- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவேதனைகளை நீக்கும் வளர்பிறை பஞ்சமி வழிபாடு

வேதனைகளை நீக்கும் வளர்பிறை பஞ்சமி வழிபாடு

- Advertisement -

பொதுவாக பஞ்சமி என்று உடனேயே நம் நினைவிற்கு வருவது வராகி அம்மனின் வழிபாடுதான். அதுவும் ஆனி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை பஞ்சமி திதி என்பது மிகவும் விசேஷமான ஒன்றாக திகழ்கிறது. காரணம் இந்த தினத்தில் தான் வராகி அம்மன் அவதரித்தார் என்று கூறப்படுகிறது. அதனால் தான் ஆஷாட நவராத்திரி என்று வராகி அம்மனுக்கே உரிய நவராத்திரியை ஆனி மாதத்தில் கொண்டாடுகிறோம். அந்த ஆஷாட நவராத்திரி வரும் சமயத்தில் வரக்கூடிய இந்த வளர்பிறை பஞ்சமி என்பது நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான வேதனைகளையும் கஷ்டங்களையும் தீர்க்கக் கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. அப்படிப்பட்ட வளர்பிறை பஞ்சமி அன்று வாராகி அன்னையை வழிபடும் முறையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வளர்பிறை பஞ்சமி வழிபாடு

வாராகி அம்மனை பற்றி பலரும் பல விதங்களில் கூறியிருந்தாலும், உண்மையான அன்புடன் முழு மனதுடன் வாராகி அம்மனை வழிபட்டோம் என்றால் நம்முடைய வழிபாட்டிற்கு மனம் இறங்கி நாம் வேண்டிய அனைத்தையும் தரக்கூடிய ஒரு அன்பான தாயாகவே அவள் திகழ்கிறாள். அப்படிப்பட்ட வாராகி அம்மனை பல வேண்டுதலுக்காக நாம் வழிபட்டாலும் அவளுக்கென்று உரிய வளர்பிறை பஞ்சமி தினத்தன்று நாம் வழிப்பட்டோம் என்றால் அது மேலும் சிறப்புக் குரியதாகவே திகழ்கிறது,

- Advertisement -

இந்த ஆனி மாத வளர்பிறை பஞ்சமி திதி என்பது நாளை அதாவது 10-07-2024 புதன்கிழமை காலை 8:30 மணி அளவில் தொடங்குகிறது. பொதுவாக பஞ்சமி வாராகி அம்மன் வழிபாடு என்பது இரவில் செய்யக்கூடிய வழிபாடு என்பதால் புதன்கிழமை அன்று இரவு வாராகி அம்மனை நாம் வழிபட வேண்டும். வாராகி அம்மனுக்கு பிடித்தமான கிழங்கு வகைகள், பானகம், இவற்றை வைத்து சிவப்பு நிற மலர்களை வாங்கி அலங்காரம் செய்ய வேண்டும்.

வாராகி அம்மனுக்கு முன்பாக நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வைத்து வாராகி அம்மனின் மந்திரங்களை உச்சரித்தாலே போதும். மந்திரங்கள் தெரியாது என்பார்கள் வாராகித் தாயே போற்றி என்று கூறினாலேயே அந்த தாயானவள் மனமிறங்கி வந்து நம்முடைய வேண்டுதலை செவி கொடுத்து கேட்க ஆரம்பிப்பார். அப்படி வாராகி அம்மனின் மந்திரங்களை முழு மனதோடு கூறிய பிறகு நம்முடைய வேண்டுதல்கள் என்னவோ அதை அம்மனிடம் முன் வைத்தால் கண்டிப்பாக முறையில் அந்த வேண்டுதல்கள் நிறைவேறும்.

- Advertisement -

நாளைய தினம் வரக்கூடிய இந்த பஞ்சமி திதி அன்று வாராகி அம்மனை நாம் வழிபடும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய வேதனைகள் நீங்கும். கஷ்டங்கள் குறைய ஆரம்பிக்கும். கடன் பிரச்சனை தீரும். எதிரிகள் என்ற சொல்லே நம் வாழ்க்கையில் இல்லாத நிலை உண்டாகும். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

இதையும் படிக்கலாமே: தடைகள் நீங்க நினைத்தது நடக்க வழிபாடு

மிகவும் எளிமையான முறையில் அந்த அம்மனுக்கு பிடித்த மலரையும் நெய்வேத்தியத்தையும் வைத்து ஒரே ஒரு தீபத்தை மட்டும் ஏற்றி வைத்து முழு மனதுடன் வழிப்பட்டால் நம் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை உணர முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்