- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilவாஸ்லின் உங்ககிட்ட இருக்கா அது போதும், அழகிற்காக நீங்க பயன்படுத்தும் அத்தனை கீரிம்களையும் செலவே நாமே...

வாஸ்லின் உங்ககிட்ட இருக்கா அது போதும், அழகிற்காக நீங்க பயன்படுத்தும் அத்தனை கீரிம்களையும் செலவே நாமே செய்திடலாம். உச்சி முதல் பாதம் வரை அழகாக இந்த ஒரு வாஸ்லின் போதும்

- Advertisement -

நம் சருமம் வறட்சி அடையாமல் இருப்பதற்காக பயன்படுத்தும் பல பொருட்களில் வாஸ்லின் முக்கியமான ஒன்று. இதை கை கால்கள் உதடு என அனைத்து இடங்களிலுமே அவ்வப்போது தடவி வரும் போது சருமம் வறட்சி அடையாமல், வெயில், மழை, பனி என அனைத்து காலத்திலும் சருமம் பாதிக்காத வகையில் பார்த்துக் கொள்ள உதவியாக இருக்கிறது. இந்த வாஸலினை வைத்து முகம், உதடு, புருவம், பாதம் என அனைத்தையும் அழகாகக் கொள்ள முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? அதை தான் இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

இந்த ஒரு வாசலின் இருந்தால் போதும் உங்கள் உதட்டிற்கு பயன்படுத்தும் லிப் பாம், நல்ல அடர்த்தியாக வில் போல் வளருவதற்கான கிரீம், உதட்டை நல்ல சாப்டாக மாற்றக் கூடிய கீரிம், பாதத்தை மிருதுவாக்க பேக் என இதை வைத்து இத்தனை அழகு குறிப்புகளை செய்யலாம். இதை ஒவ்வொன்றாக இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

குறிப்பு: 1
உங்களின் உதடு எப்போதும் சிவப்பாக இருக்க வேண்டுமானால், ஒரு டீஸ்பூன் வாஸ்லின், அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், இரண்டையும் நன்றாக கலந்து உங்கள் உதடுகளின் மேலே நல்ல ஒரு திக் லேயராக போட்டுக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் இது இருந்தால் நல்லது. அதன் பிறகு ஒரு துணி வைத்து துடைத்து விடுங்கள். இதை தொடர்ந்து செய்து வரும் போது உங்கள் கருமையான உதடு கூட நல்ல சிகப்பாக மாறும். இதே போல் நல்ல சாப்டான உதடு கிடைக்க வேண்டும் என்றால், வேசலின்யுடன் மஞ்சளுக்கு பதிலாக தேன் கலந்து தேய்த்தால் உங்கள் உதடு மிகவும் மிருதுவாக மாறி விடும்.

குறிப்பு: 2
பாதங்களை அழகாக இரண்டு டீஸ்பூன் ஆலுவேரா ஜெல்லுடன், ஒரு டீஸ்பூன் வாஸ்லின் எடுத்து தினமும் இரவில் படுக்கும் முன்பு உங்கள் பாதங்களில் தேய்த்து வந்தால் பட்டுப் போன்ற பாத அழகை பெற முடியும். இது இரவு முழுவதும் கூட உங்கள் பாதங்களில் அப்படியே இருக்கலாம்.

- Advertisement -

குறிப்பு: 3
வில் போல வளைந்த அழகிய புருவத்திற்கு வாஸ்லின் இரண்டு ஸ்பூன் எடுத்து இதை டபுள் பாய்லிங் செய்ய வேண்டும். அதாவது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து இந்த வாஸலினை ஒரு சின்ன கிண்ணத்தில் வைத்து கொதிக்கும் நீரில் வைத்து விடுங்கள். நீராவியில் வேசலின் உருகியவுடன் அதில் மூன்று டேபிள் ஸ்பூன் அளவிற்கு சாக்கோ பட்டர்(இது டிபார்ட்மென்ட் ஸ்டோரில்கிடைக்கும்) கலந்து வைத்தால் சிறிது நேரத்திற்கு எல்லாம் அது மை போல வந்து விடும். இதை தினமும் உங்கள் புருவத்தில் வைத்தால் அழகிய வில் போல வளைந்த புருவம் கிடைக்கும். இதை ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்து பயன்படுத்திக் கொள்ளுங்கள் இல்லை என்றால் வாஸ்லின் உருகி புருவத்தில் வைக்க முடியாமல் போய் விடும்.குறிப்பு: 4
பெண்கள் பெரும்பாலும் இபோதெல்லாம் லிபாம் பயன்படுத்த தொடங்கி விட்டார்கள். இந்த லிம்பாமை கூட வாஸலினை வைத்து நம் வீட்டில் செய்து கொள்ளலாம். இதற்கும் வாஸ்லின் ஒரு ஸ்பூன் எடுத்து, முன்பு சொன்னதைப் போலவே டபுள் பாய்லிங் செய்து அதை உருக்கி கொள்ளுங்கள். அதன் பிறகு அதில் 2 டீஸ்பூன் அளவிற்கு பீட்ரூட் பவுடர் கலந்து வைத்தால், இது ஒரு நல்ல மை பதத்திற்கு வந்து விடும். இதை நீங்கள் ஒரு பாக்ஸில் வைத்து பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்து விடுங்கள். அவ்வளவு தான் லிப் பாம் தயார்.

குறிப்பு: 5
முக சுருக்கம் போக ஒரு வாஸ்லின் ஒரு ஸ்பூன் வைட்டமின் ஈ கேப்சுல் ஒன்று இரண்டையும் சேர்த்து நன்றாக குழைத்து முகத்தில் தினமும் பூசி வந்தால் முக சுருக்கம் நீங்கி, முகம் பளபளப்பாக மாறி விடும்.

இதையும் படிக்கலாமே: இந்த எண்ணெய் உங்களிடம் இருந்தால் போதும், இளநரையை மறைக்க இனி இந்த டையெல்லாம் மறந்தும் கூட பயன்படுத்த மாட்டிங்க. ரொம்ப ஈஸியா இள நரையை போக்கிடலாம் கவலையை விடுங்க.

ஒரே ஒரு வாசலின் உங்களிடம் இருந்தால் போதும் அதை வைத்து எத்தனை அழகு குறிப்புகளை செய்து கொள்ளலாம். இந்த சின்ன சின்ன அழகு குறிப்புகள் உங்களுக்கு பிடித்திருந்தால், நீங்களும் இதை ட்ரை பண்ணி பார்க்கலாம்.

சற்று முன்