வீட்டில் இந்த இடத்தை மட்டும் முக்கியமாக கவனித்துப் பாருங்கள். இது மட்டும் உங்கள் வீட்டில் சரியான இடத்தில் இல்லையென்றால் என்னென்ன பிரச்சினைகள் வரும் என்று தெரியுமா?

vasthu
- Advertisement -

ஒரு வீட்டின் வாஸ்துவில் எந்த வித பிரச்சனைகள் இருந்தாலும் அங்கு சமையல் அறை மட்டும் சரியான திசையில் அமைந்திருந்தால் போதும். அது வீட்டில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்து விடும். எனவே ஒரு வீட்டின் சுமுகமான சூழலுக்கு முக்கிய காரணமாக அமையும் இந்த சமயலறையை வாஸ்து படி சரியான இடத்தில் வைத்திருக்க வேண்டும். அப்போது சமையலறையில் எந்த திசையில் வைக்கக் கூடாது என்பதனை பற்றியும், எந்த திசையில் வைத்தால் நன்மை உண்டாகும் என்பதனை பற்றியும் தெளிவாக இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

வடகிழக்கு:
வடகிழக்கு என்பது ஈசானிய மூலையான மகாலட்சுமிக்கு உரிய இடமாகும். ஈசனின் தலையில் இருக்கும் கங்கையின் இருப்பிடமும் வடகிழக்கு திசையாகும். இந்த வடகிழக்கு திசை தண்ணீருக்கு உரிய திசை என்பதனால் இங்கு அக்னி வைப்பதென்பது நன்மையை கொடுக்காது. எனவே இந்த வடகிழக்கு திசையில் சமையலறை வைத்தால் வீட்டிற்கு தோஷத்தை தான் உண்டாக்கும்.

- Advertisement -

வடகிழக்கில் சமையலறை அமைந்திருந்தால் அந்த வீட்டில் இருக்கும் ஆண் பிள்ளைகளின் கல்வி மற்றும் அவர்களின் வளர்ச்சியில் பலவித பாதிப்புகளை ஏற்படுத்தும். நெருப்பின் மீது தண்ணீர் வைத்தால் அது எப்படி கொதிக்குமோ அது போல தான் வடகிழக்கு திசையில் சமையலறை வைப்பதும் நம் வீட்டின் பொருளாதார நிலைமையை எப்போதும் பின்னோக்கி கொண்டு போகுமே தவிர நல்ல சூழ்நிலையை கொடுக்காது.

இவ்வாறு பிரச்சனைகளை கொடுக்கும் வடகிழக்கில் சமையலறையை அமைத்து விட்டால் வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். அதிலும் முக்கியமாக வீட்டில் உள்ள பெண்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படும். அதுமட்டுமல்லாமல் கணவன்-மனைவி இருவருக்கிடையே தேவையில்லாத பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். எப்பொழுதும் மனக் குழப்பங்களும், கவலைகளும் அதிகமாக இருக்கும். என்னதான் பணம் அதிகமாக சம்பாதித்தாலும் மனதில் நிம்மதி என்பதே இல்லாமல் போகும். முக்கியமாக துர்சக்திகள் உள்ளே நுழைவதற்கு முக்கிய காரணமாக அமையும்.

- Advertisement -

ஆனால் வடகிழக்கு பகுதியில் பாத்திரம் கழுவும் இடம் அமைத்து அங்கு தண்ணீர் குழாய் அமைத்து விட்டால் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். இவ்வாறு வடகிழக்கு பகுதியில் தண்ணீர் குழாய் அமைப்பதன் மூலம் வீட்டின் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்கள் வீட்டின் வடகிழக்கு பகுதியில் தான் சமையலறை அமைந்திருக்கிறது என்றால் பயப்பட வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. நீங்கள் சமைக்கும் அடுப்பினை மட்டும் கிழக்கு நோக்கி இருக்குமாறு வைத்து விட்டால் போதும். உங்களுக்கு நல்ல மாற்றத்தைக் கொடுக்கும்.

தென்கிழக்கு:
எப்போதும் வீடுகளில் தென் கிழக்கு திசையில்தான் சமையலறை அமைந்திருக்க வேண்டும். இவ்வாறு தென்கிழக்கில் சமையல் அறை வைப்பது வீட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்து விடும். சமையல் அறையை மட்டும் எப்பொழுதும் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். வீட்டின் அமைப்பினை சரி செய்யும்போதும் கூட இந்த சமையலறையை மட்டும் எப்பொழுதும் எந்தவித காரணத்திற்காகவும் தென்கிழக்கு திசையிலிருந்து வேறு திசைக்கு மாற்றம் செய்யாதீர்கள். தென்கிழக்கு திசை மட்டுமே வீட்டின் பொருளாதார உயர்வுக்கும், மன நிம்மதிக்கும், குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் மிகுந்த நன்மையளிக்கும் திசையாக அமைகிறது. எனவே சமையலறை என்பது ஒரு வீட்டிற்கான முக்கியமான இடமாக இருக்கிறது. என்பதை மனதில் வைத்துக் கொண்டு எப்பொழுதும் செயல்படுங்கள்.

- Advertisement -