வற்றாத செல்வம் பெற வசம்பு பரிகாரம்

mahalakshmi vasambu
- Advertisement -

ஒருவருக்கு வீண் விரயம் ஏற்பட்டு கொண்டு இருக்கிறது, மருத்துவ செலவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்னும் பட்சத்தில் அவருக்கு எவ்வளவுதான் பணவரவு வந்தாலும் அவை ஒன்றுமில்லாமல் போய்விடும். இன்னும் சிலர் இருக்கிறார்கள் வீண்விரயம் என்பது ஏற்படாது, தேவையற்ற செலவுகளையும் செய்ய மாட்டார்கள் ஆனால் அவர்களுக்கு பணவரவு ஏற்படுவதில் தடைகள் இருக்கும். இப்படி பணவரவில் தடைகள் இருந்தாலும் வீண் விரயம் ஏற்பட்டிருந்தாலும் மகாலட்சுமி தாயாரை நினைத்துக் கொண்டு வசம்பை வைத்து எந்த முறையில் வெள்ளிக்கிழமையில் தாந்திரீக பரிகாரம் செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பண தொடர்பான பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து வைக்கக்கூடிய தெய்வமாக மகாலட்சுமி தாயார் திகழ்கிறார். அப்படிப்பட்ட மகாலட்சுமி தாயாருக்குரிய கிழமையாக வெள்ளிக்கிழமை திகழ்கிறது. வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி தாயாரை வழிபடுவதும் மகாலட்சுமி தாயார் குரிய பூஜைகளை செய்வதும் நமக்கு செல்வ செழிப்பை அதிகரித்து தரும். அதிலும் குறிப்பாக மகாலட்சுமி தாயாருக்கு விருப்பமான பொருட்களை வைத்து செய்யும் பொழுது அதன் பலன் இன்னும் அதிகமாக இருக்கும்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்று இரவு 10 மணிக்குள் செய்து முடித்து விட வேண்டும். முடிந்தவரை சுக்கிர ஹோரையில் செய்வது மிகவும் சிறப்பு. சுக்கிர ஹோரையில் கல் உப்பை வீட்டிற்கு வாங்கி வர வேண்டும். பிறகு ஒரு கண்ணாடி கிண்ணம், பீங்கான் கிண்ணம் அல்லது மண் கிண்ணம் இவை மூன்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதை சுத்தம் செய்து ஈரம் இல்லாமல் துடைத்துக் கொள்ளுங்கள்.

அதற்கு சந்தனம் குங்குமம் வைத்து அதில் ஒரு கைப்பிடி அளவு வாங்கி வந்த கல்லுப்பை வைக்க வேண்டும். சமையலுக்கு பயன்படுத்திய கல் உப்பை உபயோகப்படுத்த கூடாது. கல் உப்பு என்பது மகாலட்சுமியின் அம்சமாகவே கருதப்படுகிறது. பிறகு இதில் ஒரு சிறிய துண்டு வசம்பை வைக்க வேண்டும். செல்வத்தை நம் வசப்படுத்தும் என்பதால் தான் இதற்கு வசம்பு என்றே பெயர் வந்ததாம். பிறகு இதனுடன் ஒரு ரூபாய் நாணயத்தையும் வைக்க வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக பணவரவை அதிகரிக்க கூடிய ஏஞ்சல் எண்ணான 520741 என்னும் எண்ணை கோடு போடாத ஒரு வெள்ளை நிற பேப்பரில் பச்சை நிற மையை பயன்படுத்தி எழுதி அதையும் இதில் வைக்க வேண்டும். இவை மூன்றும் தெரியாத அளவிற்கு மறுபடியும் கல்லுப்பை எடுத்து அதற்கு மேல் வைத்து மூடி விடுங்கள்.

இப்பொழுது இந்த கிண்ணத்தை உங்களுடைய இரண்டு கையிலும் வைத்துக் கொண்டு உங்களுடைய குலதெய்வம், இஷ்ட தெய்வம், மகாலஷ்மி தாயார், சுக்கிர பகவான் இவர்கள் அனைவரையும் மனதார நினைத்துக் கொண்டு உங்களுக்கு எந்தெந்த வகையில் எல்லாம் பணவரவு வருமோ அவை அனைத்தும் நல்லவிதமாக நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு வேண்டி முடித்த பிறகு இந்த கிண்ணத்தை பூஜை அறையிலோ அல்லது சமையலறிலோ யார் கண்ணும் படாத அளவிற்கு மறைவாக வைத்து விட வேண்டும். ஒரு மாதம் வரை இந்தக் கிண்ணத்தை நீங்கள் தொடவே கூடாது. அதே இடத்தில் தான் இருக்க வேண்டும். ஒரு மாதம் முடிந்த பிறகு இதில் இருக்கக்கூடிய வசம்பை கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். ஒரு ரூபாயை ஏதாவது செலவிற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். அந்த பேப்பரை எரித்து அதன் சாம்பலை கால்படாத இடத்தில் போட வேண்டும். உப்பை தண்ணீரில் கரைத்து ஊற்றி விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: கஷ்டங்கள் தீர ஆனி மாதத்திற்கு செல்ல வேண்டிய கோவில்

மகாலட்சுமி தாயாரின் அம்சம் பொருந்திய இந்த பொருட்களை வைத்து இந்த தாந்திரீக பரிகாரத்தை செய்வதன் மூலம் மகாலட்சுமி அருள் பரிபூரணமாக கிடைக்கும். வீன் விரயம் குறையும். பண வரவு அதிகரிக்கும். செல்வம் பெருகும்.

- Advertisement -