- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவசீகரம் தரும் பௌர்ணமி மந்திரம்

வசீகரம் தரும் பௌர்ணமி மந்திரம்

- Advertisement -

சில பேருடைய முகம் எப்போது பார்த்தாலும் வாடி இருக்கும். முகத்தில் ஒரு லட்சுமி கடாட்சம் என்பது இருக்காது. சில பேரை பார்க்கும்போது சிரித்துப் பேச வேண்டும், அவர்களிடம் நன்றாக பழக வேண்டும் என்ற எண்ணம் நமக்கு தோன்றும். சில பேரை பார்க்கும்போது நம்மை அறியாமலேயே கோபம் வரும். இதற்கு காரணம் அவர்களுடைய அழகு கிடையாது.

அவர்களுடைய முகத்தில் மறைந்திருக்கும் தரித்திரம். முகம் லட்சணமாக இருக்க வேண்டும், நம்முடைய முகத்தில் அந்த மகாலட்சுமி தேவி வந்து குடியிருக்க வேண்டும் என்றால், முகத்தை பிடித்த உடம்பை பிடித்த பீடை விலக வேண்டும், முகம் மளர்ச்சியோடு அனைவரும் நம்மிடம் வந்து பேச வேண்டும் என்றால், பௌர்ணமி அன்று என்ன மந்திரத்தை சொல்லுவது, ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

குறிப்பாக இந்த ஆன்மீகத் தகவல்கள் பெண்களுக்கு ரொம்ப ரொம்ப பயனுள்ளபடி அமையும். பெண்களுக்கு இருக்கும் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், முகத்தில் இருக்கும் தரித்திரம், எல்லாம் விலக வேண்டும் என்றால் நாளைய தினம் நிலவு உதயமாகும் போது, நிலவு வெளிச்சத்தில் அமர்ந்து பின் சொல்லக்கூடிய இந்த மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும்.

பெண்களுக்கு மட்டும்தான் இந்த மந்திரமா என்று கேள்வி எழுப்ப வேண்டாம். ஆண்களுக்கு தேவை என்றாலும் இந்த மந்திரத்தை சொல்லலாம். தவறு கிடையாது. இருப்பினும் மகாலட்சுமி கடாட்சம் என்பது நம்முடைய சாமுத்திரிகா லட்சணத்தில் பெண்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விஷயம். அதற்காகத்தான் இந்த மந்திரம் குறிப்பாக பெண்களுக்கு என்று சொல்லப்பட்டுள்ளது. ஆண்கள் உச்சரிக்கும் போதும் எந்த தவறும் கிடையாது உங்களுடைய முகத்திலும் தெளிவு பிறக்கும்.

- Advertisement -

முகம் பொலிவு பெற சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் வெள்ளி என்முகம் வியாழன் என்முகம் திங்கள் என்முகம் திசைகள் எட்டும் என்முகம் காளி என்முகம் காயத்ரி என்முகம் நீலி என்முகம் நீலகண்டி என்முகம் ராமரும் லட்சுமணரும் போலே அம்மா தாயே லட்சுமணர் எல்லோரும் பார்த்தால் போலே சிரித்த முகமும் சீதாதேவியார் நிற்க சிதம்பர அட்சரத்தின் மேல் ஆணை ஐந்தெழுத்து பஞ்சாட்சரமும் என்முகத்தில் நிற்கவே சுவாகா.

இந்த மந்திரத்தை வெட்டவெளியில் அமர்ந்து, நிலவு ஒளியில் 108 முறை சொல்லிப் பாருங்கள். நீங்கள் எதிர்பார்க்காத பிரகாசமும், லட்சுமி கடாட்சமும் உங்கள் முகத்தில் தோன்றும். அதில் ஒரு துளி மாற்றமும் கிடையாது. அழகான ஒளியை பிரகாசத்தை இந்த பூமிக்கு வெளிச்சமாக கொடுக்கும் சந்திர பகவான், உங்கள் வாழ்க்கையிலும் வெளிச்சத்தை கொடுப்பார். முகத்திலும் புழுவை கொடுப்பார்.

- Advertisement -

பௌர்ணமி அன்று 108 முறை இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். அது மட்டும் இல்லாமல் தொடர்ந்து 48 நாட்களுக்கு தினம் தோறும் 3 முறை இந்த மந்திரத்தை காலை எழுந்தவுடன் சொல்லுங்கள்.

வெள்ளருக்கு குச்சி, ஆள விழுது, வேப்பங்குச்சு, இதில் ஏதாவது ஒன்றில் உங்களுடைய பல்கலை தேய்த்து பிறகு வெந்நீரால் தினமும் முகம் கழுவி வர, உங்களுடைய முகத்தில் பொலிவு அதிகரிக்கும். மேல் சொன்ன மந்திரத்தோடு சேர்த்து இந்த முறையையும் கையாண்டு கொள்ளுங்கள். அதிலும் நாளை வரக்கூடிய ஐப்பசி பௌர்ணமி வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வந்திருப்பதால், நாளைய தினம் இந்த மந்திரத்தை உச்சரிப்பது இரட்டிப்பு பலன்.

இதையும் படிக்கலாமே: முன்னோர் ஆசி கிடைக்க தீபம்

ஐப்பசி பௌர்ணமியில் தான் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகமும் நடைபெறும். ஆக ஒட்டுமொத்த நேர்மறை ஆற்றலும் சேர்ந்து இருக்கக்கூடிய இந்த நாளை தவிர விடாதிங்க. முகம் வசியம் என்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. எவரொருவர் வசீகரத்தோடு இருக்கிறார்களோ, அவர்களுடைய வாழ்க்கையில் இன்பம் ஒரு துளி அளவும் குறையாது. நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த மந்திரம் நல்லதை செய்யும் என்ற தகவலுடன், இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்