வாஸ்து தோஷங்களை நீங்கச்செய்யும் எளிய மந்திரம் மற்றும் பரிகாரம்

vasthu

இந்த காலத்தில் சென்னை போன்ற பெருநகரங்களில் வீடு வாங்கி கட்டுவதென்பது சாதாரண விடயமில்லை. கஷ்டப்பட்டு வீடு கட்டிய பிறகும் சில வீடுகளில் நிம்மதி நிலைப்பதில்லை. இதற்கு முக்கிய காரணம் வாஸ்து சரி இல்லாமல் இருப்பதே. வீட்டில் உள்ள அணைத்து வாஸ்து பிரச்சனைகளும் நீக்க சில பரிகாரங்கள் மற்றும் மந்திரம் உள்ளன. வாருங்கள் அதை பற்றி விரிவாக பார்ப்போம்.

வாஸ்து பகவான் காயத்திரி மந்திரம்:

ஓம் அனுக்ரகரூபாய விதமஹே
பூமி புத்ராய தீமஹி
தந்நோ வாஸ்து புருஷ ரசோதயாத்

தினமும் 27 முறை வாஸ்து காயத்திரி மந்திரம் ஜெபித்தால் வீட்டில் உள்ள அனைத்து தோஷங்களும் விலகும்.

  • வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றுவது நலம் தரும்.
  • திருநாகேஸ்வரம் சென்று ராகுகாலத்தில், ராகுவுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது நன்மை தரும்.
  • பவுர்ணமி தினத்தில் அழகர் கோவிலில் உள்ள தீர்த்த தொட்டியில் குளித்து ராக்காயி அம்மனுக்கு எலுமிச்சை பழம் மாலை அணிவிப்பது சிறப்பு தரும்.
  • ராகுவுக்கு மந்தாரை மலர் வைத்து வழிபாடு செய்யலாம்.
  • காளஹஸ்தி சென்று சிவனை தரிசனம் செய்து விட்டு அதன் பின்னர் ராகுவுக்கு நாக சாந்தி செய்வதும் பலன் தரும்.

இதையும் படிக்கலாமே:
வாஸ்து படி பூஜை அரை, பண பெட்டி அரை போன்றவை எங்கு இருக்க வேண்டும்.

English Overview:
Here we have vastu mantra in Tamil and also we have specified some vastu pariharam here. By following all these one can get away from vastu dhosa.