துயரங்களை தீர்க்கும் வராஹ ஸ்தோத்திரம்

varaha

புராண காலங்களில் ரிஷிகளுக்கும், மனிதர்களுக்கும் கஷ்டம் என்று வந்தால் கடவுள் உடனடியாக ஒரு அவதாரம் எடுத்து அவர்களை காப்பாற்றி விடுவார். ஆனால் இது கலி யுகம். இந்த யுகத்தில் கடவுள் நேரடியாக வந்து நம் பிரச்சனைகளை தீர்ப்பார் என்பது சாத்தியமில்லை. இந்த யுகத்தில் கடவுள் நேரடியாக அவதரிக்க மாட்டார் என்பதை நம் முன்னோர்கள் புராண காலத்திலேயே அறிந்திருக்கிறார்கள். ஆகவே மனிதர்களின் கஷ்டங்களை எப்படி தீர்ப்பது என்று யோசித்த நம் முன்னோர்கள், ஒரு வழியை நமக்கு காட்டிவிட்டு தான் சென்றிருக்கிறார்கள். அது என்னவாக இருக்கும். கடவுளின் அருளை பெறுவதற்காக எழுதப்பட்ட ஸ்தோத்திரங்களும், மந்திரங்களும் தான். புராணகாலத்தில் விஷ்ணு, வராஹ ரூபத்தில் அவதாரம் எடுத்து பூமியில் மனிதர்களை எல்லாம் கஷ்டப்படுத்திய அரக்கனை வதம் செய்தார்.

Varaha Moorthy

இந்தக் கலியுகத்தில் நமக்கு கஷ்டம் ஏற்படும் போதெல்லாம் நாம் என்ன செய்வது? அந்த வராஹ மூர்த்தியின் ஸ்தோத்திரத்தை உச்சரித்தாலே போதும். நமக்கு ஏற்படும் கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்துவிடும் உங்களுக்கான ஸ்லோகம் இதோ.

வராஹ அவதாரம்:தியான ஸ்லோகம்

அபாத்ம ஜாநுதேஸாத் வரகநகநிபம் நாபிதேஸாததஸ்தாந்
முக்தாபம் கண்டதேஸாத்தருணரவிநிபம் மஸ்தகாந் நீலபாஸம்
ஈடே ஹஸ்தேர்ததாநம் ரதசரணதரெள் கட்ககேடே கதாக்யாம்
ஸக்திம் தாநாபயே ச க்ஷிதிதரணலஸத்தம்ஸ்ஷ்ட்ரமாத்யம் வராஹம்.
மூல மந்திரம்
ஓம் நமோ பகவதே வராஹரூபாய பூர் புவஸ்ஸுவஹ பதயே
பூபதித்வம் மே தேஹி தாபய ஸ்வாஹா

Varaha Moorthy

- Advertisement -

மந்திர ஜப பலன்

இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் நம் மனதில் உள்ள கஷ்டங்கள் நீங்கி நாம் மேற்கொள்ளும் செயலில் வெற்றியை அடையலாம்.  குறிப்பாக இந்த மந்திர ஜபத்தினால் அரசியல் துறையில் உயர்ந்த பதவிகள் கிட்டும். புகழ் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே
துளசி அம்மன் ஸ்தோத்திரம்

English Overview:
Here we have Varaha stotram in Tamil. Varaha mantra in Tamil. Varaha slokam in Tamil. Varaha madhiram. Varaha slokas in Tamil.