நீங்கள் அதிகம் பணம் சம்பாதிக்க, யோக வாழ்வு பெற இம்மந்திரம் துதியுங்கள்

kuberan

உலகில் பெற்றோர்களின் பாசத்தை தவிர இலவசம் என்று எதுவுமே இல்லை. அனைத்திற்கும் ஏதாவது ஒரு விலையை மனிதர்களாகிய நாம் நிர்ணயித்திருக்கிறோம். அதிலும் பணத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணத்தை அனைவருமே முறையான வழியில் ஈட்டினாலும், குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதாக இல்லை. அதிகம் செல்வம் ஒருவருக்கு கிடைக்க அவருக்கு யோகம் ஏற்பட வேண்டும். அத்தகைய யோகத்தை தரும் யோக குபேரன் மந்திரம் இதோ.

Kuberan

யோக குபேரன் மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் யோக
குபேர தேவாய நமஹ

money

மனிதர்களுக்கு செல்வத்தை தருபவரும், அஷ்டதிக் பாலகர்களில் வடக்கு திசைக்கு அதிபதியாக இருக்கும் குபேர மூர்த்தியை போற்றும் சக்தி வாய்ந்த மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் தூக்கத்திலிருந்து எழுந்ததும் வடக்கு திசையை பார்த்து அமர்ந்தவாறு, குபேரனை மனதில் தியானித்து 27 முறை துதிக்க வேண்டும். வெள்ளிக்கிழமை காலை, மாலை வேளைகளில் வீட்டில் லட்சுமி, குபேரன் படங்களுக்கு பூக்கள் சாற்றி, தீபம் ஏற்றி இம்மந்திரத்தை 108 அல்லது 108 உரு ஜெபித்து வர உங்கள் வாழ்வில் துரதிர்ஷ்டங்கள் நீங்கி அதிர்ஷ்டங்கள் பெருகும். திடீர் பணவரவு பெற கூடிய யோகங்கள் உண்டாகும். யோக வாழ்வு ஏற்படும். செல்வ சேமிப்பு அதிகரிக்கும்.

kuberan

- Advertisement -

நமது புராணங்களில் செல்வத்திற்கு அதிபதி “குபேரன்” என கூறப்பட்டுள்ளது. நமது மதத்தின் மற்ற எல்லா தெய்வங்களுக்கும் ஏதாவது ஒரு விலங்கு வாகனமாக இருக்கிறது. ஆனால் குபேரமூர்த்தியோ எப்போதும் பணத்தை தேடி அலையும் மனிதனையே தனது வாகனமாக கொண்டிருப்பதாக சில புராண நூல்கள் கூறுகின்றன. அந்த மனிதர்கள் தங்களின் நியாயமான உழைப்பின் மூலம் மிகுந்த அளவு செல்வம் ஈட்டும் யோகங்களை அருள்வார் இந்த யோக குபேரன்.

இதையும் படிக்கலாமே:
விரும்பிய வேலை கிடைக்க

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Yoga kuberan mantra in Tamil. It is also called as Kubera mantras in Tamil or Kubera manthirangal in Tamil or Selvam peruga in Tamil or Adhirstam tharum manthiram in Tamil.