- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநாளை(5/8/2022) விரதம் இருந்து வரலட்சுமி நோன்பை கடைபிடிப்பவர்கள் செல்வம் பெருக ஏற்ற வேண்டிய முக்கிய 3...

நாளை(5/8/2022) விரதம் இருந்து வரலட்சுமி நோன்பை கடைபிடிப்பவர்கள் செல்வம் பெருக ஏற்ற வேண்டிய முக்கிய 3 தீபங்கள் என்னென்ன?

- Advertisement -

வரலட்சுமி விரதத்தின் பொழுது உண்ணா நோன்பு இருந்து பெண்கள் கலசம் அமைத்து அம்பாளை அலங்கரித்து வழிபடுவது வழக்கம். நாளை 5/8/2022 அன்று வெள்ளிக்கிழமையில் முறையாக விரதம் இருந்து பெண்கள் அனைவரும் சேர்ந்து விரதத்தை கடைபிடிப்பார்கள். இத்தகைய நாளில் பெண்கள் மறக்காமல் ஏற்ற வேண்டிய இந்த மூன்று தீபங்கள் என்ன? அதன் பலன்கள் என்னென்ன? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

வரலட்சுமி விரதத்தின் பொழுது கனகதாரா ஸ்தோத்திரம் படிப்பது ரொம்பவும் முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது. மந்திரங்கள் உச்சரிப்பது, புராண கதைகள் படிப்பது போன்ற விஷயங்களை அன்றைய நாளில் பெண்கள் அனைவரும் கூடி செய்வதன் மூலம் இறை சக்தி உங்களுக்கு அதிகரிக்கும். இதனால் எதையும் எதிர்கொள்ளும் தைரியமும், தன்னம்பிக்கையும் இயல்பாக பெண்களுக்கு பிறக்கும் மேலும் குடும்பத்தில் இருக்கும் எவ்வளவோ கஷ்டங்களும் நீங்கி, வறுமை இல்லாத நிலையை உண்டாக்கக்கூடிய இந்த வரலட்சுமி நோன்பு அன்று உப்பு தீபம் ஏற்றி வழிபடலாம்.

- Advertisement -

தீராத கடன் தீருவதற்கும், கொடுத்த கடன் வசூல் ஆவதற்கும் உப்பு தீபம் ஏற்றுவார்கள். ஒரு பெரிய அகல் விளக்கு நிறைய கல் உப்பை நிரப்பி அதன் மீது சிறிய அகல் விளக்கு ரெண்டை எடுத்து ஒன்றின் மீது ஒன்றை வைத்து நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இந்த உப்பு தீபத்தில் நெய்யை தவிர வேறு எதுவும் ஊற்றக்கூடாது. இரண்டு திரிகளை ஒன்றாக திரித்து அகல் விளக்கில் வைத்து தீபம் ஏற்ற வேண்டும். இதை வைக்கும் பொழுது அடியில் ஏதாவது ஒரு வாழை இலை அல்லது பச்சரிசியை பரப்பி ஏற்றலாம்.

இரண்டாவதாக மருதாணி இலை தீபம் ஏற்றி வழிபடலாம். பெண்களின் கைகளில் அழகு சேர்க்கும் இந்த மருதாணி இலை ஆன்மீகத்திலும் பெரும் பங்கு வகிக்கிறது. ராமபிரான் காலத்தில் சீதாதேவிக்கு இந்த மருதாணி இலை நிறையவே உதவியதாக புராணங்கள் குறிப்பிடுகிறது எனவே மருதாணி இலையை ஒரு அகல் விளக்கில் பரப்பி அதன் மீது தீபம் ஏற்றி வழிபடலாம். இதனால் கணவன் மனைவிக்குள் பிரிக்க முடியாத ஒற்றுமை வளரும்.

- Advertisement -

மூன்றாவதாக நெல்லிக்காய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். ஒரு பெரிய நெல்லிக்காய் ஒன்றை எடுத்து அதில் உள்ளே இருக்கும் விதைகள் மற்றும் சதை பகுதியை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் மூடியினுள் நெய் ஊற்றி பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். தீபம் சுடர் விட்டு நின்று மேலே நோக்கி பார்த்தவாறு எறிய வேண்டும். இவ்வாறு மூன்று தீபங்களையும் ஏற்றி வழிபட்டு வந்தால் சகல நன்மைகளும் கிடைக்கும்.

இழந்த பொருட்கள், இழந்த மானம், பெயர், புகழ், பதவி என்று எல்லாமே திரும்ப கிடைக்கும் அற்புதமான பரிகாரமாக இருக்கிறது எனவே தெரியாமல் கீழே யாராவது உப்பு கொட்டி விட்டாலும், அதை உடனடியாக கவனிக்க வேண்டும் ஒருபோதும் உப்பை தவற விடக்கூடாது. இந்த மூன்று விஷயங்கள் மட்டும் அல்லாமல் வெற்றிலை தீபம் ஏற்றுவது அல்லது வேப்பிலை தீபம் ஏற்றுவது ரொம்ப சிறப்பான பலன்களை கொடுக்கும். இந்த விஷயங்களை எல்லாம் சரியாக செய்தால் நல்ல ஒரு ஆற்றல் உடலில் உண்டாகும்.

சற்று முன்