இந்த வெல்லம் போல உங்களுடைய வாழ்க்கையும் எப்போதும் தித்திப்பாக இருக்க வேண்டுமா? விளக்கு ஏற்றும் போது இதை மட்டும் செய்யுங்கள் போதும்.

vellam
- Advertisement -

எல்லோருக்கும் வாழ்க்கை இந்த வெல்லம் போல இனிப்பாகவே இருந்து விட்டால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும். இப்படி நினைத்துப் பார்க்கும்போதே எவ்வளவு மனதில் நிம்மதி பிறக்கிறது. வெல்லம் என்று சொன்னாலே நம்முடைய மனதில் மகிழ்ச்சி வர காரணம் அதில் இருக்கும் இனிப்பு சுவை. அந்த இனிப்பு சுவை நிறைந்த வெல்லம் போல ஒவ்வொருவர் வாழ்க்கையும் தினம் தினம் இனிமையாக இருக்க இந்த சின்ன பரிகாரத்தை செய்தாலே போதும். வாழ்வில் துன்பங்கள் வரும். எதிர்ப்புகள் வரும். கஷ்டங்கள் வரும். கோபத்தாகங்கள் வரும். இருந்தாலும், அதில் ஒரு இனிமையான சந்தோஷம் இருக்கத்தானே வேண்டும். அதற்குத்தான் இந்த பரிகாரம்.

இந்த பரிகாரத்தை உங்கள் சௌகரியம் போல காலை அல்லது மாலை எப்போது வேண்டும் என்றாலும் செய்யலாம். உங்களுடைய வீட்டில் நீங்கள் எப்போது விளக்கு ஏற்றினாலும் சரி, ஒரு சிறிய தட்டில் ஒரே ஒரு அச்சு வெல்லத்தை வைத்து கொண்டு போய் அந்த விளக்குக்கு பக்கத்தில் வைத்துவிட்டு, அதாவது பூஜை அறையில் வைத்துவிட்டு, விளக்கு ஏற்றிவிட்டு உங்களுடைய குலதெய்வத்திடமும் இஷ்ட தெய்வத்திடமும் மற்ற தெய்வங்களிடமும் உங்களுடைய வாழ்க்கை எப்போதும் இந்த வெல்லம் போல இனிப்பாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வேண்டிக் கொள்ளும் போது ரொம்பவும் சந்தோஷமாக வேண்டுதல் வைக்க வேண்டும். உங்களுக்கு இருக்கும் கஷ்ட நஷ்டங்களை எல்லாம் தூர தூக்கி போட்டுவிட்டு, இந்த வெல்லமும் உங்கள் வாழ்க்கையும் ஒன்று. வெல்லம் தித்திப்பது போல நம் வாழ்க்கையும் தித்திக்கிறது என்ற மன நிறைவோடு இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். இரண்டு நிமிடம் நீங்கள் ஏற்றி வைத்த தீபத்தையும் இந்த வெல்லத்தையும் பார்த்து இறைவனை மகிழ்ச்சியாக கும்பிடுங்கள்.

ஒரு ஐந்தில் இருந்து பத்து நிமிடம் வெல்லம் பூஜை அறையிலேயே இருக்கட்டும். அப்படி இல்லை என்றால் தீபம் எரிந்து முடியும் வரை கூட வெல்லம் பூஜை அறையில் இருக்கலாம். நெய்வேதியம் செய்த வெல்லத்தை எடுத்து வீட்டில் இருப்பவர்கள் பிரசாதமாக சாப்பிடலாம். உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு வெல்லத்தை உடைத்து கொடுத்தாலே சாப்பிடுவிடுவாங்க. ஆனால் தினமும் இப்படி கொடுக்க முடியாது அல்லவா.

- Advertisement -

இந்த வெல்லத்தை ஒரு டப்பாவில் போட்டு வைத்து கூட ஒரு நாள் பாயாசம் செய்து சாப்பிடலாம். அப்படி இல்லை என்றால் வீட்டில் வேர்க்கடலை உருண்டை, எள்ளுருண்டை போன்ற பலகாரங்கள் செய்யவும் இந்த வெல்லத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது நிவேதனமாக வைத்த வெல்லத்தை பலகாரமாக செய்தும் சாப்பிடலாம்.

தினமும் வீட்டில் விளக்கு ஏற்றும்போது ஒரே ஒரு அச்சு வெல்லத்தை இறைவனுக்கு நிவேதனமாக வைத்து வேண்டிக் கொண்டால் உங்கள் வாழ்வு இனிப்பாக மாறும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. சில பேரால் தினமும் இந்த வழிபாட்டை மேற்கொள்ள முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. வாரம் தோறும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை மட்டுமாவது இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள் உங்களுடைய குடும்பத்தில் சந்தோஷம் பெருகும்.

இப்படி நிவேதனமாக வைத்த ஓரிரு வெல்லத்தைக் கொண்டு போய் மரத்தடியில் எறும்புகளுக்கு சாப்பிட கூட வைக்கலாம். அது இன்னும் இன்னும் நல்ல பலனை கொடுக்கும். உங்கள் வீட்டின் நிலை வாசலுக்கு வெளியில் அல்லது தோட்டத்தில் எறும்புகள் இருக்கிறது என்றால் அந்த இடத்திலும் இந்த வெல்லத்தை கொண்டு போய் வைத்தால் அந்த வாயில்லாத ஜீவன்கள் அதை சாப்பிட்டு பசியாறும். உங்களை கோடி முறை வாழ்த்தும். பிறகு வாழ்வில் துன்பம் எப்படி வரும். இன்பம் மட்டுமே எல்லோர் வாழ்க்கையில் இருக்க வேண்டும் என்ற வேண்டுதலை அந்த இறைவனிடம் வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -