வீட்டில் வாஸ்து குறைபாட்டால் தேவையற்ற பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கின்றதா? இந்த மந்திரத்தை 48 நாட்கள் உச்சரித்து பாருங்களேன்!

mantra-vastu-kumbam

ஒருவருக்கு வீட்டில் வாஸ்து சரியாக இல்லை என்றால், கட்டாயம் அவர்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் தடைபடும் என்று சொல்கிறது ஜோதிடம். வாடகை வீட்டில் இருப்பவர்களாக இருந்தாலும், சொந்த வீட்டில் இருப்பவர்களாக இருந்தாலும், முடிந்தவரை வீட்டின் அமைப்பு, குடும்பத் தலைவரின் ஜாதகத்திற்கு ஏற்ப அமைவது தான் நல்லது. அதாவது குடும்பத் தலைவருக்கு ஏற்ற திசையிலாவது அவரவர் வசிக்கும் வீட்டை பார்த்துக்கொள்ள வேண்டும். சரி. அப்படி முடியாதபட்சத்தில் என்ன செய்வது? எல்லோராலும் வாடகை வீட்டை, தங்களுடைய ஜாதக கட்ட படி தேர்ந்தெடுத்துக் கொள்வது என்பது சாத்தியம் இல்லை. சொந்த வீடாக இருந்தாலும் 100 சதவிகிதம் வாஸ்து சரியாகத்தான் அமைத்திருக்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது.

vastu 1

எடுத்துக்காட்டுக்கு, உங்களுடைய வீட்டு வாசல் காலை எடுத்துக் கொள்வோம். வாசல்கால், செங்குத்தாக நேராகத் தான் அமைந்திருக்க வேண்டும். அதாவது நம்முடைய நில வாசல் வாசப்படி, முன்வாசல் வாசல் சட்டம் எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளலாம். உங்களுடைய அந்த நில வாசல்கால் ஆனது, வீட்டின் உள் பக்கமுபம் சாய்ந்து இருக்கக்கூடாது. வீட்டின் வெளி பக்கமும் சாய்ந்து இருக்கக் கூடாது. இதை பார்க்கும் போது நமக்கு தெரியாது.

அந்த வாசல் காலை பொருத்தும் போது, சில சமயம் அது உள்பக்கம் லேசாக சாய்ந்து இருக்கவும். அல்லது வெளிப்பக்கம் லேசாக சாய்ந்து இருக்கவும் அதிக வாய்ப்பு இருக்கிறது. பல பேர் வீடுகளில், ஆசாரிகளுக்கு தெரியாமலேயே அப்படி அமைந்துவிடும். வாசல் கால் சரியாகப் பொருத்தப்படாத பட்சத்திலும் வீட்டில் பிரச்சனைகள் அதிகரிக்கும். குறிப்பாக கணவன்-மனைவிக்குள்!

anger

ஆனால் வாசல் காலினால் தான், பிரச்சனை என்று நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. இதனால் வீட்டில் பிரச்சினை என்று பல பரிகாரங்களை செய்து கொண்டு வருவோம். பிரச்சனை தீர்ந்த பாடாக இருக்காது. வீட்டில் நிம்மதியான மகிழ்ச்சியான, வாழ்க்கையும் அமையாது. இப்படி உங்கள் வீட்டில் இருக்கும் சின்ன சின்ன குறைபாடுகள் கூட, பெரிய பெரிய அளவில் தாக்கங்களை உங்களுக்கு கொடுக்காமல் இருக்க வேண்டும் என்றால் உச்சரிக்கப்பட வேண்டிய ஒரு மந்திரம் உள்ளது.

- Advertisement -

இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டால் வாஸ்து தோஷம் எல்லாம், சரியாகிவிடும் என்று கூறிவிடமுடியாது. உங்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறைக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. உங்களுக்கான மந்திரம் இதோ!

mantra sign

மந்திரம்:
‘ஓம் ரீம் ஆம்’

இதை சொல்லி விட்டால் எல்லாம் சரியாகி விடுமா? என்ற எண்ணத்தோடு உச்சரித்தால் இது கட்டாயம் பலிக்காது. சூரிய உதயத்திற்கு முன்பாகவே எழுந்து, சுத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து, வாஸ்து பகவானை மனதார நினைத்து, சம்மணம் போட்டு ஒரு பாறையின் மீது அமர்ந்து, 108 முறை தொடர்ந்து 48 நாட்கள் உச்சரித்து பாருங்கள். நல்ல முன்னேற்றம் இருப்பது போல, உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் மட்டும், தொடர்ந்து வழிபாட்டை செய்யுங்கள்.

எதையுமே நம்பிக்கையோடு செய்யும் பட்சத்தில் உங்கள் கையில் ஒரு பிடி மண்ணை எடுத்தால் கூட, அது பொன்னாக மாறிவிடும். இல்லை என்றால், நீங்கள் எடுக்கும் பொன் கூட மண்ணாய், மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. நம்பிக்கை தான் வாழ்க்கை! என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
தொட்டதெல்லாம் வெற்றி அடைய தினமும் சொல்ல வேண்டிய 4 எழுத்து மந்திரம்! மன அழுத்தம் காணாமலே போய்விடும்.

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Vastu manthiram in Tamil. Vastu problem solution in Tamil. Vastu mantras in Tamil. Vasthu sastram in Tamil. Vastu mantra in Tamil.