நாளை (25.08.2023) வரலட்சுமி விரதம். அன்றைய தினம் வரலட்சுமி நோன்பு இருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்த விஷயங்களை செய்தால் நம் கஷ்டங்கள் தீர்ந்து நமக்கு நன்மைகள் உண்டாகும்.

varalakshmi poojai
- Advertisement -

சுமங்கலி பெண்கள் கடைபிடிக்கும் விரதங்களில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது வரலட்சுமி விரதம். வரலட்சுமி விரதத்தன்று சுமங்கலி பெண்கள் காலையிலேயே கலசம் வைத்து மகாலட்சுமி தாயாரை அதில் உருவகப்படுத்தி நோன்பு இருந்து வழிபாடு மேற்கொள்வார்கள். சிலர் கலசம் வைக்காமல் மகாலட்சுமி தாயாரின் புகைப்படத்தை வைத்து விரதம் இருந்து வழிபடுவார்கள். சிலர் இந்த வரலட்சுமி நோன்பு என்பதை மேற்கொள்ளாமல் சாதாரணமாக விரதம் இருந்து வழிபடுவார்கள். எப்படி இருந்தாலும் அன்றைய தினம் நாம் எந்த விஷயங்களை கவனத்தில் கொண்டு செயல்பட்டால் நம் கஷ்டங்கள் தீர்ந்து நன்மைகள் உண்டாகும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பெண்கள் தாங்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருக்க வேண்டும் என்பதற்காக வழிபடக்கூடிய வழிபாடு தான் வரலட்சுமி நோன்பு. பலரது இல்லங்களில் அன்று சுமங்கலி பெண்களை வரவழைத்து சுமங்கலி பூஜை செய்து அவர்களுக்கு தாம்பூலம் கொடுப்பார்கள். அப்படி கொடுப்பதன் மூலம் அந்த சுமங்கலி பெண்களில் யாராவது ஒருவர் ரூபத்தில் மகாலட்சுமி தாயார் நம் வீட்டிற்கு வருவார்கள் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

ஆதலால் நாளை யாரேனும் உங்கள் இல்லம் தேடி வந்து ஏதாவது யாசகம் கேட்டால் தவறாமல் கொடுத்து விடுங்கள். வாசலில் சாணம் தெளித்து அரிசி மாவால் கோலம் போட வேண்டும் சாணம் தெளிக்க முடியாதவர்கள் மஞ்சள் தண்ணீரை தெளித்து கோலம் போட வேண்டும் அந்த கோலத்தில் ஒரு தாமரைப் பூவாவது இருப்பது போல் போட வேண்டும்.

அன்றைய தினம் வீட்டில் இருக்கும் அனைவரும் தலைக்கு குளித்து சுத்தமாக இருக்க வேண்டும். பெண்கள் கண்டிப்பான முறையில் மஞ்சள் தேய்த்து குளிக்க வேண்டும். தலையில் பூ வைக்க வேண்டும். தவறான வார்த்தைகள் எதையும் உபயோகப்படுத்தாமல் யாரையும் திட்டாமல் அன்பாக இருக்க வேண்டும். நல்லதை மட்டுமே நினைத்து நல்லதை மட்டுமே பேச வேண்டும். மன மகிழ்ச்சியுடன், சந்தோஷத்துடனும் இருக்க வேண்டும். இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை நாளை உபயோகப்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். முடி வெட்டுவது, நகம் வெட்டுவது போன்றவற்றை ஆண்களாக இருந்தாலும் நாளை செய்யக்கூடாது.

- Advertisement -

மகாலட்சுமி தாயாரை வழிபடுவதற்கு முன்பாக அவருடைய கணவனான மகாவிஷ்ணுவை வழிப்பட வேண்டும் அப்படி செய்தால் தான் மகாலட்சுமி தாயார் தன் கணவருடன் நம் இல்லத்திற்கு வருவார்கள். வீட்டில் கண்டிப்பான முறையில் தூப தீபம் காட்ட வேண்டும். ஏதாவது ஒரு நெய்வேத்தியத்தை வைக்க வேண்டும். நெய் தீபம் ஏற்ற வேண்டும். மகாலட்சுமி தாயாருக்கு பிடித்தமான பொருட்களை வீட்டிற்கு வாங்கி வர வேண்டும்.

இதையும் படிக்கலாமே: நாளை (25.8.23) வெள்ளிக்கிழமை வரலட்சுமி நோன்பு அன்று மறக்காமல் இந்த மூன்று பொருட்களை தாயாருக்கு படைத்தால் கலசம் வைத்து வழிபட்ட பலன் கிடைப்பதோடு, வீட்டில் செல்வ வளம் பெருகி குபேர சம்பத்தும் உண்டாகும்.

இந்த சின்ன சின்ன விஷயங்களில் நாம் கவனம் செலுத்தி மகாலட்சுமி தாயாரை வழிப்பட்டோம் என்றால் அவளின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்பது உறுதி.

- Advertisement -