வேண்டுதல் நிறைவேற வாராஹி தீப வழிபாடு

varahi deepam
- Advertisement -

சப்த கன்னிகளில் ஒருவராக திகழக் கூடியவர் வாராகி தாயார். இந்த அம்மனை நாம் மனதார வழிபட நம்முடைய வாழ்வில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தையும் நீக்கி நமக்கு நல்ல வாழ்க்கையை வாரி வழங்கும் அற்புதமான தெய்வம். அப்படிப்பட்ட இந்த அம்மனிடம் நம்முடைய வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்றால் எந்த முறையில் வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

வாராகி அம்மனுக்கு என்று சிறப்புகள் இருக்கின்றன. அந்த சிறப்புகளின் அடிப்படையில் வாராகி அம்மனை சனிக்கிழமை அன்று நாம் வழிபடும் பொழுது நமக்கு அதிகமான பலன் கிடைக்கும். அப்படி நாம் வேண்டிய நியாயமான வேண்டுதல் நிறைவேற சில வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். இந்த வழிபாட்டை மேற்கொள்ளும் பொழுது கண்டிப்பான முறையில் நமக்கு யார் தீங்கு செய்தார்களோ அவர்கள் தண்டனைக்கு உள்ளாக வேண்டும் அல்லது எதிரிகள் அழிய வேண்டும் என்ற வேண்டுதலை வைக்கக்கூடாது.

- Advertisement -

அதற்கு பதிலாக நேர்மறையான வேண்டுதல்களான செல்வ வளம் பெருக வேண்டும், குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும், திருமண யோகம் வேண்டும், வீடு மனை வாசல் வாங்க வேண்டும், தொழில் சிறப்பாக நடைபெற வேண்டும் போன்ற வேண்டுதல்களை வைக்கலாம்.

சனிக்கிழமை அன்று காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் அல்லது இரவு 8:00 மணியிலிருந்து 9:00 மணிக்குள் வாராகி அம்மனுக்கு இந்த வழிபாடு நாம் செய்ய வேண்டும். வீட்டில் வாராஹி தாயாரின் படம் இருந்தால் அந்த படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். வாராகி அம்மனுக்கு சிவப்பு நிற மலர்களை சற்றுங்கள். அடுத்ததாக புதிதாக வாங்கிய இரண்டு அகல் விளக்குகளை எடுத்து அதை சுத்தம் செய்து அதற்கும் சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

கரு நீல துணியை வாங்கிக் கொள்ளுங்கள். அந்த துணியை சதுரமாக நறுக்கி அதற்குள் வெண்கடுகை வைத்து கருநீல நூலால் மூட்டையாக கட்டிக் கொள்ளுங்கள். பிறகு அகலில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி அதில் இந்த வெண்கடுகு மூட்டையை திரியாக வைத்து தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை ஏற்றுவதற்கு முன்பாக அம்மனுக்கு நெய்வேத்தியமாக வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், சர்க்கரை பொங்கல், கற்கண்டு, சர்க்கரைவள்ளி கிழங்கு, இவற்றில் ஏதாவது ஒன்றை வைக்க வேண்டும்.

இந்த தீபத்தை ஏற்றிய பிறகு ஒரு பேப்பரை எடுத்து அதில் உங்களுடைய வேண்டுதல் என்னவோ அந்த வேண்டுதலை எழுதி மடித்து வாராகி அம்மனின் பாதத்தில் வைத்து விட வேண்டும். பிறகு வாராகி அம்மனின் மூல மந்திரம் தெரிந்தவர்கள் அந்த மந்திரத்தை குறைந்தபட்சம் 11 முறை உச்சரிக்க வேண்டும். போற்றிகள் தெரிந்தவர்கள் போற்றிகளை கூறலாம். எதுவும் தெரியாதவர்கள் “ஓம் வாராகி அம்மனே போற்றி” என்ற மந்திரத்தை மனதார உச்சரிக்கலாம். குறைந்தபட்சம் 11 முறையும் அதிகபட்சம் 108 முறையும் உச்சரிக்க வேண்டும். .

இதையும் படிக்கலாமே: சகல தோஷங்களும் விலக சனிக்கிழமை சாம்பிராணி தூபம் போடும் முறை

இந்த முறையில் முழு நம்பிக்கையுடன் வாராகி அம்மனை நினைத்து இந்த தீபத்தை ஏற்றி வழிபடுபவர்களுக்கு கண்டிப்பான முறையில் அவர்களின் வேண்டுதல் நிறைவேறும்.

- Advertisement -