழ்வாரின் ஆசிர்வாதத்தால் உங்கள் குடும்பம் பாதுகாப்பாக இருக்கும். கண் திருஷ்டி கெட்ட சக்தி எதிர்மறை ஆற்றல் போன்ற பிரச்சனையில் இருந்து உங்களை பாதுகாக்க இந்த வழிபாடும் சிறப்பான பலனை கொடுக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறவும்.

சற்று முன்