இவர்கள் பரம்பரையே கொடிகட்டி வாழ்ந்த பரம்பரை! என்ற பேச்சை வரும் காலங்களில் உங்கள் ஊரே பேசும். அந்த அளவிற்கு உங்கள் குடும்பம் செல்வ செழிப்போடு வளர எந்த திரியில், என்ன தீபம் ஏற்ற வேண்டும்?

family-deepam
- Advertisement -

நாம் இந்த பூமியில் வாழ்ந்து சென்றதற்கு அடையாளமாக எதை விட்டு செல்கின்றோம்? நாம் வாழ்ந்த காலத்திற்கு பின்பு, நம்மை பற்றி பேசுவதற்கு நம்முடைய சந்ததியினரை மட்டும்தானா! அல்லது நாம் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி, வரலாறு பேச வேண்டுமா? இந்த உலகத்தில் வாழ்ந்து இறந்த பின்பு, நம்முடைய உடல் இந்த பூமியை விட்டு மறைந்த பின்பும் கூட நாம் வாழ்ந்த வாழ்க்கையை இந்த ஊர் உலகம் பேசிக் கொண்டே இருக்க வேண்டும். நம்முடைய சந்ததியினர்களைப் பார்க்கும் போது!

Amman-deepam-1

சில ஊர்களில், சில குடும்பத்தைப் பார்த்தால் இப்படி சொல்லுவார்கள். குறிப்பாக கிராமப்புறங்களில்! இவர்களது அம்மா அப்பா, தாத்தா பாட்டி, கொள்ளுத் தாத்தா பாட்டி எல்லாம் கொடி கட்டி வாழ்ந்தவர்கள். இவர்களுடைய குடும்பம் மிகப் பெரிய குடும்பம். என்றவாறு அவர்கள் குடும்பத்தை பற்றிய பேச்சு அந்த ஊர் முழுக்க பேசப்படும். இவ்வாறாக நம்முடைய குடும்பமும் பெரியதாகத் தழைக்க வேண்டும். செல்வ செழிப்போடு வாழ்ந்து, ஊரில் பெயர் சொல்லும் அளவிற்கு வளரவேண்டும் என்றால் இறைவழிபாட்டை தினம்தோறும் நம்முடைய வீட்டில் எப்படி செய்ய வேண்டும்.

- Advertisement -

ஒரே வார்த்தையில் சொல்லப்போனால், வாழையடி வாழையாக நம் குடும்பம் தழைக்க வேண்டும். அதுவும் செல்வ செழிப்போடு நல்ல பேரோட தழைக்கவேண்டும். வாழை மரத்தில் இருக்கக்கூடிய ஒரு பொருள் கூட, பயன்பாட்டிற்கு உகந்ததல்ல, என்று சொல்லவே முடியாது. அந்த அளவிற்கு வாழை மரத்தின் எல்லா பொருட்களையும் நம்மால் பயன்படுத்த முடியும். இதேபோல் நம்முடைய குடும்பமும், குடும்பத்தில் உள்ளவர்களும், எல்லோருக்கும் எப்போதுமே பயன் படத்தக்க விதத்தில் தான் இருக்க வேண்டும்.

vazhaithandu-pattai

இப்படிப்பட்ட இந்த வாழை மரத்திலிருந்து எடுக்கக்கூடிய திரி தான் வாழைத்தண்டு திரி. இந்த திரியில் நம்முடைய வீட்டில் தீபம் ஏற்றுவது நம் குடும்பத்திற்கு மிகவும் நல்லது. குறிப்பாக நம்முடைய வீட்டில் வாங்கக் கூடிய வாழை தண்டிலிருந்து, உறிக்கப்படும் பட்டையிலிருந்து, நம் கையாலேயே நாரை எடுத்து, நாம் விளக்கு ஏற்றும் தீபத்தில் போட்டு, தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

வாழைத்தண்டு மட்டைகளை நன்றாக வெயிலில் உலர்த்திக் கொள்ளுங்கள். அதன் பின்பு காய்ந்த அந்த மட்டையிலிருந்து உரித்து எடுத்தால், சின்ன சின்னதாக நமக்கு திரிகள் கிடைக்கும். அதை நன்றாக காய வைத்து விட்டு, ஒரு டப்பாவில் போட்டு சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். நாம் விளக்கேற்றும் எந்த திரியாக இருந்தாலும், பரவாயில்லை. அதனோடு இந்த வாழை தண்டிலிருந்து நாம் எடுத்த ஒரு திரையையும் சேர்த்து, திரித்து நம் வீட்டில் உள்ள விளக்கில் நெய் ஊற்றி, இந்த திரியின் மூலம் தீபம் ஏற்றினால் நம்முடைய குடும்பம் கொடி கட்டி வாழும், வாழை மரம் போல வளரும் என்பதில் சந்தேகமே கிடையாது. வாரத்தில் ஒரு முறையாவது, இந்த தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து ஒன்றாக, குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். குடும்பம் செழிப்பாக வளர வேண்டும் என்று!

vazhaithandu-pattai1

நம்முடைய சந்ததியினர், நாம் சொன்ன பேச்சைக் கேட்டு நல்லபடியாக வளர்ந்து, வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். ‘இந்த குடும்பம் என்ன பாவம் செய்ததோ, கடைசிவரை உருப்படாமலேயே போய்விட்டது.’ என்ற சூழ்நிலை இருந்தால் கூட, அந்த சூழ்நிலையை மாற்றி, அந்தக் குடும்பத்தில் உள்ளவர்களை நல்வழியில் நடத்திச் செல்லக்கூடிய சக்தியும் இந்த தீப வழிபாட்டிற்கு உண்டு. உங்கள் குடும்பத்தைப் பற்றி இந்த உலகம் நிச்சயம் தவறாக பேசாது.

- Advertisement -

family

உங்களுடைய குடும்பமும் உங்களுடைய சந்ததியினரும் இந்த பூமியில் கொடிகட்டி வாழவேண்டும் என்று நினைத்தால், நீங்களும் உங்களுடைய வீட்டில் இந்த தீபம் ஏற்றுவதை வழக்கத்திற்கு கொண்டு வாருங்கள். நிச்சயம் இந்த தீபமேற்றி தொடங்கிய குறிப்பிட்ட சில நாட்களுக்குள், உங்கள் வீட்டில் நல்ல முன்னேற்றம் அடைவதை உங்களால் உணர முடியும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
புதிய வீட்டிற்கு குடியேறுபவர்கள் இந்த 1 பொருளை கொண்டு சென்றால் கோடீஸ்வரர் ஆவது உறுதி தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -