வீட்டில் எத்தகைய வாஸ்து குறையும் நீங்க தண்ணீரில் இந்த 1 பொருளை போட்டு மூலையில் வையுங்கள்! தடைகள் விலகி நன்மைகள் நடக்கும்.

spadiga-lingam-vastu

ஒவ்வொரு வீட்டின் அமைப்பு வாஸ்து முறைப்படி தான் அமைக்கபடுகிறதா? என்று கேட்டால் இல்லை என்று தான் கூற வேண்டும். இப்படி வாஸ்து குறைபாடு உள்ள வீடுகளில் ஏதாவது ஒரு பிரச்சனை தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். நமக்கு தெரியாமலேயே நம் வீட்டின் அமைப்பும், நம்முடைய பிரச்சினைக்கும் தொடர்பு உண்டாகிவிடும். இதையே வாஸ்து குறைபாடு என்கிறோம். இந்த குறைபாடு இருப்பவர்களுக்கு பெரும்பாலும் பல்வேறு நிபுணர்கள் வீட்டின் புதிய கட்டமைப்பை பரிந்துரை செய்வார்கள். அதையெல்லாம் செய்ய முடியாதவர்கள் எளிதாக வீட்டிலேயே வாஸ்து குறை நீங்க இந்த பரிகாரம் செய்யலாம். அப்படியான ஒரு சிறந்த பரிகாரத்தை பற்றி தான் இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

vastu-direction

வாஸ்து பார்த்து உங்கள் வீடு கட்ட படாவிட்டாலும் அதன் பின் நடக்கும் சிறு சிறு பிரச்சனைகளுக்கு கூட வாஸ்து குறை இருக்குமோ? என்கிற பயம் உண்டாகிறது. ஒரு வீட்டில் தொடர்ந்து வீண்விரயம் ஆகிக் கொண்டே இருக்கிறது என்றால் உடனே உங்களுக்கு தெரிந்த வாஸ்து சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டு வாஸ்து குறைபாடு இருப்பதாக நீங்களே நினைத்துக் கொள்வீர்கள். அதைப் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள முயற்சிக்கும் பொழுது உங்களுக்கு என்ன மாதிரியான வாஸ்து குறைபாடு இருக்கிறது? என்பது தெரியவரும்.

இது இன்று பலருக்கும் நடக்கும் ஒரு சாதாரண விஷயமாக தான் இருந்து வருகிறது. அப்படி வாஸ்து குறைபாடு இருந்தாலும் அதை இடித்து இப்படி மாற்றுங்கள்! இதை இடித்து அப்படி மாற்றுங்கள் என்று கூறுவார்கள். அதையெல்லாம் செய்வதற்கு வசதி இருப்பவர்கள் பணத்தைப் பற்றி யோசிக்காமல் தாராளமாக செய்து விடுவார்கள். ஆனால் ஏற்கனவே வீண் விரயங்களை சந்தித்துக் கொண்டிருக்கும் வசதியற்ற குடும்பத்தினர் என்ன செய்வார்கள்? வாஸ்து குறை பாட்டை எந்த ஒரு செங்கல்லிலும் கையை வைக்காமல் எளிமையான பரிகாரம் மூலம் நிவர்த்தி செய்து கொள்ள முடியும்.

crystal-lingam1

உங்கள் வீட்டில் வாஸ்து குறைபாடு இருப்பதை உறுதி செய்து கொண்டால்! ஒரு சிறிய கண்ணாடி பௌலில் சுத்தமான தண்ணீரை நிரப்பி, அதில் ஸ்படிக லிங்கம் போட்டுக் கொள்ளுங்கள். ஸ்படிக லிங்கம் பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களில் அமைக்கப்பட்டிருக்கும் கடைகளில் கிடைக்கும். சிறிய அளவிலான ஸ்படிக லிங்கத்தை போட்டால் கூடப் போதும். அதில் சிறிதளவு பன்னீரை ஊற்றிக் கொள்ளுங்கள். வீட்டின் வரவேற்பறையில் இதனை வைத்து விட்டால் போதும். எந்த ஒரு வாஸ்து குறைபாடும் உங்களை ஒன்றும் செய்ய முடியாது.

- Advertisement -

வாஸ்துவினால் ஏற்படும் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அவைகள் நீங்கி பல்வேறு நன்மைகள் நடைபெறும். வாரம் ஒருமுறை அதிலிருக்கும் தண்ணீரை மாற்றி விட்டு புதியதாக தண்ணீரையும், பன்னீரையும் சேர்த்து மீண்டும் அதே இடத்தில் வைத்து விடுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் வாஸ்து பிரச்சனை எதுவும் உங்களை நெருங்க கூட செய்யாது. வாஸ்து குறைபாடு என்பது சாதாரண பிரச்சனை அல்ல. சில வீடுகளில் எல்லாம் துர்மரணங்கள் கூட வாஸ்துவினால் நிகழ்ந்துள்ளன.

kadavu-vastu

அதுவரை நன்றாக இருந்தவர்கள் புதிய வீட்டில் குடியேறிய உடன் மரணங்களை சந்திப்பதும், அந்த குடும்பமே பிரிந்து தனித்தனியாக சென்று விடுவதையும் பார்த்திருப்போம். எனவே வீடு கட்டும் பொழுது வாஸ்து குறைபாடுகள் இல்லாமல் அமைத்துக் கொள்வது நல்லது. மேலும் வாஸ்து குறைபாடு நீங்க வீட்டை சுற்றிலும் பசுமையான மரங்கள் வளர்ப்பது நல்ல தீர்வாக இருக்கும். வீட்டைச் சுற்றி மரங்கள் வளர்ப்பது வாஸ்து குறைபாட்டை நீக்கும் என்கிறது வாஸ்து சாஸ்திரம்.

இதையும் படிக்கலாமே
உங்கள் வீட்டின் வடகிழக்கில் இதெல்லாம் இருந்தால்! இந்த கஷ்டங்கள் எல்லாம் உங்களுக்கு நிச்சயம் வரும் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான வாஸ்து சார்ந்த தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.