வாஸ்து படி பூஜை அறை எப்படி இருக்க வேண்டும்

4461
- விளம்பரம் -

வாஸ்து முறைப் படி பூஜை அறை அமைப்பதற்கு மிகச் சிறந்த திசை வடகிழக்கு மூலையாகும் மேலும் வடக்கு, கிழக்குத் திசைகளிலும் பூஜை அரை அமைக்கலாம்.

ஒரு பெரிய வீட்டில் இரண்டு தளங்கள் இருந்து எல்லோரும் அந்த வீட்டில் ஒரு குடும்பமாக வசித்தால் அவற்றில் தரை தளத்தில் பூஜை அறை இருக்க வேண்டும்.

- Advertisement -

சில வீடுகளில் இடப் பற்றாக்குறை காரணமாக படுக்கை அறை அல்லது சமையல் அறை சுவர்களில் உள்ள அலமாரிகளை பூஜை அறையாக பயன்படுத்துவதுண்டு. அப்படி இருந்தால் வழிபடும் நேரம் தவிர அந்த அலமாரியை மூடி வைக்க வேண்டும்.

வாஸ்து முறைப் படி பூஜை அறைக்கு இரண்டு கதவுகள் இருக்க வேண்டும். அவை வெளிப்புறமாக திறக்கும்படி இருக்க வேண்டும். கதவுகளில் சிறுசிறு துவாரங்களை அமைத்து அதில் மணிகளைத் தொங்கவிடுவதால் நமைகள் உண்டு. மணியில் இருந்து வரும் ஓசையானது வீட்டிற்குள் சகல ஐஸ்வர்யங்களையும்கொண்டு வரும்.

வாஸ்து முறைப் படி பூஜை அறையின் வடகிழக்குப் பகுதியில் அதிக பாரத்தை வைக்க கூடாது மேலும் வடகிழக்கு மூலையில் மாடம் அமைப்பதும் சிறந்ததாகாது.

வாஸ்து முறைப் படி பூஜை அறையின் மேற்குச் சுவரில் பூஜை சம்பந்தப்பட்ட பொருட்கள். விக்ரங்கள். படங்களைத் தவிர வேறு எந்த பொருளையும் வைக்கக் கூடாது. மேலும் இந்த சுவரில் ஜன்னல் வைப்பது சிறந்ததாகாது.

பூஜை அறையின் வடக்கில் ஒரு ஜன்னலை வைப்பது சிறந்தது. அப்படி ஜன்னல் அமைக்கும் போது அதன் வழியே சூரிய ஒளி பூஜை அறைக்குள் வரும், இதனால் நன்மைகள் உண்டாகும்.

கடவுள் படங்களை மேற்கு அல்லது தெற்குச் சுவரில் மாட்ட வேண்டும், அப்போது தான் அவை முறையே கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கியிருக்கும், கடவுள் படங்கள் மாட்டப் பட்டிருக்கும் உயரத்திற்கு மேலே எந்தப் பொருளும் மாட்டப் கூடாது.

பூஜை அறையில் கடவுள்களின் உருவத்திற்கு மலர்கள் போடும்போது அந்தக் கடவுள்களின் முகமும், பாதமும் மலர்களால் மறைந்து விடாதபடிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பூஜை அறையில் விளக்குகளை தெற்கு அல்லது வடக்கு நோக்கி வைக்கக் கூடாது.

Advertisement