மகாலட்சுமியை இப்படி கூப்பிட்டு பாருங்கள்! கூப்பிட்ட குரலுக்கு, உங்கள் வீட்டு பூஜை அறையில் நிரந்தரமாக வந்து அமர்ந்து விடுவாள்.

varalakshmi

மகாலட்சுமி நம்முடைய வீட்டில் நிரந்தரமாக தங்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய ஆசையாகவும் இருக்கும். மகாலட்சுமியை கூப்பிட்ட உடனேயே, நாம் கூப்பிட்ட குரலுக்கு, நம் வீட்டில் வந்து அமர வேண்டும் என்றால் தேவியை எப்படி அழிப்பது? பக்தியோடு, பாசத்தோடு, உண்மையான நல்ல எண்ணத்தோடு, மனமுருகி அழைத்தாலே போதுமே. கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து பணமழை பொழிய வைக்கும் குணம் கொண்டவள் தான் லக்ஷ்மி தாயார். ஆக, இனி பரிகாரங்கள் பூஜை புனஸ்காரங்கள் செய்வதற்கு முன்பாக சுயநலமற்ற மனதும், உண்மையான பக்தியும் கொண்டு வேண்டுதலை வைக்க பழகிக் கொள்ளுங்கள்.

யாருமே உண்மையான வேண்டுதலோடு பக்தியை வைக்கவில்லையா? அதனால் தான் நமக்குக் கஷ்டம் வருகிறதா? என்றெல்லாம் உணர்ச்சிவசப்பட வேண்டாம். கடவுளுக்கு யார் மீது அன்பு அதிகமாக இருக்கின்றதோ, அவர்களைத்தான் எம்பெருமான் சோதித்துப் பார்ப்பார் என்று கூட சொல்வார்கள் அல்லவா? நீங்கள் உண்மையான பக்தியோடு இருந்தால், உங்களுக்கு தொடர் கஷ்டங்கள் வந்துகொண்டே இருந்தால், அது உங்களுக்கு கடவுள் வைக்கும் சோதனை என்று வைத்துக்கொள்ளுங்கள். ‘சோதனை தாண்டி வந்தால் தானே சாதனை’ சரி பதிவுக்கு செல்வோமா?

தொழிலில் முன்னேற வேண்டும், அதிகப்படியான பணம் சம்பாதிக்க வேண்டும், வீட்டில் நிம்மதி நிலவ வேண்டும், என்பதற்காகத் தான், நிம்மதியான வாழ்க்கையை தேடி நாம் ஓடிக் கொண்டிருக்கின்றோம். அந்த மகாலட்சுமியை நிரந்தரமாக நம்முடைய வீட்டில் தங்க வைத்துக் கொள்ள, ஒரு சுலபமான தாந்திரீக பரிகாரத்தை தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

one rupee

கோடி ரூபாய் பணம் சேர்க்க வேண்டும் என்றாலும், அதற்கு அடித்தளம் ஒரு ரூபாய் தான். ஒவ்வொரு ரூபாயாக சேர்க்கும் போதுதான் கோடி ரூபாய் பணம் கிடைக்கின்றது. ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து கொள்ளுங்கள். தினந்தோறும் காலை சுத்தமாக குளித்து முடித்துவிட்டு, பூஜை அறையில் அமர்ந்துகொண்டு மகாலட்சுமியின் பாதங்களில் ஒரு சிறிய தட்டை வைத்து விட்டு, அதில் இந்த ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து, அதில் ஒரு துளசி, ஒரு சொட்டு காய்ச்சாத பசும்பால் விட்டு ‘ஓம் வர லட்சுமியை நமஹ’ என்ற மந்திரத்தை 11 முறை உச்சரித்து விட்டு அதன் பின்பு அந்த ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து உங்கள் பர்சிலோ அல்லது பாக்கெட்டிலோ வைத்துக்கொண்டு வெளியே கிளம்புங்கள்.

- Advertisement -

நீங்கள் தினந்தோறும் தொழில் செய்து வருமானம் சம்பாதிப்பவர்கள் ஆக இருந்தால், அந்த ஒரு ரூபாய் நாணயத்தை கொண்டுபோய் உங்கள் கெல்லாபெட்டியில், முதல் வருமானமாக போடுங்கள். வரலட்சுமி உங்களுக்கு வரவை, வரமாக கொடுப்பாள் என்பதில் சந்தேகமே கிடையாது. நீங்கள் மாத சம்பளம் வாங்குபவராக இருந்தால் அந்த ஒரு ரூபாய் நாணயத்தை உங்கள் அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லலாம். அதிர்ஷ்டம் உங்களுடனே இருக்கும். நீங்கள் செய்யக்கூடிய வேலை அனைத்தும் வெற்றியாகவே முடியும். உங்களுடைய முன்னேற்றத்திற்குக் இந்த 1 ரூபாய் நாணயம் நிச்சயம் வழிகாட்டும்.

தினம்தோறும் அந்த 1 ரூபாய் நாணயத்தை பத்திரமாக மீண்டும் வீட்டுக்கு கொண்டு வந்து, ஒரு உண்டியலில் சேமிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். இறுதியாக ஒரு குறிப்பிட்ட தொகை வந்தவுடன், தெய்வீக பணிக்காக அந்த பணத்தை செலவழிப்பது நமக்கு புண்ணியத்தையும் சேர்க்கும். பல நன்மையை கொடுக்கும்.

lakshmi-cash

தெய்வத்திற்கு செலவு செய்வதாக இருந்தாலும் செய்யலாம். அல்லது அந்த நாணயங்களை தான தர்ம காரியத்திற்கு பயன்படுத்தலாம். உங்களுடைய அதிர்ஷ்டம் எக்காரணத்தைக் கொண்டும் உங்களை விட்டு போகவே போகாது. நம்பியவர்கள் நம்பிக்கை உள்ளவர்கள் வரலட்சுமியை வேண்டி இப்படி முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்கு இந்த பரிகாரம் அதிர்ஷ்டம் கொடுப்பதாக இருந்தால் தினம்தோறும் இந்த பழக்கத்தை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். எல்லோருக்கும் வரலட்சுமி, வரங்களை அள்ளித் தர வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
நாளை வளர்பிறையில், மூன்றாம் பிறை தரிசனத்தை பார்த்து விட்டு, இதை செய்யுங்கள்! நிச்சயம் வளர் பிறை நிலவு போல, உங்களின் செல்வ வளமும் வளர்ந்து கொண்டே இருக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.