வாஸ்து குறைபாடு நீங்க உதவும் தீபம்.

vasthu deepam
- Advertisement -

வீடு என்பது கோவிலுக்கு சமமாக கருதப்பட வேண்டும். கோவிலுக்கு செல்லும் பொழுது எந்த அளவிற்கு மன நிம்மதி ஏற்படுகிறதோ அதே அளவிற்கு ஒரு வீட்டிற்குள் நுழையும் பொழுதும் ஏற்பட வேண்டும். அப்படி மன நிம்மதி ஏற்படுவதற்கு வீட்டில் எந்தவித குறைபாடுகளும் இருக்கக் கூடாது. அது வாஸ்து ரீதியாக இருந்தாலும் சரி அல்லது எதிர்மறை சக்திகளால் ஏற்படக்கூடிய குறைபாடாக இருந்தாலும் சரி. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் இந்த இரண்டு குறைபாட்டையும் நீக்குவதற்கு எந்த தீபத்தை எப்படி ஏற்ற வேண்டும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக வீடு என்பது மகிழ்ச்சி நிறைந்த இடமாக இருப்பது மிகவும் அவசியமான ஒன்று. வீட்டில் ஏதேனும் வாஸ்து குறைபாடுகள் இருந்தால் அந்த வாஸ்து குறைபாடுகளால் வீட்டிற்குள் மன நிம்மதி இருக்காது. சண்டை சச்சரவுகள் ஏற்படும். குழந்தைகளின் படிப்பில் பாதிப்பு, கடன் பிரச்சனை என்று நம் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய அனைத்து பிரச்சினைகளுக்கும் வாஸ்துவும் ஒருவித காரணம் என்பதை நாம் உணர வேண்டும். அதேபோல்தான் நம் வீட்டில் எதிர்மறை சக்திகள் அதிகமாக இருந்தாலும் நமக்கு பிரச்சனைகள் ஏற்படும்.

- Advertisement -

எந்த வீடு எதிர்மறை சக்திகள் இல்லாமல் வாஸ்து குறைபாடுகள் இல்லாமல் இருக்கிறதோ அந்த வீடு சொர்க்கத்திற்கு சமமாக கருதப்படுகிறது. நம்முடைய சாதாரண வீட்டை சொர்க்கமாக மாற்ற உதவக்கூடிய ஒரு தீபத்தை பற்றி பார்ப்போம். மிகவும் எளிமையான இந்த தீப வழிப்பாட்டை நாம் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும்.

வெள்ளிக்கிழமை அன்று காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த தீபத்தை ஏற்றி வழிபட வேண்டும். அல்லது இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் ஏற்றி வழிபடலாம். இந்த தீபத்தை ஏற்றுவதற்கு நமக்கு குத்துவிளக்கு தேவைப்படும். முழுவதுமாக வைத்து ஏற்றும் பொழுது அதன் பலன் இன்னும் பல மடங்கு அதிகமாக இருக்கும். இயலாதவர்கள் அதன் தலைப்பகுதியை மட்டும் எடுத்து வைத்து தீபம் ஏற்றலாம். அடுத்து இதில் நாம் சுத்தமான பசு நெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

எங்கே ஏற்ற வேண்டும் என்று கேட்டால் நம் வீட்டில் இருக்கக்கூடிய பிரதான வட கிழக்கு மூலையில் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை ஏற்றி வைத்து நம்முடைய இஷ்ட தெய்வத்தை மனதார நினைத்து வழிபட்டு இடவசதி இருப்பவர்கள் அந்த விளக்கை 11 முறை வலம் வர வேண்டும். வடகிழக்கு மூலையில் ஏற்றப்படும் இந்த தீபத்தால் நமக்கு எண்ணில் அடங்காத பல நன்மைகள் ஏற்படுகின்றன.

வாஸ்து ரீதியாக பிரச்சனைகள் இருந்து அதனால் வீடு விற்க முடியாத சூழ்நிலையில் இருப்பவர்கள் கூட இந்த தீபத்தை ஏற்றி வழிபடலாம். சொந்த வீடு மற்றும் வாடகை வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷங்கள் நீங்கும். இதில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றொரு விஷயம் என்னவென்றால் இந்த தீபத்தை நாம் குளிர வைக்க கூடாது. அதுவே தானாக குளிர வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பிரம்ம முகூர்த்த தீபம் ஏற்றும் நேரம்

இந்த எளிமையான தீப வழிபாட்டை நாம் மேற்கொண்டு வாஸ்து தொடர்பான அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் வெளிவந்து அதே சமயம் எதிர்மறை ஆற்றல்களையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பலாம்.

- Advertisement -