வசந்த நவராத்திரி 2024

amman2
- Advertisement -

நமக்குத் தெரிந்ததெல்லாம் வருடத்தில் ஒருமுறை கொலு வைத்து கொண்டாடப்படுகின்ற நவராத்திரி மட்டும்தான். ஆனால் ஒரு வருடத்திற்கு நான்கு ரவராத்திரிகள் வருகின்றது. வராகி நவராத்திரி, சியாமளா நவராத்திரி, வசந்த நவராத்திரி, பிறகு நாம் எல்லோராலும் கொண்டாடப்படுகின்ற கொலு நவராத்திரி. இதில் இன்றைய தினம் ஆரம்பிக்கவிருக்கும் நவராத்திரி தான் வசந்த நவராத்திரி.

அதாவது பங்குனி மாதம் அமாவாசை திதி, முடிந்த பிறகு அடுத்த நாள் பிரதமை திதியிலிருந்து இந்த வசந்த நவராத்திரி தினம் தொடங்குகிறது. இந்த நவராத்திரியில் பெண்கள் அம்பாள் வழிபாடு செய்தால் குடும்பத்தில் சுபிட்சம் நிறைவாக இருக்கும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த நவராத்திரி ராமருக்கும் லலிதாம்பிகைக்கும் சிறப்புக்குரிய நாட்களாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த நவராத்திரி முடியக்கூடிய அந்த நாளில்தான் ராமநவமியும் வரும். இந்த நவராத்திரியை பெரும்பாலும் வீட்டில் வழிபாடு செய்ய மாட்டார்கள். மேலும் மேருசக்கரம் இருக்கக்கூடிய அம்பாள் கோவிலில் இந்த வழிபாடு ரொம்ப ரொம்ப சிறப்பாக நடைபெறும்.

மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் இந்த வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெறும். அதேபோல சென்னையில் காளிகாம்பாள் கோவிலிலும் இந்த வழிபாடு மிகவும் விசேஷமாக நடைபெறும். வாய்ப்பு உள்ளவர்கள் அந்த அம்பாள் திருத்தலத்திற்கு சென்று வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

- Advertisement -

வசந்த நவராத்திரி அம்பாள் வழிபாடு

சரி, நாங்க வீட்டிலிருந்தே இந்த லலிதாம்பிகையின் ஆசிர்வாதத்தை முழுமையாக பெற வேண்டும், எங்களுடைய குடும்பத்திற்கும் அந்த அம்பாளின் அனுகிரகம், இந்த வசந்த நவராதியில் கிடைக்க வேண்டுமென்றால் என்ன செய்வது. வீட்டில் இருக்கும் பெண்கள் மாலை நேரத்தில், பூஜையறையை சுத்தம் செய்து அம்பாள் படத்திற்கு அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.

லலிதா திரிபுரசுந்தரி திரு உருவப்படம் இருந்தால் ரொம்ப ரொம்ப சிறப்பு. இல்லாதவர்கள் உங்கள் வீட்டில் இருக்கும் அம்பாளை அலங்காரம் செய்து முடித்துவிட்டு அந்த அம்பாளுக்கு வாசம் நிறைந்த மல்லிகைப்பூ வாங்கி வைக்கவும். கூடவே வாசம் நிறைந்த மரிக்கொழுந்து இந்த அம்பாள் வழிபாட்டிற்கு ரொம்பவும் சிறப்புக்குறியதாக சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

ஆகவே இந்த இரண்டு மலர்களையும் அம்பாளுக்கு சூட்டி விளக்கு ஏற்றி வைத்து உங்களால் முடிந்த நிவேதியம் வைத்து விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்துகொண்டு, தீப தூப ஆராதனை செய்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். இதே போல இன்று மாலை தொடங்கிய உங்கள் வழிபாடு, 9 நாட்களும் தொடர வேண்டும்.

அதாவது ஏப்ரல் 17ஆம் தேதி வரை இந்த நவராத்திரி இருக்கிறது. ஒன்பது நாள் மாலையும் இதே போல வழிபாட்டை மேற்கொண்டு ஒரு கோரிக்கையை அம்பாள் பாதத்தில் வையுங்கள். நிச்சயமாக அந்த வழிபாட்டிற்கு உண்டான பலனை அம்பாள் உங்களுக்கு வெகுவிரைவில் கொடுத்து விடுவாள். இந்த பூஜை செய்யும் போது வீட்டில் லலிதா சகஸ்ர நாமத்தை ஒலிக்க விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர செவ்வாய்க்கிழமை சொல்ல வேண்டிய சிவ மந்திரம்

இந்த வழிபாடு உங்களுக்கு மன நிம்மதியை கொடுக்கும். வீட்டில் சந்தோஷத்தை கொடுக்கும். செல்வ கடாட்சத்தை கொடுக்கும். லலிதாம்பிகையின் பரிபூரண ஆசீர்வாதத்தை பெற இந்த ஒன்பது நாட்களை தவற விடாதிங்க வாய்ப்பு உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆன்மீகம் சார்ந்த இந்த தகவலை உங்களோடு பகிர்ந்து பகிர்ந்து கொண்டதில் மனநிறைவோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -