உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தோஷங்கள், கொடிய வியாதிகள் நீங்க இதை துதியுங்கள்

varaha

பாவம் செய்யாத வாழ்க்கையை வாழ்வதென்பது பெரும்பாலான மனிதர்களால் இயலாத ஒன்றாகும். நாம் கடந்த பிறவியிலேயோ, இப்பிறவியிலேயே செய்யும் எத்தகைய ஒரு பாவமும் நமக்கு தோஷமாக மாறி நம் வாழ்வில் பல துன்பங்களையும், பிரச்சினைகளையும் உண்டாக்குகின்றன. உலகை காக்க திருமால் பல அவதாரங்களை எடுத்துள்ளார். அதில் ஒன்றுதான் “ஸ்ரீ வராஹ மூர்த்தி” அவதாரம். அந்த வராக மூர்த்தி ஸ்லோகம் பிடிப்பதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

Varaha Moorthy

வராஹ மூர்த்தி ஸ்லோகம்

ஸுத்தஸ்படிக ஸங்காஸம் பூர்ண சந்த்ர நிபானநம்
கடிந்யஸ்த கரத்வந்த்வம் ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம்யஹம்

தயாநிதிம் தயாஹீநம் ஜீவாநாமார்த்திஹம் விபும்
தைத்யாந்தகம் கதாபாணிம் ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம்யஹம்

பெருமாள் பூமியைக் காக்க எடுத்த மூன்றாவது அவதாரமான வராக மூர்த்திக்கு உரிய சுலோகம் இது இந்த ஸ்லோகத்தை தினமும் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு வராகமூர்த்தி மனதில் நினைத்து 27 முறை அல்லது 108 முறை இந்த ஸ்லோகத்தை தெளிக்க வேண்டும் புதன் சனி மற்றும் மாத ஏகாதசி தினங்களில் பெருமாள் சந்நிதியில் இந்த ஸ்லோகத்தை 108 அல்லது 1008 முறை துதிப்பவர்களுக்கு கிரக மற்றும் ஏனைய தோஷங்கள் நீங்கும் தீராத கொடிய வியாதிகள் சீக்கிரம் தீரும் எத்தகைய எதிரிகளும் ஒழிவார்கள்.

varagar

- Advertisement -

சுத்த ஸ்படிகம் போல் நிர்மலமானவரே, பூர்ண சந்திரனை போல ஒளிபடைத்தவரே, வராஹ மூர்த்தியே நமஸ்காரம். திருக்கரங்களில் சக்கரம், கதையேந்தி அருள்பவரே, கருணையே வடிவானவரே, ஜீவன்களைக் காப்பவரே, ஸ்ரீமுஷ்ணத்தில் திருவருட்பாலிப்பவரே, வராஹ மூர்த்தியே நமஸ்காரம் என்பது மேற்கண்ட வராஹ ஸ்லோகத்தின் பொதுவான பொருளாகும். வராஹ சஸ்லோகம் துதித்து பெருமாளை வழிபடுபவர்கள் வாழ்வில் இன்பங்கள் பல ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
செவ்வாய் கிரக தோஷம் நீங்க இதை துதியுங்கள்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Varaha murthy slokam in Tamil. It is also called as Varaha mantras in Tamil or Perumal manthirangal in Tamil or Ethirigal oliya manthiram in Tamil or Vishnu manthirangal in Tamil or Perumal Slokangal in Tamil.