வரவேண்டும் நீயே – சாய் பாபா பாடல்

Sai baba tamil song

வரவேண்டும் நீயே சாயி பாபா என்றோ தொடங்கும் சாய் பாபா பாடல் கீழே இணைக்கப்பட்டுள்ளது. அற்புதமான இந்த பாடலை பாடியவர் உன்னிமேனன். இந்த பாடலை எழுதியவர் செங்கதிர்வேலன். இந்த பாடலுக்கு பிரதீப் இசை அமைத்துள்ளார். கேட்க கேட்க தெவிட்டாத இந்த சாய் பாபா பாடல் மற்றும் சாய் பாபா பாடல் வரிகள் கீழே உள்ளன.

சாய் பாபா பாடல் :

சாய் பாபா பாடல் வரிகள் :

வரவேண்டும் நீயே சாயி பாபா
வரம் வேண்டினோமே சாயி பாபா
தரவேண்டும் நீயே சாயி பாபா
கரம் குவித்தோமே சாயி பாபா
ஹரே ராம ராமா சாயி ராமா, ஹரே ராம ராமா சாயி ராமா
ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா, ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா

குறை ஏதும் இல்லா சாயி நாதா
குழல் ஊதும் கண்ணா சாயி நாதா
பரந்தாமன் நீயே சாயி நாதா
பணிந்தோமே உன்னை சாயி நாதா
ஹரே ராம ராமா சாயி ராமா, ஹரே ராம ராமா சாயி ராமா
ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா, ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா

- Advertisement -

அறியாமை போக்கும் சாயி பாபா
அடியாரை காக்கும் சாயி பாபா
புரியாத புதிரே சாயி பாபா
புலனாகும் அறிவே சாயி பாபா
ஹரே ராம ராமா சாயி ராமா, ஹரே ராம ராமா சாயி ராமா
ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா, ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா

எளியோனாய் வந்த சாயி நாதா
இருள்போக்கும் சுடரே சாயி நாதா
தெளிவான நதியே சாயி நாதா
தினம் போற்றினோமே சாயி நாதா
ஹரே ராம ராமா சாயி ராமா, ஹரே ராம ராமா சாயி ராமா
ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா, ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா

பிணி யாவும் தீர்க்கும் சாயி பாபா
பிழை யாவும் நீக்கும் சாயி பாபா
கனிவோடு பார்க்கும் சாயி பாபா
கருணாகரனே சாயி பாபா
ஹரே ராம ராமா சாயி ராமா, ஹரே ராம ராமா சாயி ராமா
ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா, ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா

ஹரப்ரம்மம் நீயே சாயி நாதா
பரம்பொருள் ஆனாய் சாயி நாதா
அருளாளன் நீயே சாயி நாதா
அடையாத கதவே சாயி நாதா
ஹரே ராம ராமா சாயி ராமா, ஹரே ராம ராமா சாயி ராமா
ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா, ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா

மழை மேகம் நீயே சாயி பாபா
மலர் தோட்டம் நீயே சாயி பாபா
அழைத்தோமே உன்னை சாயி பாபா
அணையாத விளக்கே சாயி பாபா
ஹரே ராம ராமா சாயி ராமா, ஹரே ராம ராமா சாயி ராமா
ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா, ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா

நிழலாக தொடரும் சாயி நாதா
நிலையான நிதியே சாயி நாதா
வழங்காயோ அருளே சாயி நாதா
வணங்காதோர் உண்டோ சாயி நாதா

சாய் பாபா……… சாய் நாதா………

இதையும் பார்க்கலாமே:
சாயி சரணம் பாபா சரணம் – யேசுதாஸ் பாடிய பாடல்

English Overview:
Varavendum neye is a Sai baba song in tamil. This song was sung by a Unnimenon. Backgroung music was done by Pradheep. Varavendum neye Sai baba tamil song lyrics also added here.