தக்காளி சேர்க்காமல் புளி ஊற்றி வெங்காயத்தை இப்படி வறுத்த சட்னி செஞ்சு பாருங்க சுவை பிரமாதமா வருமே!

vengaya-onion-chutney_tamil
- Advertisement -

தக்காளி சேர்க்காமல் செய்யும் சட்னி வகைகளில் இதுவும் ஒன்று! புளி தண்ணீர் ஊற்றி வெங்காயத்தை நன்கு வறுத்து அரைக்கக் கூடிய இந்த சட்னி வறுத்த வெங்காய சட்னி எனலாம். ரொம்பவே டேஸ்டியான இந்த வெங்காய சட்னிக்கு 10 இட்லி கொடுத்தால் கூட பத்தவே பத்தாது, சாப்பிட்டுகிட்டே இருக்கணும்னு தோணும். அந்த அளவிற்கு ருசியான இந்த சட்னியை எப்படி தயாரிப்பது? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

தேவையான பொருட்கள்

பெரிய வெங்காயம் – 2, உளுத்தம் பருப்பு – மூன்று ஸ்பூன், சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், வரமிளகாய் – 10, கருவேப்பிலை – இரண்டு கொத்து, தேங்காய் துருவல் – அரை கப், புளி தண்ணீர் – கால் கப், உப்பு – தேவைக்கான அளவு. தாளிக்க: சமையல் எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை 

இந்த வெங்காய சட்னி செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு பெரிய வெங்காயத்தை தோலுரித்து நீளவாக்கில் நான்கைந்து துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் வாணலி ஒன்றை வையுங்கள். அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள்.

எண்ணெய் காய்ந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். உளுந்து சிவக்க வறுபட்டு வரும் சமயத்தில் உங்கள் காரத்திற்கு ஏற்ப வர மிளகாய்களை காம்பு நீக்கி சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள். அரை நிமிடம் வறுத்த பின்பு இரண்டு கொத்து கறிவேப்பிலையை உருவி போட்டுக் கொள்ளுங்கள். இதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நிறம் மாற நன்கு வதக்க வேண்டும்.

- Advertisement -

வெங்காயம் நிறம் மாறியதும் துருவி வைத்துள்ள தேங்காய் துருவலை சேர்த்து கலந்து விடுங்கள். கடைசியாக புளி தண்ணீர் சேர்த்து ஒரு முறை நன்கு கலந்து விட்ட பின்பு அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஆறிய பொருட்களை சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு நைசாக பேஸ்ட் போல அரைத்து எடுத்துக் கொண்டு வாருங்கள். அரைத்து எடுத்த இந்த சட்னிக்கு ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
2 முட்டை இருந்தா போதும் அருமையான டேஸ்டில் பிரட் ரோல் நம்ம வீட்டிலேயே இதே போல செஞ்சு ரசித்து ருசித்து சாப்பிடலாமே!

தாளிக்க தாளிப்பு கரண்டி ஒன்றை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் ஒரு கொத்து கருவேப்பிலையை உருவி போட்டு தாளித்து சட்னியுடன் சேர்த்து கலந்து விட்டால் ருசியான வறுத்த வெங்காய சட்னி ரெடி! உங்க வீட்டில் நீங்களும் இதே மாதிரி சட்னி வச்சு பாருங்க, ரொம்ப ரொம்ப ருசியா இருக்கும். எத்தனை இட்லி, தோசை கொடுத்தாலும் பத்தவே பத்தாது சாப்பிட்டுகிட்டே இருக்கலாம்.

- Advertisement -