வரலட்சுமி நோன்பு முடிந்து சுமங்கலி பெண்களுக்கு எதை கொடுத்து அனுப்ப வேண்டும்? எதைக் கொடுக்கக் கூடாது?

varalakshmi-thamboolam
- Advertisement -

அன்னை பார்வதி தேவி மகாலட்சுமியை நினைத்து முதல் முறையாக இருந்த இந்த விரதம் வரலட்சுமி விரதம் என்று கூறப்படுகிறது. மகாலட்சுமியே தன் பக்தர்களுக்கு இந்த விரத முறையை எப்படி அனுஷ்டிக்க வேண்டும்? என்று எடுத்து கூறியுள்ளார். தன்னை வணங்கும் பக்தர்களுக்கு மன நிறைவையும், மகிழ்ச்சியையும், தீர்காயுளையும், அள்ள அள்ள குறையாத செல்வத்தையும் கொடுப்பவள் மகாலட்சுமி.

varalakshmi-viratham1

பெரும்பாலான தென்னிந்திய மக்கள் மட்டுமல்லாது, உலகின் பல்வேறு இடங்களிலும் லக்ஷ்மி பூஜை என்று மகாலட்சுமியை இந்நாளில் கொண்டாடி வருகின்றனர். வரலட்சுமி பூஜை அன்று சுமங்கலிப் பெண்களை அழைத்து பூஜையில் கலந்து கொள்ள செய்வார்கள். அப்படி கலந்து கொள்ளும் சுமங்கலி பெண்களுக்கு என்ன கொடுக்க வேண்டும்? என்ன கொடுக்கக் கூடாது? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

- Advertisement -

வரலட்சுமி விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் கட்டாயம் அருகிலிருக்கும் பெண்கள், உறவினர் அல்லது உங்களுக்கு தெரிந்த சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து கொண்டாடுங்கள். அப்படி நீங்கள் அழைக்கும் சுமங்கலிப் பெண்கள் ஒற்றைப்படை எண்ணிக்கையில் இருப்பது அவசியம். அதாவது மூவர், ஐவர் அல்லது 7, 9 ஆகிய எண்ணிக்கைகளில் சுமங்கலிப் பெண்களை அழையுங்கள். பூஜையில் கலந்து கொள்ளும் பெண்கள் உங்களையும் சேர்த்து ஒற்றைப்படையில் இருக்க வேண்டும்.

thambulam

மகாலட்சுமியை வீட்டு வாசலில் இருந்து உள்ளே கொண்டு வரும் நாள் முதல் மூன்று நாட்கள் வரை பூஜை முறையை தவறாமல் கையாளுவது நல்லது. மூன்றாம் நாள் புணர் பூஜை செய்து அமைத்த அலங்காரத்தை கலைக்க வேண்டும். எனவே வியாழன் கிழமை ஆகிய இன்று நீங்கள் மகாலட்சுமியை வீட்டிற்கு உள்ளே அழைத்து வந்திருந்தால் சனிக்கிழமை கலைத்து விடுங்கள். வெள்ளிக்கிழமை அழைப்பதாக இருந்தால் ஞாயிறு அன்று பூஜைகளை முடித்து பின்னர் கலைக்கலாம். பூஜைக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு கட்டாயம் தாம்பூலம் கொடுக்க வேண்டும். தாம்பூலம் கொடுக்கும் பொழுது அவர்களுடைய கைகளால் குங்குமத்தை வாங்கி உங்களுடைய நெற்றியில் வைக்க சொல்லுங்கள். ஆனால் சுமங்கலி பெண்களை வழி அனுப்பும் பொழுது நீங்கள் அவர்களுக்கு நெற்றியில் குங்குமம் இட்டு வழி அனுப்ப கூடாது.

- Advertisement -

தாம்பூலத்துடன் குங்குமச்சிமிழ் கொடுப்பது கூடுதல் சிறப்பு. ரவிக்கைத்துணி, வெற்றிலை, பாக்கு, பூ, பழம், மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு ஆகியவற்றுடன் குங்கும சிமிழையும் சேர்த்துக் கொடுங்கள். பின்னர் எப்பொழுதும் வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களை எதுவும் சாப்பிடாமல் அனுப்பக்கூடாது. ஒரு வேளை சாப்பாடு போட்டு, பூஜையில் வைத்த நைவேத்திய பிரசாதத்தை கொடுத்து அவர்கள் வயிறு குளிர நிறைவடையச் செய்ய வேண்டும். நீர் மோர், பானகம், பாயசம் ஆகியவற்றையும் கொடுக்கலாம். அவர்கள் மனம் குளிர்ந்து, நிறைவான வயிற்றுடன் தான் உங்கள் வீட்டில் இருந்து அவர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டும்.

eating-food

வரலட்சுமி நோன்பு அன்று அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். வீட்டில் நடக்கும் பிரச்சனைகள், மனதில் இருக்கும் குழப்பங்களை எல்லாம் அன்றைய நாளில் ஓரமாக ஒதுக்கி வைத்து விடுங்கள். பெண்கள் அனைவரும் சேர்ந்து மகாலட்சுமியை இன் முகத்துடன் வரவேற்று, பூஜைகள் செய்து, அவளுக்குரிய மந்திரங்களையும், பாடல்களையும் பாடி மகிழ்வித்து, நீங்களும் மகிழ்ந்து, விரதத்தை நிறைவு செய்தால், நீங்கள் கேட்ட வரமெல்லாம் கேட்டபடியே கிடைக்கும். மஹாலக்ஷ்மிக்கு ஏலக்காய் மாலை, கிராம்பு சாற்றுவது கூடுதல் பலன்களை கொடுக்கும்.

varalakshmi3

உண்ணா நோன்பு இருக்க முடிந்தவர்கள் நோன்பு நாளான வெள்ளிக் கிழமையில் நைவேத்திய பிரசாதத்தை தவிர எதுவும் எடுத்துக் கொள்ளாமல் விரதம் இருக்கலாம். சாப்பிடாமல் விரதம் இருக்க முடியாதவர்கள் எளிமையான திரவ உணவுகளை எடுத்துக் கொண்டு விரதமிருந்து வழிபடலாம். இது அவர்களின் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தது என்பதையும் கட்டாயம் கவனத்தில் கொள்ளுங்கள்.

- Advertisement -