- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமுன்னோர் ஆசி கிடைக்க தீபம்

முன்னோர் ஆசி கிடைக்க தீபம்

- Advertisement -

எந்த ஒரு வாழ்க்கையிலும் முன்னேற்றம் என்பது தான் உயிர்ப்பு தரக்கூடிய ஒன்றாக இருக்கும். தேங்கிய தண்ணீர் போல வாழ்க்கை ஒரே மாதிரியாக ஒரே இடத்தில் நின்று விட்டால், பாசி படிந்தது போல கெட்டுப் போய்விடும். ஓடிக் கொண்டிருக்கும் தெளிந்த நீரோடை போல மகத்துவம் மிகுந்ததாக உங்கள் வாழ்க்கையும் மாறுவதற்கு, முன்னேற்றம் அடைவதற்கு முன்னோர்கள் ஆசிர்வாதம் கண்டிப்பாக தேவை. முன்னோர் ஆசி பெற எந்த இடத்தில் தீபம் ஏற்றுவது? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

முன்னோர் ஆசி இன்றி நம்மால் முன்னேற்றம் காண முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை. ஒருவருடைய இல்லத்தில் முன்னோர் சாபம் இருந்தால், பித்ரு தோஷம் துரத்தினால் அவர்களால் என்ன முயற்சி செய்தாலும், வாழ்க்கையில் முன்னேற்றத்தை காண முடியாது என்பது நியதி. இதிலிருந்து எளிதாக விடுபடுவதற்கு ஒவ்வொரு அமாவாசை தோறும் இந்த எளிய வழிபாட்டினை மேற்கொண்டு வாருங்கள்.

- Advertisement -

அமாவாசை பொதுவாக பித்ருக்களுக்கு உரியதாக விளங்குகின்றது, எனவே அமாவாசைகளில் ஆன்மீக ஸ்தலங்களுக்கு, ஆலயங்களுக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும். அருகில் இருக்கும் ஏதாவது ஒரு கோவிலுக்கு செல்லுங்கள். அது சிவன் கோவிலாக இருந்தாலும் சரி, அம்பாள் கோவிலாக இருந்தாலும் சரி, வேறு எந்த கோவிலாக இருந்தாலும் சரி, புண்ணிய ஸ்தலங்களில் அல்லது ஆலயங்களில் அமாவாசை தோறும் முன்னோர்களை மனதில் நிறுத்திக் கொண்டு, தீபம் ஏற்றினால் அது மோட்ச தீபமாக மாற்றமடையும் என்பது ஐதீகம்.

இறந்து போனவர்கள், முன்னோர்கள், நம் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று ஆசீர்வாதம் கொடுக்கக் கூடியவர்கள் இவர்களை மனதில் நினைத்துக் கொண்டு பிரகாரத்தில் தீபம் ஏற்றும் இடத்தில் தீபம் ஏற்றி ஒரு 2 நிமிடம் ஆத்மார்த்தமாக, என் வாழ்க்கை மாற வேண்டும்.. ஆசித் தாருங்கள்.. என்று பிரார்த்தித்துக் கொள்ளுங்கள். இது போல ஒவ்வொரு அமாவாசை அன்றும் செய்ய வேண்டும். குறைந்தது மாதம் ஒரு முறையாவது அமாவாசையில் செய்யுங்கள்.

- Advertisement -

முன்னோர்களை நினைத்து இப்படி தீபம் ஏற்றி வைப்பதால், அவர்களுக்கு மோட்சம் கிடைக்கிறது. ஒருவர் இறந்த பின்பு அவர்களை நினைத்து தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால், எளிதாக அவர்களுக்கு மோட்சம் கிடைக்கும், ஆனால் யாருமே அவர்களைப் பற்றி நினைக்காமல், பித்ரு பூஜைகள் செய்யாமல், விளக்கேற்றாமல் அவர்களுடைய ஆத்மாவானது எளிதாக மோட்சம் அடைவது கிடையாது. எனவே இந்த மோட்ச தீபம் நீங்கள் ஏற்றி வழிபடுவதால் முன்னோர்கள் மனம் மகிழ்ந்து உங்களுக்கு ஆசீர்வாதங்களை அள்ளிக் கொடுப்பார்கள்.

இதையும் படிக்கலாமே:
பஞ்சம் தீர்க்கும் ஐப்பசி பௌர்ணமி பரிகாரம்

முன்னோர்கள் உடைய இந்த ஆசீர்வாதம் இருந்தால், நீங்கள் எளிதாக உங்களுடைய வாழ்க்கையில் முன்னேற்ற பாதையை நோக்கி பயணம் செய்வீர்கள். இப்படியே என் வாழ்க்கை போய்விடும் என்று பயந்து கொண்டிருக்கும் நீங்கள், புதிய விடியலை காணக் கூடிய யோகத்தை பெறுவீர்கள். தூரத்தில் ஒரு வெளிச்சம் தெரிவதை உணர்வீர்கள். ரொம்பவே சக்தி வாய்ந்த இந்த மோட்ச தீபம் என்னும் வழிபாட்டினை முன்னோர்களுக்காக, உங்களுக்கு பிடித்தவர்களுக்காக, உங்களுடன் இருந்தவர்களுக்காக, உங்களின் மகிழ்ச்சியை விரும்புபவர்களுக்காக அவர்களுடைய ஆசிர்வாதத்தை நீங்கள் பெற அமாவாசை தவறாமல் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.

சற்று முன்