உங்கள் ராசிப்படி வாழ்வில் தொடர்ந்து நன்மைகள் நடக்க இதை செய்யுங்கள்

Astrology

நமது வாழ்வில் எப்போதும் நன்மைகள் அதிகம் ஏற்பட வேண்டும் என்ற விருப்பம் அனைவரிடமுமே இருக்கும். ஜோதிடத்தில் 12 ராசியினரும் தங்கள் வாழ்வில் தொடர்ந்து நன்மைகளை பெற சில பரிகாரங்கள் கூறப்பட்டிருக்கின்றன. அவை என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

மேஷம்

Mesham Rasi

மேஷம் ராசியினர் தங்கள் வாழ்வில் பல நன்மைகள் தொடர்ந்து கிடைக்க பெறுவதற்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை அல்லது வருடத்திற்கு ஒரு முறை பிறரின் உயிரை காக்க உதவும் ரத்த தானத்தை உங்கள் உடல்பலம் பெற்றிருக்கும் காலம் வரை செய்து வருவது நல்லது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019 படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

ரிஷபம்

- Advertisement -

Rishabam Rasi

ரிஷபம் ராசியினர் தங்களின் வாழ்வில் எப்போதும் நன்மைகள் தொடந்து ஏற்படுவதற்கு உங்களால் முடிந்த போது ஏழை கலைஞர்களுக்கு பொருள் உதவி அல்லது வேறு ஏதேனும் உதவிகள் செய்வது உங்கள் ராசியின் நாயகனாகிய சுக்கிர பகவானின் அருளை பெற்று தரும்.

மிதுனம்

midhunam

மிதுனம் ராசியினர் தங்களின் வாழ்நாளில் எப்போதும் நற்பலன்களை பெறுவதற்கு திருமணம் நடக்க இருக்கும் ஏழை பெண்களுக்கு புடவை மற்றும் சீர்வரிசை பொருட்களை தானமாக அளிப்பது மிகுந்த நற்பலன்களை வழங்கும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.

கடகம்

Kadagam Rasi

கடக ராசியினர் தங்களின் வாழ்நாளில் மிகுந்த நற்பலன்களை பெறுவதற்கு தங்களின் வலது கையின் மோதிர விரலில் தரமான முத்து அல்லது சந்திரகாந்த கல் பதிக்கப்பட்ட, வெள்ளியினால் ஆன மோதிரத்தை எப்போதும் அணிந்திருப்பது நன்மையை தரும்.

சிம்மம்

simmam

சிம்ம ராசியினர் தங்களின் வாழ்வில் எப்போதும் நற்பலன்களை பெறுவதற்கு, தங்களின் தந்தைக்கு உரிய மரியாதையை கொடுத்து, எப்போதும் அவருக்கு பணிவிடைகள் செய்து வந்தால் இந்த ராசியின் அதிபதியான சூரிய பகவானின் அருள் முழுமையாக்க கிட்டும்.

கன்னி

Kanni Rasi

கன்னி ராசியினார் தங்களின் வாழ்வில் எப்போதும் நல்லபலன்கள் கிடைக்க பெண்களை அவமதிக்காமல், அவர்களை நன்றாக நடத்தி வருவதால் உங்களுக்கு தேவர்களின் ஆசீர்வாதங்கள் கிடைத்து உங்கள் வாழ்வில் எதிர்வரும் காலங்களில் பல நன்மைகள் நடக்கும்.

துலாம்

Thulam Rasi

துலாம் ராசியினர் தங்களின் வாழ்நாளின் தொடர்ந்து நற்பலன்கள் கிடைக்க பெறுவதற்கு விலங்கினங்களுக்கு தேவையான உணவு மற்றும் நீரை அளிக்கும் செயலை தொடர்ந்து செய்வதாலேயே ,இந்த ராசியினர் பலரின் வாழ்வில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

விருச்சிகம்

Virichigam Rasi

விருச்சிக ராசியினர் எல்லா காலங்களிலும் நற்பலன்களை தொடர்ந்து பெறுவதற்கு உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகள் தவிர மற்ற நேரங்களில் எந்த ஒரு விஷ ஜந்துக்களை கொல்லவோ, துன்புறுத்தவவோ கூடாது. இதை கடைபிடித்து வந்தால் இந்த ராசியினருக்கு நன்மைகள் பல ஏற்படும்.

தனுசு

Dhanusu Rasi

தனுசு ராசியினர் தங்களின் வாழ்வில் மிகுந்த நன்மைகளை தொடர்ந்து பெறுவதற்கு தங்களுக்கு பாடம் சொல்லி தந்த தங்களின் விருப்பமான ஆசிரியர்களுக்கு ஏதாவது ஒரு விஷேஷ தினத்தின் போது பணத்தை குரு தட்சிணையாக வைத்து, அதனுடன் ஆடையை தானம் செய்ய நன்மைகள் ஏற்படும்.

மகரம்

Magaram rasi

மகர ராசியினர் தங்களின் வாழ்வில் எப்போதும் நற்பலன்களை பெறுவதற்கு செவ்வாய்கிழமைக்களில் முருக பெருமானையும், சனிக்கிழமைகளில் சனிபகவானையும் வழிபட்டு வருவது இந்த ராசியினரின் வாழ்வில் ஏற்படவிருக்கும் துன்பங்களை போக்கி நன்மைகளை தரும்.

கும்பம்

Kumbam Rasi

கும்ப ராசியினர் தங்களின் வாழ்வில் எல்லா காலங்களிலும் நற்பலன்களை அதிகம் பெறுவதற்கு சனிக்கிழமைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அன்னதானம் செய்து புத்தாடைகள் தானம் கொடுக்க எதிர்வரும் காலங்களில் அதிக நன்மைகளை ஏற்படுத்தும்.

தமிழ் பழமொழிகள் படிக்க இங்கு கிளிக் செய்யவும்

மீனம்

Meenam Rasi

மீன ராசியினர் தங்களின் வாழ்வில் எப்போதும் நற்பலன்களை பெறுவதற்கு வேதம் அறிந்த ஏழை பிராமணர்கள் மற்றும் வித்தைகள், கலைகளை கற்று தந்த குரு போன்றோருக்கு வருடத்தில் ஒரு முறை உங்களால் முடிந்த தொகையை தட்சிணையாக கொடுப்பது சிறந்தது.

இதையும் படிக்கலாமே:
உங்கள் ராசி படி புரட்டாசி மாதத்தில் பெருமாளை எப்போது வழிபடுவது நல்லது தெரியுமா ?

இது போன்ற மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்களை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.