ஒவ்வொரு சனிக்கிழமையில் தலைவாசலில் இதை மட்டும் செய்தால் வீட்டில் சண்டை, சச்சரவுக்கே இடமில்லையாம் தெரியுமா?

vasal-lakshmi-door
- Advertisement -

நிம்மதி என்பது இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. நிம்மதியை பெறுவது, ஒன்று நம் கையில் உள்ளது. இன்னொன்று மற்றவர்கள் கையில் உள்ளது. நம்மை நாமே திருத்திக் கொண்டு நிம்மதியாக இருந்தாலும், மற்றவர்களால் வரக்கூடிய துன்பத்தின் மூலம் நிம்மதி பறி போய் விடுகிறது. இப்படி சதா சண்டை, சச்சரவுகள் உள்ள குடும்பத்தில் தொடர்ந்து ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் தலைவாசலில் இதை செய்து வர நிச்சயம் நல்ல ஒரு மாற்றம் தெரியும். சனிக்கிழமைகளில் தலைவாசலில் நாம் செய்ய வேண்டிய விஷயம் என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தலைவாசல் பகுதியில் எப்பொழுதும் தெய்வங்கள் குடியிருப்பதாக ஐதீகம் உண்டு. எனவே தான் வீடு கட்டும் பொழுது தலைவாசலுக்கு என தனியாக பூஜைகள் செய்யப்படுகிறது. வாசலை தானே வைக்கப் போகிறோம் என்று யாரும் அப்படியே வைத்து விடுவது கிடையாது. அதற்கென பிரத்யேகமான பூஜைகள் முறையாக செய்யப்பட்ட பின்பு வாசல் கதவை வீட்டிற்கு அரணாக அமைக்கப்படுகிறது. தலைவாசல் சரியாக இல்லாத வீடுகளில் துர் சம்பவங்கள் நிகழும் என்கிறது வாஸ்து சாஸ்திரம்.

- Advertisement -

எத்தகைய வாஸ்து குறைபாடுகளையும் நீக்கி, குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இல்லாமல் ஒற்றுமையுடன் வாழ செய்யும் இந்த எளிய பரிகாரத்தை ஒவ்வொரு சனிக்கிழமையும் தவறாமல் நீங்கள் செய்து வந்தால் நிச்சயம் நல்ல ஒரு பலனை காணலாம். பண்டைய காலங்களில் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் விசேஷ காலங்களில் மாவிலை தோரணங்களை காட்டுவது உண்டு. மாவிலை மகாலட்சுமியை வரவேற்கும் என்பதாலும், வீட்டிற்குள் துர் சக்திகளையும், துர் தேவதைகளையும் வரவிடாமல் தடுக்கும் என்பதாலும் இவ்வாறு செய்யப்படுகிறது.

மாவிலை தோரணம் எண்ணிக்கை:

வாஸ்து குறைகளை எளிதாக நீக்கக்கூடிய அற்புதம் வாய்ந்த இந்த பரிகாரத்தை சனிக்கிழமைகளில் உங்கள் தலைவாசலில் செய்யுங்கள். இதற்கு 11 மாவிலைகளை நீங்கள் தயார் செய்து கொள்ள வேண்டும். உங்கள் வீட்டில் மாமரம் இருந்தால் இன்னும் வசதியாக இருக்கும். ஒவ்வொரு சனிக்கிழமையும் 11 நல்ல மாவிலைகளை எடுத்து தோரணமாக கட்டி அதனை தலைவாசலில் தொங்க விட வேண்டும். ஒரு சனிக்கிழமை தவறினாலும், இன்னொரு சனிக்கிழமையில் தான் இதனை செய்ய வேண்டும்.

- Advertisement -

ஒரு சனிக்கிழமையில் தோரணம் கட்டிய பின்பு அடுத்த சனிக் கிழமையில் நீங்கள் புதிய தோரணத்தை தயார் செய்து வைத்து கொண்டு பின்னர் பழைய தோற்றத்தை எடுத்துவிட்டு கட்ட வேண்டும். எப்போதும் புதிய தோரணம் வீட்டின் தலைவாசல் பகுதியில் தொங்கி கொண்டு இருந்தால் அந்த குடும்பத்தில் சண்டை, சச்சரவுகளுக்கு வாய்ப்பே கிடையாது என்கிறது சாஸ்திரம். ரொம்பவே சுலபமாக செய்யக்கூடிய இந்த சக்தி வாய்ந்த பரிகாரத்தை நீங்களும் செய்து பார்த்தால் உங்களுக்கே அதன் அற்புதம் புரியும்.

இந்த மாவிலை தோரணம் வீட்டில் நல்ல அதிர்வுகளை உண்டு பண்ணும். தேவையற்ற கெட்ட சக்திகளை வெளியேற்றி, மனதை அமைதிப்படுத்தும் அற்புத ஆற்றல் படைத்தது. குடும்பத்தில் தேவையற்ற சண்டை, சச்சரவுகள் இல்லாமல் சாந்தமாக கொண்டு செல்லவும், மகாலட்சுமியின் அருளைப் பெறவும் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் இவ்வாறு செய்து கொள்வது நல்லது. மாவிலைத் தோரணம் இருக்கும் இல்லத்தில் பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றை ஏவி விடவும் முடியாது. பல ஆன்மீக ரீதியான நற்பலன்களை கொடுக்கக்கூடிய இந்த மாவிலை தோரணத்தை உங்கள் வீட்டிலும் கட்டி தொங்க விடுங்கள்.

- Advertisement -