படுக்கை அறை முதல் குளியல் அறை வரை பல்வேறு அறைகளின் வாஸ்து குறித்த ஒரு சிறப்பான தகவல் இதோ.

vasthu
- Advertisement -

ஒரு வீடு என்பது நாம் மற்றும் நமது சந்ததியினர் பல்லாண்டு காலம் வாழ வேண்டிய ஒரு இடமாகும். எனவே அந்த வீட்டை சரியான முறையில் கட்டுவதற்கு நமது முன்னோர்கள் கண்டுபிடித்த அற்புதமான ஒரு சாஸ்திர முறை தான் வாஸ்து சாஸ்திரம். வாஸ்து சாஸ்திரத்தில் நமக்கு எத்தனையோ தேவையான அற்புதமான விடயங்கள் உள்ளன. அவற்றில் ஒரு சில முக்கியமான வாஸ்து குறிப்புகளை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

தற்காலத்தில் பலரும் தங்கள் வீடுகளில் வரவேற்பறையில் தொலைக்காட்சி பெட்டியை வைக்கின்றனர். ஒரு சிலர் வரவேற்பு அறை மற்றும் தங்கள் படுக்கை அறை என இரண்டு அறைகளிலும் தொலைக்காட்சி பெட்டியை வைத்து பயன்படுத்துகின்றனர். முடிந்தவரை தொலைக்காட்சிப் பெட்டியை படுக்கை அறையில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். தொலைக்காட்சி பெட்டி, கணினி போன்ற இதர மின்னணு சாதனங்களையும் படுக்கையறையில் வைத்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பொதுவாக ஒரு வீட்டின் தென்கிழக்கு பகுதியில் மட்டுமே தொலைக்காட்சி, கணினி போன்ற மின்னணு சாதனங்களை வைத்து பயன்படுத்த வேண்டும்.

- Advertisement -

படுக்கை அறை சுவர்களில் நீர்நிலைகளை காட்டும் வால்பேப்பர் ஒட்டுவதையும், உயிருள்ள வண்ண மீன் தொட்டிகளை வைப்பதையும் தவிர்க்க வேண்டும். இத்தகைய நீர் நிலை தொடர்பான பொருட்களை படுக்கையறையில் வைப்பதால் அந்த அறையில் படுத்து உறங்குபவர்களுக்கு மனக்குழப்பம், நிம்மதியின்மை போன்றவை ஏற்படும்.

ஒரு சிலர் தங்கள் வீடுகளின் உள்ளே அமைக்கப் பட்டிருக்கின்றன குளியலறை கதவுகளை எப்போதும் திறந்து வைத்திருக்கும் பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள். இப்படி வீட்டுக்குள்ள இருக்கின்ற குளியலறை கதவுகளை எப்போதும் திறந்து வைத்தால் அவ்வீட்டில் லட்சுமி கடாட்சம் விலகி, செல்வ வளம் குன்றும் நிலை ஏற்படும்.

- Advertisement -

பொதுவாக வீடுகளில் கதவுகள் வீட்டின் உட்புறமாக திறக்கும் வகையிலும், அவ்வீட்டின் ஜன்னல்கள் வீட்டிற்கு வெளிப்புறமாக திறக்கும் வகையிலும் அமைக்கப்பட வேண்டும். உங்கள் வீட்டிற்கருகில் காலி மனை இருந்து அதில் முட்செடிகள் அதிகமாக வளர்ந்தால், அந்த முட்செடிகளின் நிழல் உங்கள் வீட்டிற்குள் படுவதை எவ்வகையிலாவது தடுக்க வேண்டும்.

தற்காலத்தில் பலரும் தங்கள் வீட்டின் தரையில் மார்பில் கற்களை பதிக்கின்றனர். வாஸ்து சாஸ்திரத்தில் மார்பில் கல் ஒரு தெய்வீக சக்தி வாய்ந்த கல்லாக கருதப்படுன்கிறது. எனவே வீட்டில் மார்பிள் கல் பதிக்கப்பட்டிருக்கும் இடங்களில் விலங்குகளின் தோலாலான காலணிகளை அணிந்து நடப்பதையும், அந்த மார்பில் கல்லின் மீது அந்த காலணிகளை கழற்றி வைப்பதையும் அறவே தவிர்க்க வேண்டும்.

நகர்ப்புறங்களில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளில் சிலவற்றில் வீட்டிற்குள்ளாக குளியலறை – கழிவறையை ஒட்டியே பூஜை அறை அமைக்கப்பட்டிருப்பதை நாம் கண்டிருப்போம். பொதுவாக கழிவறை – குளியலறையை ஒட்டி பூஜையறை அமைப்பதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். இத்தகைய அமைப்பு இருக்கின்ற வீடுகளில் வசிப்பவர்களுக்கு எவ்விதமான மேன்மையான பலன்களும் ஏற்படாது.

பெரும்பாலும் எந்த ஒரு வீட்டின் பூஜை அறையும் கிழக்கு திசை அல்லது வடக்கு திசையை நோக்கியவாறே அமைக்கப்பட்டிருக்கும். பூஜை அறை எந்த திசையில் அமைந்திருந்தாலும் அந்த பூஜையறையில் அமர்ந்து பூஜை செய்பவர்கள் வட கிழக்கு திசையை நோக்கி அமர்ந்தவாறு பூஜை செய்தல், மந்திரம் துதித்தல் போன்ற செயல்களை செய்வது சாலச் சிறந்ததாகும்.

- Advertisement -