வாழ்க்கையில் எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்கும் என்று சொல்ல முடியாது. சில சமயம் வாழ்க்கையில் முன்னேற்றம் அதிவிரைவாக இருக்கும். சில நேரம் வாழ்க்கை நிறைய அனுபவ பாடங்களை கற்றுக் கொடுக்கும். சில நேரம் வாழ்க்கை திடீரென்று பின்னோக்கி தள்ளப்படும். திடீரென்று உடல் சோர்வு வரும், மனம் சோர்ந்து போகும், வீட்டில் இருள் சூழ்ந்தது போல ஒரு உணர்வு தோன்றும். வேலை எதுவுமே ஒழுங்காக நடக்காது.
இப்படி ஒரு சூழ்நிலை வரும்போது, நம்முடைய ஆரா ரொம்பவும் சோர்வடைந்து விடும். அப்போது தானாக நெகட்டிவ் எனர்ஜி நம்மை சுற்றி வளைத்து விடும். இதிலிருந்து சுலபமாக விடுபட வேண்டும். நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்றால், என்ன செய்வது. நெகட்டிவ் எனர்ஜியை, நெகட்டிவ் எண்ணங்களை விரட்டி அடிக்க செய்ய கூடிய சூப்பரான ஒரு பரிகாரம் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் உங்களுக்காக.
நெகட்டிவ் எனர்ஜி விலக
அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து, அதில் நல்ல தண்ணீரை 1 டம்ளர் ஊற்றி விடுங்கள். அந்த தண்ணீர் சூடானதும் அதில் பட்டை 3 துண்டு, அன்னாசி பூ 1, மிளகு 5 லிருந்து 7 போட்டு, அந்த தண்ணீரை நன்றாக கொதிக்க விடுங்கள். இந்த தண்ணீர் கொதிக்கும் போதே இதிலிருந்து ஒரு நல்ல வாசம் வெளிவரும். அது அப்படியே வீடு முழுவதும் பரவட்டும்.
தண்ணீர் 10 நிமிடங்கள் நன்றாக கொதித்ததும், அந்த தண்ணீரை வடிகட்டி ஒரு வாட்டர் கேனில் கூட ஊற்றி, மூடி வைத்துக் கொள்ளலாம். இந்த தண்ணீர் ஒரு மாதம் வரை கெட்டுப் போகாது. பிரிட்ஜில் வைத்து கூட பரிகாரத்திற்கு பயன்படுத்தலாம்.
வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் வீட்டை சுத்தம் செய்துவிட்டு, பூஜை அறையில் விளக்கு ஏற்றி மணக்க மணக்க சாம்பிராணி தூபம் போட்டு, இந்த தண்ணீரை வீட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் தெளித்து விட வேண்டும். இந்த தண்ணீரை உங்கள் தலைமீதும் தெளித்துக் கொள்ளலாம். குளிக்கும் தண்ணீரோடு இந்த தண்ணீரை கலந்து குளித்தாலும் நல்லது.
உங்கள் வீடு கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்தியிடம் இருந்து, இருளில் இருந்து விலகும். நீங்களும் உங்கள் ஆராவை புதுப்பித்துக் கொண்டே இருக்கலாம். தினம் தினம் இந்த தண்ணீரை வாசல் தெளிக்கும் தண்ணீரோடு கலந்து வாசல் தெளித்து கோலம் போடுங்கள். வீட்டிற்குள் லட்சுமி கடாட்சம் நுழையும். வீட்டுக்குள் எந்த ஒரு கெட்ட சக்தியும் நுழையாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் முன்னேற்றத்தால் ஏற்படும் கண் திருஷ்டி கூட விலகும். வியாபாரம் செய்யும் இடத்தில், இந்த தீர்த்தத்தை தெளித்து விடலாம். நெகட்டிவ் எனர்ஜியிலிருந்து விடுபட இது ஒரு சக்தி வாய்ந்த பரிகாரம், சுலபமான பரிகாரம். நம்பிக்கை இருந்தால் இதை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.
இதையும் படிக்கலாமே: சொத்து வாங்க விற்க செய்ய வேண்டிய பரிகாரம்
உங்களுடைய வாழ்க்கையில் எப்போது நீங்கள் ரொம்பவும் சோர்வாக இருக்கிறீர்களோ எப்போது உங்களுடைய சுறுசுறுப்பு குறைகிறது அப்போதெல்லாம் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்து கொள்ளலாம் தவறொன்றும் கிடையாது. விதியின் பயனால் கெட்ட நேரம் வரும்போது, வாழ்க்கை பின்னோக்கி தள்ளப்படும் போது, இந்த பரிகாரம் உங்களை அதிலிருந்து மீட்டுக் கொண்டு வரும்.