தொட்டதெல்லாம் வெற்றியாக, நெற்றியில் இதை இட்டுக் கொள்ளுங்கள். குடிசையில் வசிப்பவர்களும், சீக்கிரமே கோட கோபுரத்தின் அதிபதி ஆகிவிடலாம்.

thilagam
- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் படிப்படியான முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்பதற்காகத்தான் பல போராட்டமே நடக்கின்றது. எந்த ஒரு வேலையை நாம் தொடங்கினாலும் அதில் விரைவாக வெற்றி அடைய, நாம் என்ன செய்ய வேண்டும்? அதாவது எல்லாவற்றையும் வசப்படுத்திக் கொள்ள வேண்டும். வெற்றியை, தன்னம்பிக்கையை, துணிச்சலை, செல்வத்தை, இதோடு சேர்த்து நம்மைப் பார்ப்பவர்களும் நம் வசப்பட வேண்டும். அதாவது வசியமை என்று கேள்விப்பட்டிருப்போம். வசியம் என்ற உடனேயே தவறான வார்த்தை என்று புரிந்து கொள்ளாதீர்கள்.

thilagam

நான் செய்யும் தொழிலில் வசியம் இருக்க வேண்டும். நம் முகத்தில் வசீகரம் இருக்க வேண்டும். நம் பேச்சில் வசீகரம் இருக்க வேண்டும். நம் நடவடிக்கைகளில் வசீகரம் இருக்க வேண்டும். அப்போது தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும். பல கோடிகளை சீக்கிரமே சம்பாதிக்க முடியும். அப்போதுதானே பெரிய மாளிகையை சொந்தமாக்கிக் கொள்ள முடியும். எப்படி நம்மை நாமே வசீகரமாக மாற்றிக் கொள்ளவது?

- Advertisement -

நம்மைப் பார்த்தவுடன் எல்லோருக்கும் பிடிப்பதற்கு, நெற்றியில் திலகம் இட்டுக் கொள்ள வேண்டும். பலபேருக்கு இந்த சூட்சமம் தெரிந்திருக்கும். இதில் என்ன பொருட்கள் கலக்க வேண்டும்? எப்படி இட்டுக் கொள்ள வேண்டும் என்பதும் தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அந்த வசிய திலகத்தை தயார் செய்யும் போதும், இட்டுக் கொள்ளும் போதும் நாம் சொல்ல வேண்டிய ஒரு பிரத்தியேக மந்திரத்தை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்த மந்திரத்தை உச்சரித்து இந்த திலகத்தை தயார் செய்து, நீங்கள் முக்கியமான நல்ல காரியத்திற்காக நெற்றியில் இட்டுக்கொண்டு, இந்த மந்திரத்தை ஒரு முறை உச்சரித்தால் கூட போதும். நீங்கள் செல்லும் காரியம் நிச்சயம் 100% வெற்றி தான். ரோட்டோரத்தில் கடை வைத்திருப்பவர்களுக்கு நல்ல வியாபாரம் நடக்க வேண்டுமா? இன்டர்வியூவில் ஜெயிக்க வேண்டுமா? காண்ட்ராக்ட் உங்கள் பக்கம் கையெழுத்தாக வேண்டுமா? நீங்கள் சேல்ஸ்மேன் தொழிலில் இருக்கிறீர்களா? நீண்ட நாட்களாக பெண் பார்க்கச் என்றும் எந்த வரனும் அமையவில்லையா? இப்படியாக எதற்கு வேண்டுமென்றாலும் இந்த திலகத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். ஆண்களும் இந்த திலகத்தை இட்டுக் கொள்ளலாம். பெண்களும் இந்த திலகத்தை ஏற்றுக்கொள்ளலாம். ஒருபோதும் தவறான காரியத்திற்காக இந்த மந்திரத்தையோ இந்த திலகமோ பயன்படுத்தவே முடியாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த திலகத்தை எப்படி தயார் செய்வது? வாசனை மிகுந்த சந்தனப்பொடி, அரகஜா, கோரோசனம், ஜவ்வாது, புனுகு, அத்தர், பச்சை கற்பூரம் இப்படியாக உங்களுக்கு தெரிந்த எல்லா வாசனைப் பொருட்களையும் வாங்கி வைத்துக் கொண்டு, அதில் எல்லாவற்றிலிருந்தும், சிறிதளவு எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளுங்கள். உங்களுடைய வீட்டில் சிறிய அளவு குங்குமச்சிமிழ், வெள்ளியில் இருந்தால் கூட பரவாயில்லை. அதில் போட்டு தண்ணீர் ஊற்றி குழைத்து தினமும் நெற்றியில் இட்டுக்கொள்ள வேண்டும்.

thilagam1

இந்தப் பொருட்களையெல்லாம் ஒன்றாக சேர்த்து இந்த வசிய திலகத்தை தயார் செய்யும் போதும், நெற்றியில் இட்டுக் கொள்ளும் போதும், நீங்கள் சொல்ல வேண்டிய அதி அற்புதமான மந்திரம் உங்களுக்காக இதோ!

- Advertisement -

kungumam-kumkum

ஓம் ஆத்ம மனோ வசி தேவாய வூம்
வசி ஆக்ராஷன சர்வ தேவ தேவியை
பரிபூரன காரிய அனுகூல சித்தி தர
வசம் வாசம் வசி சாம்பவி புத்ராய
வர வர ஸ்வாஹா!

sucess

இந்த வாசனைப் பொருட்களை எல்லாம் வாங்கி திலகமாக மாற்ற  எங்களுக்கு தெரியாதுங்க! என்ன செய்து? நல்ல சந்தனத்தில் பன்னீர் ஊற்றி குழைத்து நெற்றியில் இட்டுக் கொள்ளும் போதோ, அல்லது விபூதி குங்குமத்தை இட்டுக் கொள்ளும் போது கூட, இந்த மந்திரத்தை சொல்லி விட்டு அதன் பின்பு அந்த திலகத்தை பயன்படுத்தி பாருங்கள். உங்களுக்கு வெளியிடங்களில் கிடைக்கக்கூடிய மரியாதையே வேறு தான். எந்த இடத்திற்கு சென்றாலும் நீங்கள் தான் ராஜாவாக இருப்பீர்கள் முயற்சி செய்து பாருங்கள்.

happy

கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், எந்த திலகமாக இருந்தாலும் அது கட்டாயம் நெற்றியில் இருக்கவேண்டும். இட்டுக் கொண்ட பிறகு, அழிந்து விட்டால் இதற்கு பவர் இருக்காது. இந்தப் பொடியையோ அல்லது சந்தனத்தையும் கொஞ்சம் கையில் எப்போதுமே வைத்துக்கொண்டு, வேண்டிய போது நெற்றியில் இட்டுக்கொண்டு, மந்திரத்தை உச்சரிப்பது மேலும் அதிக சக்தியைக் கைமேல் கொடுக்கும். பிறகென்ன எல்லாம் உங்கள் வசம்.

இதையும் படிக்கலாமே
இந்த நேரத்தில் குளிப்பவர்களுக்கு கட்டாயம் கடன் பிரச்சனையில் இருந்து விமோசனமே கிடைக்காது. நீங்கள் குளிக்கும் நேரம் என்ன?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -