ஆண்களே! மனைவியிடம் இந்த 3 விஷயங்கள் கடைபிடித்து பாருங்கள்! உங்கள் வாழ்க்கையும் இனிமையாக மாறிவிடும்.

couple-thaali
- Advertisement -

ஆண், பெண் திருமண பந்தத்தில் இணையும் பொழுது எல்லோருமே பல்வேறு கனவுகளுடன் தான் பயணத்தைத் தொடங்குகிறார்கள். ஆனால் சிறிது காலம் போன பிறகு தான் உண்மையான குணநலன்கள் வெளிப்படுகிறது. இது காதலித்து திருமணம் செய்பவர்களுக்கும் பொருந்துகிறது என்பது நான் ஆச்சரியப்படத்தக்க விஷயமாக உள்ளது. காதலிக்கும் பொழுதே ஆயிரம் விஷயங்களை பேசி முடித்து இருப்பார்கள். ஆனாலும் அவர்களுடைய வாழ்க்கையும் புரிதல் இல்லாமல் போவதற்கு என்ன காரணம் தெரியுமா? நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் சரி, திருமண வாழ்க்கை தொடங்கிய பிறகு தான் உண்மையான குண நலன்கள் தெரிய வருகிறது.

marraige-couple

ஆரம்பத்தில் இருக்கும் காதல் போகப் போக குறைவதால் தான் திருமண பந்தத்தை உடைக்க வைக்கிறது. இந்த 3 விஷயங்களை கடைபிடிப்பதன் மூலம் உங்களுடைய பழைய காதல் உங்களுக்கு திரும்ப கிடைக்கும். இது கணவன் மனைவி இருவருக்குமே பொதுவானது தான் என்றாலும் அதிகமாக கணவன்கள் தான் இந்த தவறை செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று விஷயங்களை சரியாக கணவன், மனைவி கடைபிடித்தால் உங்களுடைய வாழ்க்கையும் இனிமையாக மாறும்.

- Advertisement -

டிப்ஸ் நம்பர் 1:
ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி முழுமையாக புரிந்து கொள்ளும் வரை அவர்களைப் பற்றிய கருத்துகளை முன் கூட்டியே முடிவு செய்து விடாதீர்கள். இவள் இப்படித்தான்! இவர் இப்படித்தான்! என்று முடிவு செய்துவிட்டால் அதன் பிறகு அவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயமும் தவறாகத்தான் தெரியும். உங்கள் கருத்துக்களுக்கு உங்களுடைய துணை முரண்பட்டு இருந்தாலும் ஒரு நாள் அமர்ந்து ஆரோக்கியமான விவாதமாக அதனை எடுத்து சென்றால் அந்த விஷயத்தில் இருவரில் யாருடைய கருத்து சரி என்பதை உணரவும், உணர்த்தவும் வேண்டும்.

couple

அவர்கள் உணர்ந்து கொண்டாலும் உடனே திருத்திக் கொண்டு விட மாட்டார்கள். அவர்களுக்கு கால அவகாசம் கொடுத்து பொறுமையாக இருங்கள். நிச்சயமாக தன்னுடைய கருத்து தவறானது என்பதை ஒரு நாள் உணர்வார்கள். இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் செய்து பார்க்கும் பொழுது தான் இருவருக்குள் புரிதலும் அதிகமாகும். இதையெல்லாம் செய்ய நேரமில்லை என்று ஒதுங்கிப் போக நீங்கள் வேறு யாரோ அல்ல.. தம்பதிகள் என்பதை முதலில் உணருங்கள்.

- Advertisement -

டிப்ஸ் நம்பர் 2:
மனைவியை அல்லது கணவனை ஒரு போதும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசக்கூடாது. அவர்கள் எப்படி இருக்க வேண்டும்? என்கிற உங்களுடைய கருத்தை மற்றவர்களுடன் ஒப்பிட்டு கூறாமல், நீ இப்படி இருந்தால் எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் தெரியுமா? என்பது போன்ற பாவனையில் எடுத்துக் கூறலாம்.

couples

அவர்களை அறியாமல் எப்போதாவது உங்களுக்கு பிடித்த மாதிரி நடந்து கொண்டிருக்கலாம். அந்த விஷயத்தை சுட்டிக்காட்டி அன்று நீ இப்படி நடந்து கொண்டது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அதைத்தான் உன்னிடம் எதிர்பார்த்தேன் என்று கூறலாம். எந்த ஒரு விஷயத்தையும் நேர்மறையாக கூறும் பொழுது தான் புரிதல் ஏற்படும். எதிர்மறையாக கூறிவிட்டால் உங்கள் மேல் இருக்கும் மதிப்பு குறையும், அன்பும் தானாகவே மாறிவிடும்.

- Advertisement -

டிப்ஸ் நம்பர் 3:
எல்லா விஷயங்களிலும் உங்கள் துணை தான் உங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கக் கூடாது. அவர்கள் ஏன் அப்படி நடந்து கொள்கிறார்கள்? அவர்கள் உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள்? என்பதை ஒரு முறையாவது நிதானமாக அமர்ந்து சிந்தித்து பார்க்க வேண்டும். காசு கொடுக்கும் முதலாளிக்கு பிடிக்கவில்லை என்றாலும் அடிபணிந்து செல்லும் நீங்கள் உங்களுடைய மனைவிக்கு பிடித்த ஒரு விஷயத்தை அவர்களுக்காக விட்டுக் கொடுத்தால், கெட்டுப் போக மாட்டீர்கள்.

marraige

விட்டுக் கொடுப்பதில் தான் வாழ்க்கை அடக்கியுள்ளது. விடாப்பிடியாக இருந்தால் திருமண பந்தத்தில் இனிமையை காண முடியாது. நீங்கள் ஒரு விஷயத்தை விட்டுக் கொடுத்தால் அவர்கள் இரண்டு விஷயங்களை விட்டுக் கொடுப்பார்கள் அது தான் பெண்களிடம் இருக்கும் சூட்சுமமான குணமாகும். இதனை தெரிந்து வைத்திருந்தால் உங்கள் மனைவிக்கு நீங்கள் நல்ல கணவனாக மாறிவிட முடியும். ஒரு முறை முயற்சி செய்து தான் பாருங்களேன்.

இதையும் படிக்கலாமே
இந்த 7 விஷயங்கள் இருந்தும் பிரயோஜனம் இல்லாத விஷயங்களாக பழம்பெரும் தமிழ் நூல் ஒன்று கூறுகிறது! என்ன நூல் அது? அந்த ஏழு விஷயங்கள் என்னனு நீங்களும் தெரிஞ்சுக்கணுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -