உங்கள் ராசி படி புரட்டாசி மாதத்தில் பெருமாளை எப்போது வழிபடுவது நல்லது தெரியுமா ?

thirupadhi-perumal
- Advertisement -

திருப்பதி திருமலையில் வீற்றிருக்கும் வெங்கடாசலபதி, நம் ஜாதகத்தில் குறிப்பிடப்படும் 12 ராசிகளின் அம்சமாக இருக்கிறார். மன்னரை போன்று கம்பீரமாக நின்றிருக்கும் போது “சூரியன்”, பக்தர்களை எப்போதும் தன் பால் ஈர்ப்பதில் “சந்திரன்”, அசுரர்களை வதம் புரியும் போது “செவ்வாய்”, புதியவற்றை படைக்கும் போது “புதன்”, ஞானத்தை வழங்கும் போது “குரு”, செல்வச்செழிப்பில் “சுக்கிரன்”, அனைத்து உயிர்களின் விதியை நிர்ணயிப்பதில் “சனி”, “ஆதிசேடன்” என்கிற பாம்பை படுக்கையாக கொண்டதில் உள்ளடங்கும் “ராகு – கேது” கிரகங்களின் அம்சம் என நவகோள்களின் தன்மையையும் திருமலை ஸ்ரீனிவாசன் வெளிப்படுத்துகிறார். இந்த நவகிரகங்களின் ஆதிக்கத்திற்குட்பட்ட 12 ராசியினரும் பெருமாளுக்குரிய புரட்டாசி மாதத்தில் வழிபட வேண்டிய தினங்களையும், வழிபடும் போது கூற வேண்டிய மந்திரங்களையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

- Advertisement -

Mesham Rasi

மேஷ ராசியினர் புரட்டாசி மாதத்தில் எந்த கிழமையிலும் திருப்பதி வெங்கடாசலபதியை வழிபடுவது சிறந்தது என்றாலும், இந்த ராசிக்குரிய கிழமையான செவ்வாய் கிழமையில் “ஓம் வைஷ்ணவே நமஹ” என்ற மந்திரத்தை துதித்த வாறு வழிபடுவது மிகவும் சிறந்த பலனை தரும்.

ரிஷபம்

- Advertisement -

Rishabam Rasi

ரிஷப ராசியினர் புரட்டாசி மாதத்தில் திருப்பதி பெருமாளை வாரத்தின் எந்த நாளிலும் வழிபடலாம். ஆனாலும் இந்த ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்திற்குரிய கிழமையான வெள்ளிக்கிழமையில் “ஓம் வாசுதேவாயே நமஹ” என்ற மந்திரத்தை துதித்த படி பெருமாளை வழிபடுவது சிறந்தது.

மிதுனம்

- Advertisement -

midhunam

மிதுன ராசியினர் புரட்டாசி மாதத்தில் எந்த கிழமையிலும் வழிபடலாம். இந்த ராசிக்குரிய தினமான புதன் கிழமையன்று திருப்பதி திருமலை கோவிலுக்கு சென்று “ஓம் கேசவாயே நமஹ” என்கிற மந்திரத்தை ஜெபித்த படி பெருமாளை வழிபடுவது நற்பலன்களை கொடுக்கும்.

கடகம்

Kadagam Rasi

கடகம் ராசியினர் புரட்டாசி மாதத்தில் வாரத்தில் எந்த கிழமையிலும் திருப்பதி கோவிலுக்கு சென்று வழிபடலாம். சிறந்த பலனை பெறுவதற்கு இந்த ராசிக்குரிய தினமான திங்கட்கிழமையில் திருமலை கோவிலுக்கு சென்று “ஓம் ராதா க்ரிஷ்ணாய நமஹ” என்ற மந்திரதை உரு ஜெபித்து வழிபட வேண்டும்.

சிம்மம்

simmam

சிம்ம ராசியினர் புரட்டாசி மாதத்தில் வாரத்தின் எந்த நாளிலும் திருமலை கோவிலுக்கு சென்று வழிபடலாம். சிறந்த பலனை பெறுவதற்கு சிம்ம ராசிக்குரிய கிழமையான ஞாயிற்று கிழமையில் “ஓம் ஹரிஹராய பாலமுகுந்தாய நமஹ” என்ற மந்திரத்தை உரு ஜெபித்தவாரே திருமலையாண்டவனை வழிபட வேண்டும்.

