விநாயகர் சதுர்த்தி அன்று இந்த 21 இலைகளை வைத்து விநாயகருக்கு அர்ச்சனை செய்யுங்கள். வேண்டிய வரங்கள் உடனே கிடைக்கும்.

vinayagar
- Advertisement -

ஓம் எனும் ஓங்கார வடிவமாக விளங்கும் விநாயக பெருமான் அவதரித்த தினமே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் அனைவரும் சிறப்புடன் கொண்டாடும் முக்கியமான விழாக்களில் ஒன்று விநாயகர் சதுர்த்தி. விநாயகர் சதுர்த்தியன்று விரதம் இருந்து களிமண்ணால் செய்த விநாயகரை வீட்டில் வைத்து, படையலிட்டு இருபத்தியோரு இலைகள் கொண்டு விநாயகருக்கு பூஜை செய்வதன் மூலம் நமக்கு வேண்டிய வரத்தை உடனே பெற முடியும். இவ்வாறு பூஜை செய்ய பயன்படும் 21 இலைகள் என்ன என்பதனைப் பற்றியும் அவற்றினால் உண்டாகும் பலன்கள் என்ன என்பதை பற்றியும் இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

vinayagar1

விநாயகர் சதுர்த்தி சிறப்பு:
விநாயகர் சதுர்த்தி தொடங்கிய நாளில் இருந்து வரும் ஒன்பது நாட்கள் வரை விநாயகர் நவராத்திரி என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வட மாநிலங்களில் 11 நாட்கள் ஆனந்த சதுர்த்தி விழாவாகக் கொண்டாடுகின்றனர். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த விநாயகர் யானை முகமும், மனித உடலும், நான்கு கரங்களும், பெருத்த வயிறும், முறம் போன்ற காதுகளும் கொண்டு அருளே வடிவமாக காட்சி தருகிறார். இத்தனை சிறப்புமிக்க விநாயகரை விநாயகர் சதுர்த்தியன்று இந்த இருபத்திஓரு இலைகள் கொண்டு பூஜை செய்வதால் மிகவும் சிறப்பு வாய்ந்த பலன்களைக் கொடுக்கும்.

- Advertisement -

21 இலைகள் மற்றும் அவற்றின் பலன்கள்:
மாசி, வில்வம், பருஹதி, ஊமத்தை, எருக்கு, நாயுருவி, இலந்தை, துளசி, அரளி, மாவிலை, சூரியகாந்தி, மருவு, நொச்சி, மாதுளை, ஜாதிக்காய், நாரிசங்கை, வன்னி, அரக்கு, நுணா, தேவதாரு, அரச இலை முதலான 21 இலைகள் விநாயகர் வழிபாட்டுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தவைகளாக உள்ளன.

arugampul-vinayagar

முதற்கண் கடவுளான விநாயகரை வழிபட்ட பின்னரே அனைத்து காரியங்களும் துவங்க வேண்டும். அவ்வாறு விநாயகர் அருளை பெற இந்த 21 இலைகள் வைத்து பூஜை செய்வதன் மூலம் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி விநாயகர் புராணம் கூறுகிறது.

- Advertisement -

21 இலை பூஜை பேறுகள்:
தர்மம், பொருள், இன்பம், பெருந்தன்மை, முக லட்சணம், சௌபாக்கியம், கல்வி, நல்வாழ்வுடன் கூடிய மோட்சம், வீரம், வெற்றி, அன்பு, புகழ், நல்ல குடும்பம், நுண்ணறிவு, நல்ல சந்ததி, வாக்கு சித்தி, சாந்தம், அடக்கம், அசுபங்கள் அகலும், சோகம் மறையும், பில்லி சூனியம் நீங்கும். ஆகிய 21 வரங்களை இந்த 21 இலை பூஜை நமக்கு அளிக்கிறது.

vinayagar2

இந்த விநாயகர் சதுர்த்தியன்று நீங்களும் விநாயகர் பூஜையில் 21 இலைகளை பயன்படுத்தி பூஜை செய்து உங்களுக்கு வேண்டிய வரங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். இந்த இலைகள் ஒவ்வொன்றிற்கும் அதற்கென தனி பலன்கள் இருக்கின்றன. எனவே இவ்வாறான இலைகள் அனைத்தும் கிடைக்கவில்லை என்றாலும் கிடைக்கப்பெறும் ஏதேனும் சில இலைகளை வைத்து 21 முறை கணபதியின் திருநாமத்தை உச்சரித்து விநாயகர் பூஜை செய்து விநாயகர் சதுர்த்தியை சிறப்புடன் கொண்டாடி மகிழுங்கள்.

- Advertisement -