- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவளர்பிறை பஞ்சமி குத்துவிளக்கு வழிபாடு

வளர்பிறை பஞ்சமி குத்துவிளக்கு வழிபாடு

- Advertisement -

நாளைய தினம் 2-2-2025 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, வசந்த பஞ்சமி திதி வரவிருக்கிறது. தை மாதம்  வரும் வளர்பிறை பஞ்சமி திதியில் தான் சரஸ்வதி தேவி அவதரித்ததாக சொல்லப்படுகிறது. ஆகவே சரஸ்வதி தேவியை வணங்க இந்த நாள் மிகவும் சக்தி வாய்ந்த நாள். படிக்கும் பிள்ளைகள் இந்த நாளில் சரஸ்வதி தேவையை கட்டாயம் வணங்க வேண்டும்.

அடுத்தபடியாக மாதம் தோறும் வரக்கூடிய வளர்பிறை பஞ்சமி திதி என்றால் வாராஹி வழிபாட்டிற்கு உகந்த நாள். ஆக மொத்தம் பெண் தெய்வங்களை வழிபாடு செய்ய இதுபோல ஒரு சிறப்பான நாள் நமக்கு அமையாது. இப்போது சியாமளா நவராத்திரி ஆனது நடந்து கொண்டிருக்கிறது. ஜனவரி 30 ஆம் தேதி துவங்கிய அந்த சியாமளா நவராத்திரி, பிப்ரவரி 7ஆம் தேதி வரை, 9 நாள் நடைபெறும்.

- Advertisement -

இந்த சியாமளா நவராத்திரியின் நான்காவது நாளை தான் வசந்த பஞ்சமியாக கொண்டாடுகின்றோம். குளிர்காலமானது நிறைவடைந்து, வசந்த காலம் துவங்கக்கூடிய காலம்தான் தை மாதம். அதிலும் இந்த தை மாத பஞ்சமி திதி வந்த பிறகு, எல்லோர் வாழ்க்கையிலும் வசந்தம் வீசும். நம் பூமியில் வளர்ந்திருக்கும் செடி கொடிகளிலும் பச்சை பசேல் என வசந்தம் வீசும்.

செடி கொடிகளில் உதிர்ந்த இலைகள் எல்லாம் துளிர் விடக்கூடிய காலம் இந்த வசந்த காலம். இந்த நாளிலிருந்து நம்முடைய வாழ்விலும் வசந்தம் வீசவேண்டும் என்றால், நாளைய தினம் நாம் என்ன வழிபாட்டை செய்வது. இதுதான் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவில் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

வசந்த பஞ்சமி வழிபாடு

மிக மிக எளிமையான வழிபாடு. வீட்டில் இருக்கும் பெண்கள் நாளைய தினம், பெண் தெய்வத்தை, பின் சொல்லக்கூடிய முறைப்படி வழிபாடு செய்தால், பெண்களுக்கு அதீத சக்தி கிடைக்கும். குடும்பத்தில் இதுவரை நடக்காத நல்லது நடக்கும். உங்கள் குடும்பத்திற்கு இனி வரக்கூடிய காலகட்டம் வசந்த காலமாக மாறும் என்ற தகவலுடன் இன்றைய பதிவிற்குள் பயணிப்போம்.

நாளை மாலை 6 மணிக்கு உங்களுடைய வீட்டில் ஒரு குத்துவிளக்கு ஏற்றி வையுங்கள். ஒரு வாழை இலையை விரித்து, அதன் மேலே பச்சரிசியை பரப்பி, அதன் மேலே மஞ்சள் குங்கும பொட்டு வைத்து, அலங்கரித்து பூக்களை சுற்றி குத்து விளக்கை வைத்து, ஐந்து முகங்களையும் அழகாக ஏற்றி வைக்கவும். நல்லெண்ணெய் ஊற்றி குத்துவிளக்குகளை ஏற்றினாலே போதும்.

- Advertisement -

கொஞ்சம் வாசனை நிறைந்த குங்குமம், கொஞ்சம் வாசனை நிறைந்த உதிரிப்பூக்களை வைத்து, அந்த குத்துவிளக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். முடிந்தால் உங்கள் வாயால் மகாலட்சுமி போற்றிகளை சொல்லலாம். அப்படி இல்லை என்றால் டிவியிலோ, கைபேசியிலோ மகாலட்சுமி போற்றிகளை ஒலிக்க விடவும்.

மகாலட்சுமி அஷ்டோத்திரத்தை ஒலிக்க விட்டு, பூக்களால் அந்த குத்துவிளக்கு அர்ச்சனை செய்து, உங்களால் முடிந்த ஒரு நெய்வேத்தியம் வைத்து, குடும்பம் நன்மைக்காக மனம் உருகி பிரார்த்தனை செய்து கொண்டால், உங்களுக்கான அத்தனை நன்மைகளையும் அந்த அம்பாள் செய்து கொண்டே இருப்பாள்‌. துர்கா தேவி, சரஸ்வதி தேவி, லட்சுமிதேவி முப்பெரும் தேவியர்களும் சங்கமிக்க கூடியதுதான் குத்துவிளக்கு. நீங்கள் மனதார பஞ்சமி தேவியான வாராகியையும் நினைத்து இந்த பூஜையை செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: 2-2-2025 வேண்டுதல் நிறைவேற பரிகாரம்

நீங்கள் கேட்ட வரங்கள் அத்தனையும் உங்கள் வீடு தேடி வரும். வீடு சுபிட்சம் அடையும். குங்கும அர்ச்சனை, பூக்களால் அர்ச்சனையை செய்து முடித்துவிட்டு, கற்பூர ஆரத்தி காண்பித்து, உங்களுடைய வேண்டுதலை நிறைவு செய்து கொள்ளுங்கள். நாளை குடும்பத்துடன் அமர்ந்து இந்த வழிபாடு எந்த வீட்டில் செய்யப்படுகிறதோ, அந்த வீட்டிற்கு முப்பெரும் தேவியரின் ஆசிர்வாதமும் பரிபூரணமாக கிடைக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்