வீட்டு விலங்குகள் குறித்த வாஸ்து விதிகள் பற்றி தெரியுமா?

vastu-for-animals

மனிதர்கள் இந்த பூமியில் தோன்றும் போதே அந்த மனிதனுக்கு துணையாகவும், உதவியாகவும் இருக்கும் வகையில் இயற்கை பல விலங்குகள் மற்றும் பறவைகளை தோற்றுவித்திருக்கிறது. மிக சிறந்த ஞானிகள் அனைவரும் விலங்குகளும் மனிதனுக்கு நிகராக இப்பூமியில் வாழ்கின்ற உரிமை கொண்டது என்றும், இறைவனின் அம்சம் கொண்டது என்றும் போற்றியுள்ளனர். பல நூற்றாண்டுகளாகவே மனிதனை அண்டி வாழும் வீட்டு விலங்குகள் மனிதர்களால் வளர்க்கப்பட்டு வருகின்றன. வாஸ்து சாஸ்திரத்திலும் வீட்டு விலங்குகளை பற்றிய சில விதிகளை கூறுகின்றன அவை என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

cow shed

இந்திய நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மாடுகள் வளர்ப்பில் ஈடுபடும் ஒரு நாடாகும். இங்கு மாடுகள் என்பது வெறும் விலங்காக கருதப்படாமல் வீட்டிற்கு செல்வ வளத்தை தரும் இறைவனின் அம்சம் கொண்ட ஒரு சக ஜீவனாக மதித்தார்கள். பெருநகரங்களில் யாரும் மாடுகள் வளர்பதில்லை. கிராமங்கள், புறநகர பகுதிகளில் மாடுகள் வளர்க்கும் மக்கள் தங்கள் வீட்டின் வடக்கு, மேற்கு, வடமேற்கு, தென்கிழக்கு ஆகிய பகுதிகளில் மாட்டு தொழுவங்கள் அமைப்பதால் மாடுகள் பல்கி பெருகுவதோடு, மிகுந்த பால் தந்து உங்களுக்கு செல்வ செழிப்பை தரும்.

இறைச்சி மற்றும் பால் தேவைகளுக்காக ஆடுகள் வளர்ப்பவர்கள் தங்களின் வீடுகளில் தென்கிழக்கு, வடமேற்கு பகுதியில் ஆடுகொட்டிலை அமைப்பதால் ஆடுகள் ஆரோக்கியமாக வளரும். அதிக குட்டிகளை ஈனும். முட்டை மற்றும் இறைச்சி தேவைகளுக்காக கோழிகள் வளர்ப்பவர்கள் இதே வடமேற்கு, தென்கிழக்கு பகுதிகளில் கோழிக்கூண்டு அமைப்பதால் கோழிகள் அடிக்கடி நோய் தாக்கத்திற்கு உள்ளாகாமல் முட்டைகளையும் அதிகம் இடும்.

tibetan mastiff dog

ஆதிகால மனிதனின் நட்பை முதன் முதலில் பெற்ற விலங்கு நாய் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தனக்கு உணவிடும் மனிதனுக்கு நன்றியுணர்வோடு இருக்கின்ற நாயானது, மனிதனையும் அவனது உடமைகளையும் பாதுகாக்கும் ஒரு நம்பிக்கைக்குரிய தோழனாக இருக்கிறது. வீட்டில் காவலுக்கு நாய் வளர்ப்பவர்கள் வீட்டின் வடமேற்கு மற்றும் தென்கிழக்கு மூலையில் நாய் வசிப்பதற்கான கூண்டு அமைக்கலாம். இத்தகைய இடங்களில் நாய் இருப்பதால் நாய் மந்த நிலை அடையாமல் எப்போதும் விழிப்புணர்வு தன்மையோடும், சுறுசுறுப்பாகவும் வீட்டை காவல் புரியும். இதற்கு நேர்மாறாக வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளில் நாய்க்கூண்டை அமைத்தால் வீட்டிற்கு பைரவ தோஷம் ஏற்படுவதோடு, வளர்க்கும் நாய் வீட்டை விட்டு ஓடுதல் அல்லது திடீர் மரணம் அடையும் நிலை உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
சுவர் கடிகாரம் மாட்டும் முறை

இது போன்று மேலும் பல வாஸ்து சாஸ்திரம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Vastu for animal in Tamil. It is also called Vastu for animal shed in Tamil or Vastu veetu vilangugal in Tamil or Pannai veedu vastu in Tamil or Vastu vilangugal in Tamil.