உங்களை பீடித்திருக்கும் தரித்திரம் நீங்கி, செல்வம் பெருக மந்திரம் இதோ

varahi-amman

பொதுவாக விலங்குகளில் வராகம் எனப்படும் பன்றியை ஒரு கீழான விலங்காக பார்க்கும் மனநிலை பெரும்பாலான மனிதர்களிடம் உண்டு. ஆனால் அத்தகைய விலங்கையும் தெய்வத்தின் ஒரு அம்சமாக பார்க்கும் ஒரு மதம் தான் இந்து மதம். அப்படி பன்றியின் முகமும், பெண் மனித உடலும் கொண்ட ஒரு தெய்வம்தான் “ஸ்ரீ வாராஹி அம்மன்”. மிகவும் இந்த சக்தி வாய்ந்த அம்மன் பலராலும் வழிபடப்படுகிறாள். அந்த வாராஹி அம்மனை வழிபடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்

varahi

ஸ்ரீ வாராஹி அம்மன் மந்திரம்

ஓம் வாம் வாராஹி நம
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம

வராகம் எனப்படும் பன்றியின் உருவம் கொண்ட ஸ்ரீ வாராஹி அம்மனுக்குரிய மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் துதிப்பவர்களுக்கு பல நன்மைகள் உண்டாகும். மேலும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் வாராஹி அம்மன் கோயிலுக்குச் சென்று அம்மனுக்கு மலர்களை சாற்றி, பூசணிக்காயில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி, இம்மந்திரத்தை 108 முறை ஜெபிப்பவர்களுக்கு எத்தகைய கடுமையான எதிர்ப்புகளை, தடைகளையும் வெற்றி கொள்ளும் திறன் உருவாகும். உங்களை பீடித்திருக்கும் தரித்திரங்களும், துஷ்டசக்தி பாதிப்புகளும் நீங்கி செல்வ நிலை உயரும். நீண்ட நாட்களாக இருக்கும் நோய்கள் நீங்க பெறுவீர்கள்.

Varahi amman

இந்து மதத்தில் தெய்வங்களை வழிபட பல வழிமுறைகள் உள்ளன. அதில் ஒன்று தான் தாந்த்ரீக வழிபாடு. இந்த வழிபாட்டில் பல தாந்திரீகர்கள் வழிபடும் ஒரு தெய்வமாக ஸ்ரீ வாராஹி அம்மன் இருக்கிறார். இந்த வாராஹி அம்மனுக்கு பாரதம் மட்டுமன்றி நேபாளம் மற்றும் வங்கதேசம் போன்ற நாடுகளிளும் கோயில்கள் உள்ளன. வராகி அம்மனை உளத்தூய்மையோடு வழிபடுவபவர்களுக்கு ஸ்ரீ வாராகி அம்மன் அனைத்து நன்மைகளையும் வழங்குவாள்.

இதையும் படிக்கலாமே:
அதிக பணம் ஈட்ட மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Varahi amman mantra in Tamil. It is also called as Varahi slokas in Tamil or Varahi amman manthirangal in Tamil or Amman mantras in Tamil.