கன்னி

Kanni Rasi

கன்னி ராசியினர் புரட்டாசி மாதத்தில் எந்த தினத்திலும் திருப்பதி பெருமாளை வழிபடலாம். பெருமாளை வழிபட்டு சிறந்த பலன்களை பெறுவதற்கு புதன் கிழமையன்று இக்கோவிலுக்கு சென்று “ஓம் ஹ்ரீம் பீதாம்பராய பரமாத்மனே நமஹ” என்ற மந்திரத்தை துதித்த வாறே திருமாலை வழிபட வேண்டும்.

துலாம்

Thulam Rasi

துலாம் ராசியினர் திருப்பதி திருமலை கோவிலுக்கு புரட்டாசி மாதத்தில் வாரத்தின் எந்த நாளிலும் சென்று வழிபடலாம். பெருமாளின் சிறந்த அருள் உங்களுக்கு கிடைக்க இந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்திற்குரிய தினமான வெள்ளிக்கிழமையில் ஓம் ராம் தசாரதாயே நமஹ” என்கிற மந்திரத்தை கூறிய வாறே தரிசித்தால் மிகுந்த நலமுண்டாகும்.

விருச்சிகம்

Virichigam Rasi

விருச்சிகம் ராசியினர் புரட்டாசி மாதத்தில் எந்த கிழமையிலும் தாராளமாக வழிபடலாம். இருந்தாலும் ஸ்ரீனிவாசனை வழிபடுவதால் முழுமையான பலனை பெறுவதற்கு செவ்வாய் கிழமையில் ஓம் நாராயணாய நமஹ என்ற மந்திரத்தை ஜெபித்த வாறு திருமலையப்பனை வழிபடுவது சிறப்பானதாகும்.

தனுசு

Dhanusu Rasi

புரட்டாசி மாதத்தில் தனுசு ராசியினர் திருப்பதி ஏழுமலையனின் கோவிலுக்கு வாரத்தின் எந்த கிழமையிலும் சென்று வழிபடலாம். ஆனாலும் நாராயணனின் முழுமையான அருளையும் நற்பலன்களையும் பெறுவதற்கு இந்த ராசிக்குரிய வியாழக்கிழமையில் ஏழுமலையானை “ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்ரீம் தரணி தராய நமஹ” என்று கூறி வழிபடுவது சிறப்பானதாகும்.

மகரம்

Magaram rasi

மகரம் ராசியினர் திருமலைக்கு புரட்டாசி மாதத்தில் எல்லா நாட்களிலும் சென்று வழிபடலாம். பெருமாளின் விஷேஷ அருளை பெறுவதற்கு இந்த ராசிக்குரிய சனிக்கிழமைகளில் வேங்கடநாதனை வழிபாடும் போது “ஓம் ஸ்ரீம் வாத்சல்யாய நமஹ” எனும் மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்தவாறு வேங்கடவனை சேவிப்பது நல்லது.

கும்பம்

Kumbam Rasi

கும்பம் ராசியினர் புரட்டாசி மாதத்தில் திருமலைக்கு வாரத்தின் எந்த நாளிலும் சென்று வழிபடலாம். திருமாலின் முழுமையான நல்லருள் மற்றும் நற்பலன்களை பெறுவதற்கு இந்த ராசிநாதனாகிய சனிபகவானின் அருள்நிறைந்த சனிக்கிழமையில் “ஓம் ஸ்ரீம் உபேந்திராய அச்சுதாயா நமஹ” மற்றும் “ஓம்
க்லீம் கோவிந்தா கோபாலாய நமஹ” என்ற மந்திரங்களை ஜெபித்த வாறு வணங்க வேண்டும்.

மீனம்

Meenam Rasi

திருமலை ஸ்ரீனிவாசன் கோவிலுக்கு புரட்டாசி வாரத்தின் எந்த நாளிலும் மீன ராசியினர் சென்று வழிபட்டாலும் நன்மையே. மகாவிஷ்ணுவான திருமாலின் நல்லருளை பெறுவதற்கு வியாழக்கிழமைகளில் திருமலை கோவிலுக்கு சென்று “ஓம் ரதங்க சக்ராய நமஹ” நமஹ எனும் மந்திரத்தை ஜெபித்த வாறு பெருமாளை சேவிப்பது சிறப்பானதாகும்.

இதையும் படிக்கலாமே:
கோடீஸ்வர யோகம் யாருக்கு ஏற்படும் அதற்கான பரிகாரங்கள் என்ன

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்

English Overview:
Here we have Puratasi perumal pooja worship details in Tamil.

- Advertisement -