வீட்டின் வாஸ்து கோளாறுகள் நீங்க வளர்க்க வேண்டிய செடி மற்றும் மரங்கள். இவற்றை மட்டும் நமது வீட்டில் வளர்த்தால் போதும் எந்தவித வாஸ்துகோளாறறுகளும் இவற்றின் மூலம் சரியாகிவிடும்

vasthu
- Advertisement -

பலருக்கும் வாஸ்து என்பது உண்மையா? பொய்யா? அவற்றினால் உண்டாகும் பலன்கள் நன்மையா? தீமையயா? என்னும் சந்தேகம் இருக்கிறது. வீடு கட்டுவதற்கு முன்பு வாஸ்து பார்க்க வேண்டும். அப்படி இல்லாமல் கட்டிய வீடாக இருந்தால் அதில் வாஸ்து சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அப்படியே அனைத்தையும் சரி பார்த்து வீடு கட்டிய பின்னரும் அதில் ஏதாவது ஒரு சிறிய வாஸ்து கோளாறுகள் இருந்தது என்றால் நமது வீட்டில் வளர்க்கக்கூடிய செடி மற்றும் மரங்கள் மூலம் இவற்றை சரி செய்ய முடியும். அப்படி அனைவரது வீட்டிலலும் வளர்க்க வேண்டிய மரம் மற்றும் செடிகளை பற்றியும், அவற்றை எந்த திசையில் திசையில் வைத்து வளர்த்தால் சரியான பலன் கிடைக்கும் என்பதைப் பற்றியும் இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

vasthu

வீட்டில் தீராத கஷ்டம் இருந்துகொண்டே இருக்கிறது, பிரச்சினைக்கு மேல் பிரச்சினை வந்து கொண்டிருக்கிறது என பலரும் வீட்டின் வாஸ்துவை சரி பார்ப்பார்கள். அப்படி அந்த வீட்டில் வாஸ்து பிரச்சனை இருந்தது என்றால் வீட்டின் அமைப்பை மாற்ற வேண்டிய அவசியம் கிடையாது. அதற்கு பதிலாக பலவித பூஜை முறைகளும், பரிகாரங்களும் இருக்கிறது. அவற்றில் எது எளிமையானபரிகாரமமோ நம்மால் எதனை செய்யமுடியுமோ அதனை முறையாக செய்து வாஸ்த்து பிரச்சனையை சரி செய்ய முடியும்.

- Advertisement -

அவ்வாறு கோமதி சக்கரத்தை வீட்டின் பூஜை அறையில் வைப்பதன் மூலமும், வலம்புரி சங்கை பூஜை அறையில் வைத்து பூஜிப்பது மூலமும் வாஸ்து பிரச்சனைகளை சரிசெய்ய முடியும். அவ்வாறு இவற்றை முறையாக செய்ய தெரியாதவர்கள் வீட்டில் சில செடி மற்றும் மரங்கள் வளர்ப்பதன் மூலம் வாஸ்து கோளாறில் இருந்து தப்பிக்க முடியும்.

komathi-sakaram

வாசனை மலர்களான ஜாதி முல்லை, மல்லி, சாமந்தி, பாரிஜாதம் போன்ற பூச்செடிகளை வளர்ப்பதன் மூலம் எந்தவித வாஸ்து பிரச்சனையாக இருந்தாலும் அவற்றில் இருந்து விடுபட முடியும். அவ்வாறு பப்பாளி மரத்தையும் கருவேப்பிலை மரத்தையும் தனித்தனியாக வளர்க்கக்கூடாது. கருவேப்பிலை ஆண் மரமாகும். பப்பாளி பெண் மரமாகும். இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து வளர்ப்பதாக இருந்தால் இவற்றை வீட்டில் வளர்க்கலாம்.

- Advertisement -

அவ்வாறு முருங்கை மரம் மற்றும் மாமரத்தை வீட்டின் வாசலில் நமது கண்ணில் படுமாறு வளர்க்கக்கூடாது. வீட்டின் பக்கவாட்டிலோ அல்லது பின்புறத்திலோ இந்த மரங்களை வளர்க்கலாம். அதுபோல தென்னை மரத்தை ஒற்றையாக வளர்க்கக்கூடாது. இரண்டு தென்னை மரங்களாக வளர்க்க வேண்டும். பின்னர் துணை இல்லாத வாழை மரத்தை வெட்டுவது என்பது குடும்பத்திற்கு நன்மை கொடுக்காது.

paneer-rose-plant

கற்பூரவள்ளி, ரோஜா, திருநீற்றுப்பச்சை, துளசி போன்ற மகாலட்சுமியின் அம்சம் நிறைந்த செடிகளை தவறாமல் வீட்டில் வளர்த்திட வேண்டும். இவற்றை வளர்ப்பதன் மூலம் வீட்டிற்கு மகாலட்சுமியின் அதிர்ஷ்டம் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் பெரும் பிரச்சனையை கொடுத்துக்கொண்டிருக்கும் வாஸ்து கோளாறாக இருந்தாலும் அவற்றிலிருந்தும் எளிதில் விடுபட முடியும்.

- Advertisement -